பேச்சு:மோசன் மக்மால்பஃப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இப்பெயரைத் தமிழில் எழுதியுல்ளது படிக்க இயலாமல் இருக்கின்றது. தமிழ் விதிகள் பலவும் மீறுகின்றன. இவர் பெயரை Mohsen Makhmalbaf மஃகுசன் மக்குமல்பாஃபு என்று வேண்டுமானால் எழுதலாம். அல்லது மகிசன் மக்மல்பாப்பு என்றும் பெயரிடலாம் (இவற்றிலும் விதிமீறல்கள் உண்டு எனினும், அவை குறைவாக உள்ளன, படிக்கும்படியாக உள்லன). --செல்வா (பேச்சு) 14:22, 12 அக்டோபர் 2013 (UTC)

  • Mohsen என்பதை மோசன் என்று சொல்லலாம் என நினைக்கின்றேன்.
உச்சரிப்பின் வடிவிலேயே அதை எழுதினேன். எனக்கு இன்னும் சில விஷயங்கள் பிடிபடவில்லை. ஒரு பெயரை அதை எவ்வாறு உச்சரிக்க வேண்டுமோ அவ்வாறே உச்சரிப்பதுதானே சரியானது? பெயர்களைத் ரெம்பவும் தமிழ்ப்படுத்துவதனால் அதன் ஓசைக் குறைவு உண்டாவதை எப்படி நிவிர்த்தி செய்வது. உதாரணமாய், விஜயராஜ் எனும் பெயருடையவரை விசயராசு என்று உச்சரிப்பது தவறல்லவா? என்னைத் தெளிவுபடுத்துங்கள். இனிமேல் இத்தகைய பிழைகள் இல்லாமல் எழுத முயற்சி செய்கிறேன். நன்றி. ஆர்.பாலா (பேச்சு) 14:43, 12 அக்டோபர் 2013 (UTC)
முதலில் மூல மொழியில் எவ்வாறு ஒலிக்கின்றார்கள் என்று தெரிந்திருக்க வேன்டும், இரண்டாவது உள்வாங்கும் மொழியில் எப்படி ஒலித்தால் மூல ஒலிப்புக்கு ஓரளவுக்கு நெருக்கமாகவும், அதே நேரத்தில் உள்வாங்கும் மொழிகளின் விதிகளை மீறாமலும் இருக்கும் என்றும் பார்த்து எழுதுதல் வேண்டும். ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் வேற்று மொழிச்சொற்கள் பலவும் மிகவும் திரிபுடனேயே ஒலிக்கப்படும். இது தவறல்ல. என்பெயராகிய Selvakumar என்பதை ஆங்கிலேயர்களால் சரியாக ஒலிக்க முடியாது (எல்லா ஒலிகளும் இருந்தும்). தூத்துக்குடி, திருவனந்தபுரம் போன்ற ஊர்களின் பெயர்களை ஒலிக்க எல்லா ஒலியன்களும் ஆங்கிலத்தில் இருந்தபொழுதும் Tuticorin, Trivandrum என்று வழங்குவதற்குக் காரணம் இயல்பாய் அவர்கள் மொழியில் அப்படி எழுதினால்தான் மற்ற சொற்களோடு இயைந்து ஒலிக்க முடியும். ம்யூன்ஷன் (München, ஒலிப்பு ˈmʏnçən), க்யொல்ன் (Köln [kœln] என்பனவற்றை Munich (/ˈmjuːnɪk/, ம்யூனிக்(கு)) என்றும் கொலொன் ( /kəˈloʊn/) என்றும் ஆங்கிலேயர்கள் திரித்து ஒலிக்கின்றனர். Kiswahili (கிசுவாகிலிலி) என்னும் மொழியை ஆங்கிலேயர் Swahili என்றும் தமிழ் என்பதை Tamil, (டேஅமில்) என்றும் கூறுவதும் இப்படியான திரிபுகளே. இந்தி மொழியில் என் பெயரைச் சேல்வக்குமார் என்றுதான் எழுத இயலும், சப்பானிய மொழியில் செரபகுமா என்றே எழுதுகிறார்கள். இதெல்லாம் மொழிக்கு மொழி மாற்றி எழுதும்பொழுது நேரும் இயல்பான மாற்றங்கள். கனடாவில் சிலரால் பிரான்சிய மொழிச்சொற்களை மூல ஒலிப்புடன் (மூக்கொலி, தொண்டை ஒலிகளுடன்) ஒலிக்க இயலும் (ஆங்கிலத்தில் பேசும்பொழுதும்), ஆனால் எழுதுவதும் பெரும்பாலானோர் ஒலிப்பதும் திரிபுடன் ஆங்கில ஒலிப்புடன்தான் (பிரான்சிய ஒலிப்பு அன்று). விசயராசு என்று எழுதுவதுதான் தமிழ் முறை. இதற்குத் தெளிவான இலக்கணம் உண்டு. விஜயராஜ் என்றால் ஜ் என்று ஒரு சொல் முடியுமாறு ஒலிக்கவே முடியாது. ஜ்ஜு என்று (குறுகிய உகரத்துடன்) ஒலிக்கலாம், ஆனால் அது தமிழ் ஒலிப்பு இல்லை (ஏன் thooththukkudi என்று ஆங்கிலேயன் எழுதவதில்லை என்று எண்ணிப்பாருங்கள்). ஆனால் ராஜம் (பெண்) என்னும் பெயரைப் பலரும் ராசு என்றுதான் ஒலிக்கின்றார்கள். சிலர் ராஜம் என்று ஒலிக்கலாம், ஆனால் தமிழில் எழுதும்பொழுது இராசம் என்றும் எழுதுதல் முறை. தமிழில், மெய்யெழுத்தில் தொடங்கில் எழுதுதல் கூடாது, வல்லின மெய்யெழுத்தில் முடியுமாறு எழுதுதல் கூடாது, போன்று மிகச்சில எளிய விதிகளே உள்ளன. தமிழின் நீண்ட நெடிய வரலாற்றுக்கு உறுதுணையாக இந்த வலுவான ஒலிப்பு முறை விளங்கியிருக்க வேண்டும் என்று மார்கரெட்டு திராவிக்கு (Margaret Trawwick) போன்ற அறிஞர்கள் கருதுகின்றார்கள். தமிழின் ஒலிகள் அமைந்த முறை மிக நுணுக்கமானது (இடம் சார்ந்த ஒலிப்பு முறை). இது மற்ற இந்திய மொழிகளில் இருந்து வேறானது (மற்ற மொழிகளில் ஓரெழுத்துக்கு ஒரே ஒலிப்பு; தமிழில் அப்படி இல்லை). எனவே பிற ஒலிகளைத் தமிழில் நுழைப்பதில் பற்பல மெய்யான சிக்கல்கள் உள்ளன. அடித்தளமே அசையும் வாய்ப்புகள் உள்ளன. இவை விரிவாகப் பேசப்பட வேண்டியவை. கூடிய மட்டிலும் தமிழ் இலக்கணத்தைப் பின்பற்றி எழுத முயலலாம் என்பது இப்போதைக்குப் போதுமானது. --செல்வா (பேச்சு) 15:36, 12 அக்டோபர் 2013 (UTC)

