பேச்சு:பாலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாலாறு ஆறு - பாலாறு மட்டும் போதும் என நினைக்கிறேன். --சிவக்குமார் \பேச்சு 07:44, 23 ஆகஸ்ட் 2009 (UTC)

ஆம் இதன் தலைப்பை பாலாறு என்று மாற்ற வேண்டும். --செல்வா 17:30, 24 ஆகஸ்ட் 2009 (UTC)

அனைத்து ஆறுகளுக்கும் நாம் ஆறு என்ற பின்னொட்டை சேர்த்ததால் நான் பாலாறு ஆறு என்று எழுதினேன். --குறும்பன் 19:38, 24 ஆகஸ்ட் 2009 (UTC)

பெயரை மாற்ற மறுப்பு ஏதும் இல்லை, இப்போது தான் பேரியாற்றை கவனித்தேன். :-) --குறும்பன் 20:01, 24 ஆகஸ்ட் 2009 (UTC)

தமிழ் எண்கள்[தொகு]

நாம் ஒரே சீராக எல்லா இடத்தீலும் 1, 2, 3.. என்னும் இந்து-அராபிய எண்களையே பயன்படுத்தலாம் என்பது என் கருத்து. இந்தி போன்ற பிற இந்திய மொழிகள் பலவற்றில் அவ்வவ் மொழி வழக்க எண்களைப் பயன்படுத்துவதை அறிவேன். ஆனால், வேதியியல் குறியீடுகள் போலவும், கணித அறிவியல் குறியீடுகள் போலவும், இந்து-அராபிய எழுத்துகளையும், பொதுவாகக் கருதி எடுத்தாள்வது நல்லது. தமிழ் எண்களில் எழுதி வந்தால் பழகிவிடும் என்பது உண்மையானாலும், இது தேவையா என எண்ணிப்பார்க்க வேண்டும். இந்து-அராபிய எண்கள் தமிழ் எழுத்தின் திரிபாகக் கூட நான் கேட்டு இருக்கின்றேன். இது உண்மை இல்லை என்றாலும், 1,2, 3 என்று எழுதுவதே நல்லதென்று நினைக்கிறேன். --செல்வா 21:41, 24 ஆகஸ்ட் 2009 (UTC)

உடன்படுகிறேன். Google Translator Toolkit பயன்படுத்துவதால் தமிழ் எண்கள் வந்து விடுகிறது. மொழிபெயர்ப்பு கட்டுரைகளுக்கு Google Translator Toolkit சிறந்தது. --குறும்பன் 15:43, 25 ஆகஸ்ட் 2009 (UTC)

கோலார்? நந்திமலை ?[தொகு]

நந்தி மலை சிக்கபள்பூர் மாவட்டத்திலுள்ளதாக அம்மலைக்கான கட்டுரையில் உள்ளது... ஆனால் இக்கட்டுரையிலும் ஆங்கில விக்கி கட்டுரையிலும் நந்திமலை கோலார் மாவட்டத்தில் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது..[இங்கு] பாலாற்றின் orgin Talagavara village in Kolar, 900 meters , 348 kms.என குறிப்பிடப்பட்டுள்ளது.. இதில் எது சரி என அறிந்தவர்கள் கூறவும்--shanmugam (பேச்சு) 13:10, 29 மார்ச் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பாலாறு&oldid=1074834" இருந்து மீள்விக்கப்பட்டது