பேச்சு:மிக்கைல் கலாசுனிக்கோவ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிக்கைல் அல்லது மிஃகைல் என்று முதல் பெயர் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். மிக்கைல் கலாழ்சுநிக்கோவ் என்றும் கூட எழுதலாம். உருசியப் பெயரில் உள்ளது шни என்னும் எழுத்துகளின் ஒலிப்பு ழ்ஜ்னி என்பது போல ஒலிக்கும் என நினைக்கிறேன். பயனர் கனகு துல்லியமாக அறிவார். --செல்வா 02:19, 28 பெப்ரவரி 2009 (UTC)

шни என்பது ஷ்னி என்பது போல் தான் ஒலிக்கும். ж என்ற எழுத்து ழ்ச என ஒலிக்கும். இங்கு மிக்கைல் கலாஷ்னிக்கோவ் (கிரந்தம் தவிர்க்க: மிக்கைல் கலாசுனிக்கோவ்) கூடுதலாகப் பொருந்துகிறது.--Kanags \பேச்சு 02:31, 28 பெப்ரவரி 2009 (UTC)
நன்றி கனகு.--செல்வா 03:13, 28 பெப்ரவரி 2009 (UTC)
பெயர் உச்சரிப்பு எனக்கு சரியாகத்தெரியவில்லை ரஷ்ய மொழிக் குறிப்புத் தெரிந்தவர்கள் அதன்படி மாற்றலாம் ஒரளவுக்கு அனைவருக்கும் எளிதாக இருக்கும் அளவுக்கு மாற்ற முயற்சித்தேன். இக்கட்டுரை எழுத முக்கியக் காரணம் 1997 ம் ஆண்டு 50 ம் ஆண்டு விழாவில் அவர் பேசியது பத்திரிகைகளில் வாசித்து அறிந்து கொண்டேன். அதை ஆங்கில கட்டுரையிலும் குறிப்பிட்டிருந்தார்கள். இக்கட்டுரையின் பலமே அவர் கூறிய அந்த வரிகளில் தான் உள்ளது என்பது என் தனிப்பட்டக் கருத்து. அதற்காக முழுவதையும் ஒரளவுக்கு தொகுக்கவேண்டியதாயிருந்த்து. உச்சரிப்புக்காக ஏதாவது ஒரு வடமொழி உச்சரிப்பு எழுத்துக்களை உள்ளிட்டு மாற்றிக்கொள்ளலாம். வடமொழி எழுத்து தவர்க்க முடியாத நேரங்களில் பயன்படுத்துவதில் தவறில்லை. தட்டச்சுகளில் அவை அனுமதிக்கப்பட்ட ஒன்றாகத்தான் உள்ளது பல தமிழ் புத்தகங்களிலும் தவிர்க்கமுடியாமல் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவை வடமொழி எழுத்துக்கள் இல்லை. தமிழில் பயன்படுத்துவதற்காக ஒலியை வைத்து ஏற்படுத்தப்பட்டவைதான். மிக்கைல் என்று எழுத நினைத்தேன் க் சேர்த்தால் கூடுதல் ஒலி தரும் என்பதால் தான் கைவிட்டுவிட்டேன். mikhail-kalash-nikov, மிகைல்-கலாஷ்-நிக்கோவ்-(கலாஷ்னிக்கோவ் இப்படியும் முயற்சித்தேன்) இப்படி பிரித்து உச்சரித்து பெயர் வைத்தேன். பகுதி பகுதியாக பிரித்து உச்சரித்துப் பார்த்தேன் இந்தளவுக்குத்தான் மாற்றமுடிந்தது. க் சேர்த்து விடுகிறேன். சு வராது என்று நினைக்கின்றேன்.--செல்வம் தமிழ் 06:05, 28 பெப்ரவரி 2009 (UTC)

கலாஷ்னிக்கோவ் அல்லது கலாசுனிக்கோவ் (முதன்மை) தான் சரியானது. கலாஷ்நிக்கோவ் என்று வராது.--Kanags \பேச்சு 07:52, 28 பெப்ரவரி 2009 (UTC)

செல்வம் தமிழ், கனகு கூறியவாறு மிக்கைல் கலாசுனிக்கோவ் என்று தலைப்பை இடலாம். மிக்கைல் கலாஷ்னிக்கோவ் என்ற்பதற்கும் வழிமாற்று இருக்கும் (அப்படித் தேடுபவர்களுக்கும் கிட்டும்). ஒலிப்பைச் சுட்ட தற்காலத்தில் பல வழிகள் உள்ளன. IPA (அனைத்துலக ஒலியெழுத்துகள்) மூலமாகவும், ஒலிக்கோப்பை சேர்ப்பது மூலமாகவும் சுட்ட இயலும். ஆனால் தமிழில் வழங்கும் பொழுது தமிழ் எழுத்துகளுடன் சிறு திரிபுகளுடன் எழுதலாம். அனுமன், புட்பம், சீனிவாசன், சகன்னாதன் என்பன அப்படி எழுதப்பட்டனவே. கிரந்த எழுத்துகளைக் கூடிய மட்டிலும் தவிர்க்கலாம் என்பது பலருடைய கருத்து. g, d, dh, b, f, sh, j முதலான எழுத்துகளுக்கும் பிற இந்திய ஒலியன்களுக்கும் என் பரிந்துரையை இங்கேயும், இங்கேயும் தந்துள்ளேன். பார்க்கவும். ஆனால் இவை இங்கு விக்கியில் ஏற்பு பெறவில்லை. தலைப்பை மிக்கைல் கலாசுனிக்கோவ் என்று மாற்றப் பரிந்துரைக்கிறேன். ஆங்கிலேயர்கள் Trivandrum, Tutucorin, Tinneveli என்றெல்லாம் அவர்கள் மொழிக்கு ஏற்றார்போல எழுதிவந்ததையும், இப்பொழுதும், யாழினி, ஞானசம்பந்தன், அழகப்பன், கண்ணன் என்னும் சொர்களை எப்படி எழுதுகிறார்கள் ஒலிக்கிறார்கள் என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள். மிக்கைல் கலாசுனிக்கோவ் என்று எழுதுவதால் பெரிய தவறொன்றும் இல்லை. எல்லாத் தமிழராலும் எளிதாக ஒலிக்க இயலும்.--செல்வா 15:03, 28 பெப்ரவரி 2009 (UTC)

மிக்கைல் கலாசுனிக்கோவ் எனத் தலைப்பிட்ட பின்னர் கட்டுரையின் ஆரம்பத்தில் அடைப்புக் குறிக்குள் மிக்கைல் கலாஷ்னிக்கோவ் என்பதனையும் குறிப்பிடக் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் IPA போன்றவயெல்லாம் வரப் பலகாலத்தின் முன்பிருந்தே தமிழில் IPA போன்றே கிரந்த எழுத்துக்கள் பயன்பட்டு வந்துள்ளன. எத்துணை சமசுகிருதச் செல்வாக்கு இருந்த காலங்களிலும் கிரந்த எழுத்துக்கள் தமிழ் நெடுங்கணக்கில் சேர்க்கப்பட்டதில்லை. ஆங்கிலத்தின் 26 எழுத்துக்களில் இல்லாத IPA குறியீடுகள் ஆங்கிலத்தில் சேர்க்கப்படாததை ஒத்தது இது எனலாமா? கோபி 15:39, 28 பெப்ரவரி 2009 (UTC)