பேச்சு:ராதிகா சிற்சபையீசன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிற்சபைஈசன் என்பதைவிட சிற்சபையீசன் என்பது புணர்ச்சிவிதிகளின்படி சரியானதாகப் படுகிறது. --மணியன் 04:57, 8 மே 2011 (UTC)[பதிலளி]

பல இணையத்தளங்களில் சிற்சபேசன் என்றே எழுதப்படுகிறார். ஆங்கில உச்சரிப்பு வேறுபடலாம். அப்படியே எழுத வேண்டும் என்றால் மணியன் குறிப்பிட்டது போல சிற்சபையீசன் எனவே எழுதப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 05:03, 8 மே 2011 (UTC)[பதிலளி]
ஆம், சிற்சபையீசன் என்றோ சிற்சபேசன் என்றோ எழுதலாம். அத்தோடு, இராதிகா என்று எழுதுவதே தமிழ் வழக்கு. நல்ல தமிழுணர்வுள்ள இராதிகாவுக்கு மடலனுப்பித் தெரிவிக்கலாம். -- சுந்தர் \பேச்சு 03:48, 12 மே 2011 (UTC)[பதிலளி]


இராதிகா சிற்சபை ஈசன் அல்லது இராதிகா சிற்சபையீசன் என்பனவே இந்த பக்கத்திற்கு சரியான தலைப்பாக இருக்க முடியும்.ஆனால் சில தொகுப்பாளர்கள் என் இலக்கணப்பிழையுடன் இந்த பக்கத்தை வைத்து இருப்பதில் முனைப்பு காட்டுகின்றனர்?(Kotravan 05:59, 3 செப்டெம்பர் 2011 (UTC))[பதிலளி]