பேச்சு:மூடு பனி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Sound mp3.png திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் மூடு பனி (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

செகதீசுவரன். கட்டுரை இரண்டு வரி தான் என்றாலும், தகவல் பெட்டி தரும் கூடுதல் தகவலை முன்னிட்டு இது போன்ற கட்டுரைகளை நீக்காமல் விடலாமே?--இரவி (பேச்சு) 12:01, 25 பெப்ரவரி 2014 (UTC)

தொடக்கத்தில் திரைக்கட்டுரைகளில் சில இரண்டு வரி கட்டுரைகளாக இருப்பதைக் கண்டு இவ்வாறு நீக்கல் கோரிக்கை வைத்தேன். ஆசிரியரோ, பிறரோ கூடுதல் உள்ளடக்கத்தினை இணைப்பர் என நினைத்தேன். பிறகு பகுப்பு மூலம் வரிசையாகப் பார்க்கும் பொழுது எண்ணற்றவை இவ்வாறே இருந்ததன. ஒரே நேரத்தில் விரிவாக்குவது சாத்தியமல்ல என்று எண்ணி இத்தகு வார்ப்புரு இடுதலை நிறுத்திவிட்டேன். முன்பு இட்டவைகளுக்கு வார்ப்புருவை நீக்கியிருக்க வேண்டும், காலம் இருக்கிறதே என விட்டுவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி. இக்கட்டுரைகளின் உள்ளடக்கங்களை எளிதில் விரிவாக்கலாம், சில கட்டுரைகளைக்கு விரிவாக்க முயலுகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:13, 25 பெப்ரவரி 2014 (UTC)
விளக்கத்துக்கு நன்றி, செகதீசுவரன். தமிழ் விக்கிப்பீடியாவின் தொடக்க காலத்தில் தமிழ் திரைப்படங்கள் குறித்து ஏறத்தாழ 2000 கட்டுரைகள் இது போல் உருவாக்கப்பட்டன. இவற்றை உருவாக்கிய நிரோசன் என்ற பயனர் இப்போது முனைப்பாக பங்களிப்பதில்லை. மற்ற எவரும் எண்ணற்ற கட்டுரைகளை உடனடியாக விரிவாக்குவர் என்று எதிர்பார்க்க இயலாது. ஒரு பயனர் என்ற முறையில் இக்கட்டுரைகள் எனக்குப் பயன் மிகுந்தவையே. தகவல் பெட்டியில் உள்ள தகவல் திரைப்படம் குறித்த பயனுள்ள தகவலைத் தருகிறது. எனவே, இத்தகைய கட்டுரைகளை நீக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். மற்ற பயனர்களுக்குப் பதில் அளிக்கும் போது, அவர்கள் பயனர் பக்கத்துக்கு ஒரு இணைப்பு தந்து விளித்தீர்கள் என்றால், அவர்கள் புகுபதியும் போது அறிவிப்பு கிடைக்கும். தற்போது நான் உங்களுக்கு விளிப்பு இட்டிருப்பது போல. நன்றி.--இரவி (பேச்சு) 06:08, 27 பெப்ரவரி 2014 (UTC)
👍 விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:07, 27 பெப்ரவரி 2014 (UTC)