பேச்சு:பள்ளர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாற்றம்[தொகு]

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பட்டியலில் இருக்கும் இச்சமூகத்தினருக்கும் இவர்களுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டுள்ள சில சமுதாயத்தினருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் கொண்ட தகவல்கள் நீக்கப்பட்டு இந்த சமுதாயம் குறித்த பொதுவான தகவல்களை மட்டும் கொண்டு இக்கட்டுரை குறுங்கட்டுரையாக்கப்பட்டுள்ளது. இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது இந்த சமுதாயம் குறித்த முழுத்தகவல்கள் தெரிந்தவர்களோ சிறப்பான தகவல்களை இனி சேர்க்கும்படியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாதி குறித்த கட்டுரைகளில் சாதீய வழியிலான கருத்து வேறுபாடுகளை தவிர்த்து சாதி குறித்த நல்ல தகவல்களைச் சேர்த்தால் படிப்பதற்கும் அவர்கள் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கும் வசதியாக இருக்கும் என்பதால் நானே மாற்றம் செய்து விட்டேன்.மேலும் பல தகவல்களை இங்கு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம். -தேனி.எம்.சுப்பிரமணி பயனர்:Theni.M.Subramani

நீக்கலாம்[தொகு]

இக்கட்டுரையில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பட்டியலில் இருக்கும் இச்சமூகத்தினருக்கும் இவர்களுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டுள்ள சில சமுதாயத்தினருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமுதாயத்தினர் இந்த சமுதாயத்தின் வரலாறு, வரலாற்றுப்பூர்வமான சிறப்புகள் போன்றவற்றைத் தெரிவித்தால் அனைவரும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும். இருவேறு சமுதாயத்தினருக்கிடையேயான கருத்து வேறுபாடுகளை வலியுறுத்தும் விதமாக எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரையை நீக்கிவிடலாம் என்பதே எனது தனிப்பட்ட கருத்து. -தேனி.எம்.சுப்பிரமணி பயனர்:Theni.M.Subramani

இக்கட்டுரை கலைக்களஞ்சியத்தின் நோக்குக்கும் நடைக்கும் ஏற்றவாறு திருத்தி எழுதப்படவேண்டும். --டெரன்ஸ் \பேச்சு 11:53, 11 மார்ச் 2007 (UTC)

மூப்பன் என்பது கொங்குபகுதிவாழ் நாடார்களின் குடிபெயராகும். இதற்கு அநேக ஆவணங்கள் அவிநாசி,திருமுருகன் பூண்டி,பேரூர் கோயில்களில் கல்வெட்டுகளிலும் வாழும் சான்றாக கொங்கு நாடார்களாகிய சேர,சோழ,பாண்டியர்களின் வழிதோன்றல்கள் இருக்கும்பொழுது வேளாளர் என்று தங்களை அழைத்துகொள்ளுபவர்கள் எவ்வாறு மூப்பன் குடிபெயருக்கு உரிமைகோர இயலும்!?. 2401:4900:6342:8477:EDAC:C2AC:A78E:6AA8 15:39, 21 பெப்ரவரி 2023 (UTC)

தேவேந்திரகுல வேளாளர்[தொகு]

இவர்களை தேவேந்திரகுல வேளாளர் என்றும் அழைப்பர்.

அனைத்து பள்ளர்களும் தேவேந்திர குலத்தினரே அல்ல. இதில் ஏழு பிரிவினரை ஒன்றாக்கி தேவேந்திர குலமென்பதா???

ஆவினன் (பேச்சு) 17:19, 20 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

சாதியமும் தமிழனும்[தொகு]

சாதியம் எனும் வேறுப்பாடு தமிழரிடையே எவ்வாறு எவர் எப்படி தோற்றுவித்தனர் என்பவைத் தொடர்பான சரியான தகவல்கள் இல்லை. இருப்பினும் "சாதிய வேறுப்பாட்டை" தோற்றுவித்து அதனூடாக பயன்பெறுபவர்கள் பாப்பனர்களே என்பதன் அடிப்படையில், சாதிய வேறுப்பாட்டை தோற்றுவித்தவர்கள் பார்ப்பனர்களே என்பதை திடமாகக் கூறலாம். ஆம்! கோயில் குருக்களிடம் இருந்தே சாதியே வேறுப்பாடு தோற்றம் காட்டுகிறது. தொடத்தகாதவன் (தீட்டு) எனும் பதம் அவர்களிடம் இருந்தே தோன்றியது.

