உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:முன்னிற்கும் சுரப்பி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முன்னிற்கும் சுரப்பி என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இதன் தலைப்பை விந்துநீர்ப்பை அல்லது விந்துநீர்ச் சுரப்பி அல்லது வித்துப்பை என மாற்றலாம் என்று நினைக்கிறேன். ஆங்கிலப் பெயரை புராசுட்டேட் என்று பிறைக்குறிகளுக்குள் ஆங்கிலத்திலும் தமிழிலும் தரலாம். --செல்வா 01:45, 2 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

ஆம், அப்படி மாற்றுவதே நல்லது என்று எனக்கும் தோன்றுகின்றது.--கலை 06:31, 2 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
சஞ்சீவி சிவகுமார், நீங்கள் சொல்வது ஆங்கிலச்சொல்லின் நேரடியான் மொழிபெயர்ப்பு (அதிகம் பொருள் தரவில்லை). பாடப்புத்தகத்தில் இருப்பதால், கட்டாயம் குறிப்பிடவேண்டும்.--செல்வா 01:10, 3 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

விந்துப்பை என்ற பெயர் புரோஸ்டேட்டைக் குறிக்காது. seminal vesicle ஐ வேண்டுமானால் விந்துப்பை எனலாம். புரோஸ்டேட் சுரப்பி என்ற பெயரே என் தனிப்பட்ட தெரிவாக இருப்பினும் தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கு அது ஒவ்வாததாகையால் இப்போதைக்கு முன்னிற்கும் சுரப்பி என்ற பெயருக்கு கட்டுரையை நகர்த்துகிறேன். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 13:50, 28 ஏப்ரல் 2012 (UTC)

தமிழ் விக்சனரியிலும் தமிழ் வர்ச்சுவல் யுனிவர்சிடியின் மருத்துவக் கலைக் களஞ்சியத்திலும் சுக்கியன் என்ற இணைச்சொல் தரப்பட்டுள்ளது.--மணியன் (பேச்சு) 08:18, 25 சனவரி 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 12:05, 25 சனவரி 2015 (UTC)[பதிலளி]