பேச்சு:மனதில் உறுதி வேண்டும் (1987 திரைப்படம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் மனதில் உறுதி வேண்டும் (1987 திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

==Untitled==

கண்ணின் மணியே கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன
நீரோட்டமா

பெண் முன்னேற்றம் எல்லாம்
வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா
அது ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா

கண்ணின் மணியே கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன
நீரோட்டமா

சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா
சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா

வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தும்
ஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும்
ஏனென்று கேட்கத்தான் இப்போதும் ஆளில்லை
சமநீதி சேர்க்கின்ற சட்டங்கள் ஏன் இல்லை
உலகமெல்லாம் விடிந்த பின்னும்
உங்களின் இரவுகள் விடியவில்லை

கண்ணின் மணியே கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

பெண் முன்னேற்றம் எல்லாம்
வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா
அது ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும் ஊமைகள்தானா

கண்ணின் மணியே கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன
நீரோட்டமா

பாய் விரிக்கும் பாவை என்ன காதல் பதுமைகளா
தினம் ஏவல் செய்ய ஆடவர்க்கு காதல் அடிமைகளா
பாய் விரிக்கும் பாவை என்ன காதல் பதுமைகளா
தினம் ஏவல் செய்ய ஆடவர்க்கு காதல் அடிமைகளா

பொன் அள்ளி வைத்தால்தான் பூமாலை தோளில் ஏறும்
இல்லாத ஏழையர்க்கெல்லாம் பொல்லாத தனிமைக் கோலம்
எரிகின்ற நேரத்தில் அணைக்கின்ற கையில்லை
சொல்கின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொய்யில்லை
கனவுகளில் மிதந்த படி கலங்குது மயங்குது பருவக்கொடி

கண்ணின் மணியே கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன
நீரோட்டமா

பெண் முன்னேற்றம் எல்லாம்
வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா
அது ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும் ஊமைகள்தானா

கண்ணின் மணியே கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன
நீரோட்டமா