பேச்சு:மா. மங்களம்மாள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாற்றங்களுக்கான காரணங்கள்[தொகு]

வணக்கம் Kanags ! இக் கட்டுரையில் 13 நவம்பர் 2023 அன்று நான் செய்த மாற்றங்களை நீங்கள் மீளமைத்தமைக்கான காரணங்களை அறியலாமா? MS2P (பேச்சு) 11:10, 15 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

நீங்கள் ஏன் அந்த மாற்றங்களைச் செய்தீர்கள்? தகவற்சட்டத்தில் பிறந்த தேதிக்கு வார்ப்புரு சேர்ப்பதுதான் முறை. இனம் இலங்கைத் தமிழர் (அதிகாரபூர்வமாக). வட மாகாணம் தேவையற்றது. தமிழில் சிலோன் என்று எந்தக்காலத்திலும் அழைக்கப்படவில்லை.--Kanags \உரையாடுக 11:21, 15 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]
பிறந்த தேதிக்கு வார்ப்புரு சேர்த்தால், அத் தேதிகள் இணைப்பு பெற்றுவிடுகின்றனவே? அதுவும் காலமானவர்கள் தொடர்பான கட்டுரைகளில் மட்டுமே இது நடக்கிறது. உரிய காரணங்கள் இல்லாமல் தேதிகளை இணைக்கக்கூடாது என்பதாக ஆங்கில விக்கிப்பீடியா விதிமுறைக் கையேட்டில் படித்துள்ளேன். அதுமட்டுமின்றி அந்த வார்ப்புரு, நாள்-மாதம்-ஆண்டு என்ற வடிவத்தை ஏற்பதில்லை.
அதிகாரபூர்வமாக 'இலங்கைத் தமிழர்' என்றிருந்தாலும் அதற்கு இணையாக விக்கிப்பீடியாவில் 'ஈழத்தமிழர்' என்ற சொல்லும் புழக்கத்தில் உள்ளதே?
பிறந்த, மறைந்த இடங்களைக் குறிப்பிடுகையில் ஊர், முதல் நிலை நிருவாகப் பிரிவு (மாகாணம்/ மாநிலம்), நாடு என்ற வரிசையானது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதானே?
1907-இல் வெளியான "உலக ரகசியமென்னும் பிரபஞ்ச வுற்பத்தி" போன்ற பல பழம்பெரும் நூல்களில் 'சிலோன்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் புத்தகங்கள் தேடுபொறியில் இதை நீங்கள் சரிபார்த்துக்கொள்ளலாம் ! MS2P (பேச்சு) 06:19, 17 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மா._மங்களம்மாள்&oldid=3829746" இலிருந்து மீள்விக்கப்பட்டது