எனவே இச் சாதிய வேற்றுமையை தமிழரிடம் இருந்து அடியோடு கலைந்தெறியும் முயற்சிகளே இன்று தேவை. அதுவே தமிழரிடையே ஒருவரோடு ஒருவர் பகைமையை ஊட்டி அழிவிக்கும் பிளவுக்கும் வழிவகுப்பதை விடுத்து, நாம் தமிழர் எனும் ஒரு குடையின் கீழ் நிமிர வழிவகுக்கும்.

அதனை விடுத்து அவரவர் தம்தம் சாதிய உயர்வுகளை முன்வைக்கும் பதிவுகளும் செயல்திட்டங்களும் தமிழரிடையேயான பிரிவினைக் கருத்துக்களையே எடுத்துச்செல்லும்.

இருபத்தி ஓராம் நூற்றாண்டு[தொகு]

இருபத்தி ஓராம் நூற்றாண்டில் நாமும் இருப்பதாகக் கூறிக்கொண்டு, வளர்ந்து வரும் உலக ஒழுங்குகள், அறிவியல் வளர்ச்சிக்களையும் கண்முன்னே கண்டுக்கொண்டு, இன்னமும் நம் மூதாதையரிடம் இருந்து வழிவரும் ஊறிப்போன உதவாத சாதிய வேறுப்பாடுகளை, நாமும் நமது அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச்செல்வதா?

இக்கட்டுரையில் உள்ளது வரலாறு, சாதிய உயர்வு கிடையாது[தொகு]

இக்கட்டுரை பள்ளர் அல்லது மள்ளர் பற்றியது இதில் சாதி எவ்வாறு தோன்றியது என்பது பற்றி கூற வேண்டிய அவசியம் இல்லை.சாதி எவ்வாறு தோன்றியது என்று தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் சாதியின் தோற்றம் பற்றிய கட்டுரையில் தான் சென்று பார்க வேண்டும்.

நில வகைகள், உலக நாகரிகங்கள், நெல் கண்டுபிடிப்பு, வேந்தன்[தொகு]

நில வகைகள், உலக நாகரிகங்கள் பற்றிய தகவல்கள் இந்தக் கட்டுரையில் இடம் பெறத் தேவை இல்லை. அவற்றுக்குப் பிற கட்டுரைகள் உள்ளன. நெல்லை இவர், இவர்கள் தான் கண்டு பிடித்தார்கள் என்று கூற முடியாது. இதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. வேந்தன் என்ற சொல் பொதுச் சொல். அது ஒரு குழுவைத்தான் சுட்டியது என்று வாதிடுவதின் ஏரணத்தில் குறை. --Natkeeran 18:22, 13 மார்ச் 2011 (UTC)

செப்பு பட்டயங்கள் கல்வெட்டுகள் ஆதாரங்களாக கொடுக்கப்பட்ட நிலையில் அவற்றை சற்றும் பாராது முற்றாக புறம் தள்ளுவது வரலாற்றை சாதியாக பார்க்கும் குறுகிய கண்ணோட்டமாகும்.−முன்நிற்கும் கருத்து Chellappandi (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

விளக்கம்[தொகு]

1.நில வகைகள் பற்றி இக்கட்டுரையில் தகவல்கள் இடம் பெறக் காரணம் இச்சமூக மக்கள் விவசாயத்தை பூர்வீகத் தொழிலாக கொண்டவர்கள் எனவே இவர்களின் பண்டைய வரலாற்றைப் பற்றிய தகவல்களை கூறும் போது பண்டைய தமிழகத்தில் விவசாயம் நடைபெற்ற மருத நிலத்தை பற்றி கூறுவது மிகவும் அவசியமாகும் மற்றும் மருத நிலத்தைப் பற்றி கூறும் போது அன்று தமிழகத்தில் இருந்த நில வகைகளை பற்றிய சிறு தகவல் இடம்பெற்றதில் எந்த தவறும் இல்லை.

