பேச்சு:பாலாறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலாறு என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பெயர்[தொகு]

பாலாறு ஆறு - பாலாறு மட்டும் போதும் என நினைக்கிறேன். --சிவக்குமார் \பேச்சு 07:44, 23 ஆகஸ்ட் 2009 (UTC)

ஆம் இதன் தலைப்பை பாலாறு என்று மாற்ற வேண்டும். --செல்வா 17:30, 24 ஆகஸ்ட் 2009 (UTC)

அனைத்து ஆறுகளுக்கும் நாம் ஆறு என்ற பின்னொட்டை சேர்த்ததால் நான் பாலாறு ஆறு என்று எழுதினேன். --குறும்பன் 19:38, 24 ஆகஸ்ட் 2009 (UTC)

பெயரை மாற்ற மறுப்பு ஏதும் இல்லை, இப்போது தான் பேரியாற்றை கவனித்தேன். :-) --குறும்பன் 20:01, 24 ஆகஸ்ட் 2009 (UTC)

தமிழ் எண்கள்[தொகு]

நாம் ஒரே சீராக எல்லா இடத்தீலும் 1, 2, 3.. என்னும் இந்து-அராபிய எண்களையே பயன்படுத்தலாம் என்பது என் கருத்து. இந்தி போன்ற பிற இந்திய மொழிகள் பலவற்றில் அவ்வவ் மொழி வழக்க எண்களைப் பயன்படுத்துவதை அறிவேன். ஆனால், வேதியியல் குறியீடுகள் போலவும், கணித அறிவியல் குறியீடுகள் போலவும், இந்து-அராபிய எழுத்துகளையும், பொதுவாகக் கருதி எடுத்தாள்வது நல்லது. தமிழ் எண்களில் எழுதி வந்தால் பழகிவிடும் என்பது உண்மையானாலும், இது தேவையா என எண்ணிப்பார்க்க வேண்டும். இந்து-அராபிய எண்கள் தமிழ் எழுத்தின் திரிபாகக் கூட நான் கேட்டு இருக்கின்றேன். இது உண்மை இல்லை என்றாலும், 1,2, 3 என்று எழுதுவதே நல்லதென்று நினைக்கிறேன். --செல்வா 21:41, 24 ஆகஸ்ட் 2009 (UTC)

உடன்படுகிறேன். Google Translator Toolkit பயன்படுத்துவதால் தமிழ் எண்கள் வந்து விடுகிறது. மொழிபெயர்ப்பு கட்டுரைகளுக்கு Google Translator Toolkit சிறந்தது. --குறும்பன் 15:43, 25 ஆகஸ்ட் 2009 (UTC)

கோலார்? நந்திமலை ?[தொகு]

நந்தி மலை சிக்கபள்பூர் மாவட்டத்திலுள்ளதாக அம்மலைக்கான கட்டுரையில் உள்ளது... ஆனால் இக்கட்டுரையிலும் ஆங்கில விக்கி கட்டுரையிலும் நந்திமலை கோலார் மாவட்டத்தில் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது..[இங்கு] பாலாற்றின் orgin Talagavara village in Kolar, 900 meters , 348 kms.என குறிப்பிடப்பட்டுள்ளது.. இதில் எது சரி என அறிந்தவர்கள் கூறவும்--shanmugam (பேச்சு) 13:10, 29 மார்ச் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பாலாறு&oldid=3785324" இலிருந்து மீள்விக்கப்பட்டது