உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மனதில் உறுதி வேண்டும் (1987 திரைப்படம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனதில் உறுதி வேண்டும் (1987 திரைப்படம்) என்னும் கட்டுரை திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

கண்ணின் மணியே கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன
நீரோட்டமா

பெண் முன்னேற்றம் எல்லாம்
வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா
அது ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா

கண்ணின் மணியே கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன
நீரோட்டமா

சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா
சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா

வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தும்
ஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும்
ஏனென்று கேட்கத்தான் இப்போதும் ஆளில்லை
சமநீதி சேர்க்கின்ற சட்டங்கள் ஏன் இல்லை
உலகமெல்லாம் விடிந்த பின்னும்
உங்களின் இரவுகள் விடியவில்லை

கண்ணின் மணியே கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

பெண் முன்னேற்றம் எல்லாம்
வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா
அது ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும் ஊமைகள்தானா

கண்ணின் மணியே கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன
நீரோட்டமா

பாய் விரிக்கும் பாவை என்ன காதல் பதுமைகளா
தினம் ஏவல் செய்ய ஆடவர்க்கு காதல் அடிமைகளா
பாய் விரிக்கும் பாவை என்ன காதல் பதுமைகளா
தினம் ஏவல் செய்ய ஆடவர்க்கு காதல் அடிமைகளா

பொன் அள்ளி வைத்தால்தான் பூமாலை தோளில் ஏறும்
இல்லாத ஏழையர்க்கெல்லாம் பொல்லாத தனிமைக் கோலம்
எரிகின்ற நேரத்தில் அணைக்கின்ற கையில்லை
சொல்கின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொய்யில்லை
கனவுகளில் மிதந்த படி கலங்குது மயங்குது பருவக்கொடி

கண்ணின் மணியே கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன
நீரோட்டமா

பெண் முன்னேற்றம் எல்லாம்
வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா
அது ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும் ஊமைகள்தானா

கண்ணின் மணியே கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன
நீரோட்டமா