2.தமிழகத்தில் முதன்முதலில் ஆற்றோறங்களில் தான் மக்கள் விவசாயம் செய்தார்கள் என்பது எல்லோரும் அறிந்ததே, இதேப் போல் தான் உலகில் உள்ள மற்ற பகுதிகளிலும் விவசாயம் ஆற்றோறங்களில் தான் நடந்தது. இந்த ஆற்றங்கரை பகுதியில் தான் நாகரீகம் வளர்ந்தது என்று எல்லா அறிஞர்களும் கூறுவர்.எனவே இங்கே உலக நாகரீகங்கள் பற்றிய தகவல் வருவதில் எந்த தவறும் இல்லை.

3.நெல் பயிரை இவர்கள் தான் கண்டுபிடித்தார்கள் என்று கல்வெட்டுகளும், செப்பேடுகளும் கூறுகின்றன. அதுதான் உண்மை என்று யாராலும் கூற முடியாது ஏனெனில் நெல் பயிர் வரலாற்றுக் காலத்துக்கு முன்பே மனிதர்களால் கண்டுபிடிக்கபட்டது. ஆனால் நெல் விவசாயத்தை தமிழகத்தில் முதன்முதலில் தோற்றிவித்தவர்கள் இவர்கள் தான் என்பது அசைக்க முடியாத உண்மை. இதற்க்கு தமிழ் இலக்கியங்களும், பள்ளு நூல்களும், கல்வெட்டுகளும், பட்டயங்களும் ஆதாரங்களாகும் . மேலும் தமிழ் புலவர்கள் , அறிஞர்கள் , ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரின் கருத்துக்கள் வலு சேர்க்கின்றது.

4.வேந்தன் என்னும் பெயர் மருத நிலத்தின் மக்களாகிய மள்ளர்களின் கடவுளை குறிக்கும் மற்றும் முவேந்தர்களைக் குறிக்கும் வேறு யாரையும் அது குறிக்காது.Tamil1988 15:11, 15 ஏப்ரல் 2011 (UTC)

தவறான படம்[தொகு]

தேவநேயப் பாவாணரின் படம் இங்கு உள்ளது தவறு. அவர் கிருத்துவர், அவரின் பாட்டனார் தேவர் சாதியை சேர்ந்தவர். --குறும்பன் 20:37, 17 மார்ச் 2011 (UTC)

சரியானப் படம்[தொகு]

தேவநேயப் பாவணாரின் படம் இக்கட்டுரையில் இடம் பெற்றது சரியே. அவர் தேவேந்திரக் குல வேளாளர் சமுதாயத்தை சார்ந்தவர். ஆதாரத்திற்கு ஆங்கில விக்கிபீடியாவில் தேவநேயப் பாவணாரின் கட்டுரையை பார்கவும்.

அப்ப ஆ.விக்கியில் இருப்பது தவறு. பாவாணரின் தாத்தா முத்துசாமி தேவர் தஞ்சை நீடாமங்கலத்தை சார்ந்தவர். பார்க்க பாவாணரின் மொழியாராய்ச்சிக் கட்டுரைகள் என்னும் நூல். --குறும்பன் 20:16, 20 மார்ச் 2011 (UTC)
கட்டுரை தற்காலிகமாக அனானிகளுக்குப் பூட்டப்பட்டுள்ளது. இது போல மாற்று தகவல் இருக்கக் கூடிய விசயங்களை இங்கு சேர்க்கக் கூடாது. ஒரு அனானி விடாது மீண்டும் தேவநேயப் பாவாணரை இங்கு சேர்த்து வருகிறார். சந்தேகத்துக்கிடமின்றி உறுதியாகாமல் இப்படி இணைக்க இயலாது.--சோடாபாட்டில்உரையாடுக 06:44, 20 சூன் 2011 (UTC)--15.219.201.69 21:00, 19 சனவரி 2012 (UTC)--15.219.201.69 21:00, 19 சனவரி 2012 (UTC)[பதிலளி]

I don't know how to reply through this... not sure whether typing english is accepted. Okay, Devaneya Pavaanar is my grand mother's uncle (Sithappa)... I agree he is a Christian and you need to understand that Christianity has come to India only 200 to 300 years back. I strongly confirm that he belongs to Devendra Kula Vellalar :)

கேள்விக் குறி[தொகு]