👍 விருப்பம்--Anton·٠•●♥Talk♥●•٠· 15:42, 12 அக்டோபர் 2013 (UTC)

புரிந்து கொண்டேன். கிரந்த எழுத்துகள் ஓரளவுக்கு உச்சரிப்பை அதன் மூல உச்சரிப்புக்கு நெருக்கத்தில் கொண்டு செல்கின்றன. மேலும் தமிழில் பாடநூல்கள், பத்திரிகைகள் ஆகியவற்றில் சரளமாக ஜ, ஸ, ஹ, ஷ ஆகியன பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குழந்தைகளின் பெயர்கள் முதற்கொண்டு அனைத்திலும் இவ்வெழுத்துகள் காணப்படுகின்றன. இருந்தாலும் தமிழ் விக்கியின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு இனிமேல் இத்தகைய எழுத்துகளைத் தவிர்க்கிறேன். உங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி. ஆர்.பாலா (பேச்சு) 03:00, 13 அக்டோபர் 2013 (UTC)
புரிந்துகொண்டமைக்கு நன்றி ஆர். பாலா. தலைப்பை மோசன் மக்மால்பஃபு என்று மாற்றலாமா? --செல்வா (பேச்சு) 18:14, 16 அக்டோபர் 2013 (UTC)
Mohsen Makhmalbaf - மோசன் மக்மால்பஃப் என எழுதலாம்.--Kanags \உரையாடுக 03:06, 13 அக்டோபர் 2013 (UTC)
உச்சரிப்பு நெருக்கமாக மோசன் மக்மால்பஃப் இருப்பதால் மோசன் மக்மால்பஃப் என மாற்றியுள்ளேன். நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 02:59, 18 அக்டோபர் 2013 (UTC)
நீங்கள் அப்படி நினைத்தால் அப்படியே இருக்கட்டும். ஆனால் தமிழில் வ் என்று முடியும் சொற்களே சில என வரையறை செய்யப்பட்டுள்ளது. தமிழில் வ் எழுத்தில் முடியும் சொற்கள் நான்கு. அவை: அவ், இவ், உவ், தெவ் என்பன. (தொல்காப்பியம் மொழிமரபு நூற்பா 48). கற்றொலி வகரமாகக் கருதப்படும் F ஒலியில் துணை உயிரொலி இல்லாமல் நிறுத்தவே இயலாது. எனவேதான் மக்மால்பஃபு என்றேன். தமிழில் ஈற்றில் முடியக்கூடிய எழுத்துக்களில் சில எனக் கருதப்படும் ர், ல், ள் ஆகியவை வரும் சொற்களாகிய அவர், பால், தேள் முதலியவற்றைக் கூட அவரு, பாலு, தேளு என்று ஒலிப்பின் எளிமை கருதி குற்றியலுகரம் சேர்க்கின்றார்கள் பேச்சுவழக்கில். இதனாலேயே தமிழில் மெய்யாக ஸ், ஷ் ஃப், ஜ் முதலிய ஒலிகளிலெல்லாம் ஒரு சொல்லில் (தமிழில் ஒலிக்கக்கூடிய சொல்லில்) மெய்யாக முடியவே முடியாது (வல்லின ஒற்றுகளாகிய க்,ச்,ட்,த்,ப்,ற் ஆகியவையும் பிறவும் அடங்கும்). நான் ஏன் மக்மால்பஃபு என்று முடியுமாறு எழுதக் கூறினேன் என்பதை விளக்கவே இவற்றைக் கூறுகின்றேன். மீண்டும் தலைப்பை மாற்ற அன்று! --செல்வா (பேச்சு) 03:43, 18 அக்டோபர் 2013 (UTC)