பேச்சு:புகழ்பெற்ற இயற்பியலாளர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பை புகழ்பெற்ற இயற்பியலாளர்கள் என மாற்றப் பரிந்துரைக்கிறேன்.--செல்வா 18:00, 2 ஜூலை 2009 (UTC)

ஆம், நானும் வழிமொழிகிறேன். எளிமையான நல்ல தமிழ்த் தலைப்பு. பாடமும் இயற்பியல் என்றே வழங்கப்படுகிறது. -- சுந்தர் \பேச்சு 18:02, 2 ஜூலை 2009 (UTC)
இதுப் பேர்தான் தணிப்பு. மற்றவர்கள் எழுதவேண்டும், நீங்கள் “எளிதாக்குகிரேன்” என உங்கள் விருப்பு/வெறுப்புகளை திணிக்க வேண்டும்--Ginger 18:07, 2 ஜூலை 2009 (UTC)
பெளதிகம் இயற்பியலாகி ஆண்டுகள் பல கடந்து விட்டன. பெளதீகவியலாளர்கள் தாம் இன்னும் இயற்பியலாளர்கள் ஆக விரும்பவில்லை போலும்! Ginger, பலப்பல தலைப்புகள் உள்ளன. தமிழுக்காக, தமிழனுக்காக எழுதுங்கள் எழுதுங்கள் எழுதிக்கொண்டே இருங்கள் --பரிதிமதி
தமிழ்நாட்டுப் பாடநூல்களின் தலைப்புப் பட்டியலைப் பார்க்கவும். இது 12 வகுப்புக்கானது--செல்வா 18:31, 2 ஜூலை 2009 (UTC)

பரிதிமதியே அரசு பள்ளியில் ஒரு இயற்பியல் ஆசிரியராக உள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டு அரசு பள்ளிகளில் இயற்பியல் என்றே கற்றுத் தருகிறார்கள். பௌதீகவியலாளர் என்றால் ஒரு தமிழ்நாட்டு மாணவனுக்கும் புரியாது--ரவி 18:32, 2 ஜூலை 2009 (UTC)

தலைப்பை மாற்றலாம் என்பதே என் கருத்து. நான் படித்தபொழுது இயற்பியல் தான்.--குறும்பன் 19:22, 2 ஜூலை 2009 (UTC)

இதுவும் தமிழக, இலங்கை வழக்கு வேறுபாடே என நினைக்கிறேன். கனகு, டெரன்சு விளக்கக்கூடும்.--சிவக்குமார் \பேச்சு 19:33, 2 ஜூலை 2009 (UTC)
பௌதிகம் என்ற சொல் குறித்து ஏற்கனவே விவாதித்து இயற்பியல் என்ற சொல்லே முன்னிறுத்த வேண்டும் என்று முடிவாகி விட்டது. எனவே பௌதிகம் என்றிருக்கும் அனைத்து இடங்களிலும் உரையாடல் எதுவும் இல்லாமலேயே இயற்பியலாக மாற்றி விடலாம். எவருக்கும் எவ்வித ஆட்சேபனையும் இல்லை.--Kanags \பேச்சு 21:23, 2 ஜூலை 2009 (UTC)
”எவருக்கும்” என்று சொல்லாதீர்கள், உங்களுக்கு என சொல்லுங்கள்--Ginger 21:45, 2 ஜூலை 2009 (UTC)