இவ்வளவு ஆதாரங்கள் கொடுக்கப்பட்டு இருந்தும் ஆதாரங்கள் கொடுக்கப்படவில்லை என்று இங்கே கேள்விக் குறி இருப்பது வருதம் அளிப்பதாக உள்ளது. இருப்பினும் மேலும் ஆதாரங்கள் சேர்க்கப்படும்.Tamil1988 04:48, 2 ஏப்ரல் 2011 (UTC)

தேவயைற்ற சர்ச்சை[தொகு]

கண்டது தமிழாய்க் கொண்டது தமிழாய், விண்டது தமிழாய், விளக்குவது தமிழாய், தமிழுக்காக வாழ்ந்து, தமிழால் வாழ்ந்து, தமிழாகவே வாழ்ந்து மறைந்த எம் பாவணர் குறித்து இத்தகைய தேவையற்ற சர்ச்சை எழுந்திருப்பது வருந்தத்தக்கது. பாவணரே தனது நூல்களில் தனது பாட்டனார் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு இருக்கிறார். (ஆதாரம் - தமிழ்மண் பதிப்பக வெளியீடுகள்)

இது மட்டுமன்றி மறைமலையடிகள் வரலாற்று நூலில் அவர் சாதி தவறாய்க் குறிப்பிடப்பட்ட போதும் கூட அவர் மறுத்து இருக்கிறார். (ஆதாரம்:- சைவசித்தாந்தக் கழகம் ஆட்சியாளர் வ.சுப்பையா பிள்ளை அவர்களுக்குப் பாவாணர் 02.11.1960 ல் எழுதிய கடிதம் --> நான் சங்கர நயினார் கோயில் (முத்துச்சாமித் தேவர் மகன்) ஞான முத்தனுக்கும், பரிபூரணம் அம்மையாருக்கும் பத்தாம் மகவாகவும் நாலாம் மகனாகவும் 07.02.1902 அன்று வெள்ளி மாலை பிறந்தவன். நூல்: பாவாணர் கடிதங்கள் தொகுப்பு: இளங்குமரனார்.

பாவணர் கடைசி வரை தேவாலயம் சென்று வழிபட்டு கிறித்தவராய் வாழ்ந்து மறைந்தவர். ஆனால் அவர் சாதி சமய அடையாளங்களுக்குள் தன்னைக் காட்டிக் கொண்டதில்லை. பாவாணர் ஒட்டு மொத்த தமிழினத்தின் அடையாளம் அவரை ஒரு வட்டத்திற்குள் அடைக்க நினைப்பது நன்றன்று. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 07:33, 23 சூன் 2011 (UTC)[பதிலளி]

அனைத்து பட்டியலிலும் பள்ளர்[தொகு]

பள்ளர் எனும் மள்ளர் இனத்தினர் தாழ்த்தப்பட்ட பிரிவில் மட்டும் உள்ளதாக தவறாக உள்ளது. ஆனால் பள்ளர் எனும் மள்ளர்கள் அனைத்து பட்டியலிலும் உள்ளனர். 1. குடும்பன் SC பட்டியல் (SC 35) 2. மூப்பன் BC பட்டியல் (BC 65) 3. காலாடி BC பட்டியல் (BC 35) 4. காலாடி DNC பட்டியல் (DNC 28) 5. மண்ணாடி MBC பட்டியல் (MBC 16) இவை போக, பள்ளன், தேவேந்திர குலத்தான், கடையன், பண்ணாடி, வாதிரியான் ஆகிய பிரிவுகள் SC பட்டியலில் உள்ளன. இதற்கிடையே பள்ளர்களின் வரலாற்றுப் பெயராக கல்வெட்டுகளும், இலக்கியங்களும் குறிக்கும் மள்ளர், மல்லர் என்ற பெயர்களும், நீர்க்கட்டி, நீர்க்காணிக்கர் (உண்மையான வெள்ளாளர்கள் இவர்களே), ஓடும்பிள்ளை, அக்கசாலை போன்ற பெயர்கள் தமிழ்நாட்டில் எந்தப் பிரிவிலும் இல்லை. இத்தனைக்கும் இப்பெயர்கள் இன்றைக்கும் பள்ளர்கள் இடையே பழக்கத்தில் இருப்பவை.

