பேச்சு:பியார்னே இசுற்றூத்திரப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Bjarne Stroustrup என்னும் பெயரில் பியர்னே என்பது சிக்கல் இல்லாமல் சரியாகத் தமிழில் எழுதலாம். J என்பது உண்மையிலேயே இங்கு யகரம்தான் ஜகரம் அன்று. Stroustrup என்னும் சொல்லில் தமிழில் கூடாத மிகவும் கடினமான மெய்யெழுத்துக்கூட்டங்கள் உள்ளன. துறூத்திருப்பு என்பது சரியான தமிழ் ஒலிப்பாக இருக்கும். தமிழில் தலம் என்பது sthalam என்பதன் வடிவம் என்பது போல் முதல் சகரத்தை விட்டுவிட்டு துறூ என்றும், கடைசி பகுதியாகிய -strup என்பது ச்ட்ருப்(பு) என்பது போல உகர ஒலிப்பைக் கொள்ளும், எனவே -திருப்பு அல்லது -துருப்பு என்பது போல முடிய வேண்டும். எனவே பியர்னே துறூதிருப்பு என்று எழுதினால் சரியான தமிழ் ஒலிப்பாக இருக்கும். பிறர் கருத்தறிந்து மாற்றலாம்.--செல்வா (பேச்சு) 22:44, 14 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

இது பற்றி அறியேன். henrique henriques என்பதை என்றீக்கே என்றீக்கசு என்றீர்கள். மிகப் பொருத்தமாக இருந்தது. ஏற்றுக் கொண்டேன். இவர் பெயர் சிறிதும் தமிழ் வழக்கிற்கு ஏற்ற பெயராக இல்லை என்று இவ்வாறு மாற்றியுள்ளீர்கள். முன் பாதியை புரிந்து குள்ள முடிகிறது. அதுபோலவே பின் பாதி பெயரும் உண்மைப் பெயருடன் ஒத்து ஒலித்தும் அதே தமிழ் வழக்கிற்கு ஏற்ற படியும் எழுதினால் புரிந்து கொள்வேன். கண்டுபிடிக்கவும் படிக்கவும் எளிமையாயிருக்கும். கூடுதல் விளக்கம் தருக. நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:39, 15 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

துறூதிருப்பு அல்லது இசுற்றூத்திரப்பு Stroustrup இற்குப் பொருந்தவில்லை. Stroustrup (IPA: sdʁʌʊ̯ˀsdʁɔb) ஸ்த்ராஸ்த்ரோப் அல்லது இசுத்திராத்திரோப்பு என வரும்.--Kanags \உரையாடுக 07:09, 15 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]