பேச்சு:யக் பெறய

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கை பாரம்பரியங்கள் என்று ஒரு பகுப்பை உருவாக்கலாமே. தொடர்ந்தும் சிறு கட்டுரைகள் எழுதும் எண்ணமுண்டு--P.M.Puniyameen 12:01, 25 சனவரி 2011 (UTC)[பதிலளி]

இதனை இலங்கையின் இசைக்கருவிகள் என்ற உப-பகுப்புக்குள் சேர்க்கலாமா?. இப்பகுப்பை பகுப்பு:இலங்கையின் கலாச்சாரம் என்ற பகுப்புக்குள் சேர்க்கலாமா?--Kanags \உரையாடுக 12:20, 25 சனவரி 2011 (UTC)[பதிலளி]

இலங்கையின் கலாசாரத்தினுள் இலங்கை பாரம்பரியங்கள் பகுப்பை சேர்க்கலாம் கலாசாரம் விரிவான பொருளைத் தரும், பாரம்பரியங்கள் ஒரு குறுகிய அமைப்புக்குரியன.--P.M.Puniyameen 12:51, 25 சனவரி 2011 (UTC)[பதிலளி]

யக் பெறய என்பது தமிழில் பேய் பறை எனப்படும். சிங்களச் சொற்களை அப்படியே ஒலிப்பெயர்ப்பு செய்யாமல், அதன் பொருள் படும்படி எழுதினால் சிறப்பாக இருக்கும். --HK Arun 17:09, 25 சனவரி 2011 (UTC)[பதிலளி]

இவ்வகை மேளம் சிங்களவரிடையே மட்டுமே சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அதனை சிங்களப் பெயர் கொண்டு எழுதுவதில் தவறில்லை. தப்லா, சித்தார்.... போன்று.--Kanags \உரையாடுக 21:52, 25 சனவரி 2011 (UTC)[பதிலளி]

இவ்வாறான ஆக்கங்களிற்கு புன்னியாமீன் இட்டிருக்கும் "சிங்களவர் கலைகள்" "சிங்களவர் பண்பாடு" போன்ற பகுப்புகளே பொருத்தமானதும் சரியானதும் ஆகும். ஏனெனில் இலங்கை பல்லினத்தவர் வாழும் நாடு. அவர்களிடையே வேறுபட்ட பண்பாடு, வேறுபட்ட கலைகள் உள்ளன. அதேவேளை இலங்கையில் வாழும் ஏனைய இனத்தினரைப் போன்றே சிங்களவரும் (பெரும்பான்மை என்றாலும்) ஒரு இனத்தினர் மட்டும்தான். அப்படியிருக்கையில் சிங்களவர்களின் பாரம்பரியங்களை, "இலங்கை பாரம்பரியங்கள்" என்று பகுப்பிடல் (சிங்கள மேலதிக்கச் சிந்தனையை பிரதிப்பலிப்பது போன்று) பொருத்தமற்றது. --HK Arun 07:03, 26 சனவரி 2011 (UTC)[பதிலளி]

காசி ஆனந்தனின் பாடல் நினைவுக்கு வருகிறது:)--Kanags \உரையாடுக 07:07, 26 சனவரி 2011 (UTC)[பதிலளி]

காசி ஆனந்தனின் பாடல்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனவே! எந்த பாடல் என்று கூறினால் தான், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதைப் புரிந்துக்கொள்ளலாம். :) --HK Arun 07:22, 26 சனவரி 2011 (UTC)[பதிலளி]

சரி அதை விடுங்கள் அருண். புன்னியாமீனின் கருத்தையும் அறிந்து இலங்கை பாரம்பரியங்கள் பகுப்பை நீக்கலாம். மேலும் சில கேள்விகள்: பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் அனைத்தும் ஒன்று தானா? பாரம்பரியம் தமிழ்ச்சொல்லா. மரபுவழி என்பது பாரம்பரியமா?--Kanags \உரையாடுக 07:57, 26 சனவரி 2011 (UTC)[பதிலளி]
அருண். இலங்கை பாரம்பரியங்கள் எனும் போது சிங்களவரின் பாரம்பரியங்கள் மட்டும் இடம் பெறப் பொவதில்லை அல்லவா?--P.M.Puniyameen 08:13, 26 சனவரி 2011 (UTC)[பதிலளி]

"சிங்களவர் பண்பாடு" என்ற பகுப்பே பொருத்தமுடையது என்பது என் கருத்து. பண்பாடு, கலாசாரம் பற்றிய கனக்ஸ் இன் கேள்வியும் முக்கியமானது.பண்பாடு என்பதற்கு பண்டை தொட்டுப் பேணப்படுகின்ற மரபுகள் எனவும் பண்படுத்தப்படுவதால் காலந்தோறும் மேம்பட்டு உறுதிபெற விளங்கும் வாழ்வியல் நடைமுறைகள் எனவும் வேறுபட்ட விளக்கங்கள் கூறப்படுகின்றன. இரண்டாவது விளக்கத்திலுள்ள பண்படுத்தப்படுதல் Culture எனும் சொல்லுடன் பொருந்துவது கருதி பண்பாடு தான் கலாசாரம் என விடாபிடியாக சிலர் வாதிடுவர். கருத்தியல்களுக்கு இரண்டு மொழிகளில் அப்படியே அச்சொட்டாகப் பொருந்தும் சொற்கள் அமைந்திருக்கும் என்பதை கட்டாயமானதாக நான் கருதவில்லை.ஆதலால்

பண்பாடு- பண்படுத்தப்படுவதால் காலந்தோறும் மேம்பட்டு உறுதிபெற விளங்கும் சிறப்பும் சீர்மையும் கொண்ட வாழ்வியல் நடைமுறைகள்.

கலாசாரம்- கலைகளும் ஆசாரங்களும் நாகரிகம்- வாழ்வியல் கோலங்களும் பழக்கவழக்கங்களும்

ஆடை, அணிகலன்-நாகரிகம்

விருந்தோம்பல், முதியோரை கனம் பண்ணுதல்-பண்பாடு

--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 08:33, 26 சனவரி 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:யக்_பெறய&oldid=676405" இலிருந்து மீள்விக்கப்பட்டது