மேற்கோள்கள்[தொகு]

http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=844&rid=45%7C%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=817&rid=43%7C%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D
மேற்கோள்கள் இணைப்பில் இல்லை இதனை நீக்க பரிந்துரைக்கப்படுகின்றது--ஸ்ரீதர் (பேச்சு) 00:19, 23 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

மள்ளர் அல்லது பள்ளர்[தொகு]

சாதிகள் வாரியாகத் தமிழ்ச் சமூகம் பற்றிய இக்கட்டுரையில் நில வகைகள், உலக நாகரிகங்கள் பற்றிய தகவல்கள் இந்தக் கட்டுரையில் இடம் பெறத் தேவை இல்லை.
இலக்கியங்களில் காணப்படும் மள்ளர்,வேந்தன் மற்றும் தேவேந்திரன் போன்ற சொற்களின் பயன்பாடு இக்கட்டுரைக்கு பொருதமில்லாத புனைபெயர் ஆகவே கருதலாம்.
தேவேந்திரன் விக்சனரி
வேந்தன் விக்சனரி
பள்ளர் ஒரு தமிழ்ச் சாதியை குறிக்கும் சொல் விக்சனரி
மள்ளர் தொழிலை குறிக்கும் சொல் அனைவருக்கும் பொதுவானது விக்சனரி
இக்கட்டுரை கலைக்களஞ்சியத்தின் நோக்குக்கும் நடைக்கும் ஏற்றவாறு திருத்தி எழுதப்படவேண்டும்--ஸ்ரீதர் (பேச்சு) 05:37, 24 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

தேவையில்லாத தகவல்கள்[தொகு]

ஒரு சாதி பற்றி எழுதும்போது அது தோன்றியதாக கூறப்படும் தொன்மக் கதை அனைத்து சாதிக் கட்டுரைகளிலும் உண்டு. ஆனால் சங்க கால அரசர்களை எல்லாம் மள்ளர் எனக்கூற எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இங்கு கொடுத்திருக்கும் சங்க காலச் சான்றுகளில் மள்ளர் என்ற பிரிவினர் ஒரு அரசனின் ஊரில் வாழ்வதால் அவனை மள்ளர் எனக் கொள்ள இயலாது. அப்படி கொள்வோம் எனில் மூவேந்தர் நாட்டிலும் யவனர் வாழ்ந்திருந்தனர். அதனால் பாண்டியரை கிரேக்கத்தில் இருந்து வந்தவர் எனக் கூற முடியாது. ஆதாரமற்ற, தேவையற்ற தகவல்களையும் நீக்கமும், மலுப்பல் அடக்கங்களை தக்கதாகவும் மாற்றி இருகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:24, 23 ஏப்ரல் 2013 (UTC)

பெயர்க்காரணம் மற்றும் வேர்ச்சொல்லாய்வு[தொகு]

நான் கீழுள்ள பத்தியைச் சேர்க்கலாம் என உள்ளேன். இதைச் சேர்க்க முடியுமா?. ஆருக்காவது ஏதாவது மாற்றவேண்டுமென்றாலோ அல்லது ஏதாவது சேர்க்கவேண்டுமென்றாலோ பின்னூட்டமாகக் குறிப்பிடவும்.

பள்ளர் எனும் சொல் பள் எனும் வேர்ச்சொல்லிலிருந்து உருவான சொல் ஆகும். பள்ளி, பள்ளு, பள்ளம், பண்டு, பண்டை, பண்டம் முதலிய சொற்களும் இதே வேர்ச்சொல்லிலிருந்து உருவான சொற்களாகும்.

பள்>பண்

  1. பள்+அர்=பள்+ள்+அர்=பள்ளர்
  2. பள்+இ=பள்+ள்+இ=பள்ளி, முற்காலத்தில் கலைகளைக் கற்றுக்கொடுக்கும் இடம்(அமணர் இருக்கும் இடம்). பிற்காலத்தில் போர் கலையைக் கற்றுக்கொடுக்கும் இடத்தைக் குறிக்கப்பயன்படுத்தப்பட்டது.
  3. பள்+உ=பள்+ள்+உ=பள்ளு, 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  4. பள்+அம்=பள்+ள்+அம்=பள்ளம்
  5. பள்+டு=பண்டு
  6. பண்டு+ஐ=பண்டை
  7. பண்டு+அம்=பண்டம்

ஒப்புநோக்குக:

  1. ஆள்>ஆண், ஆள்+மை=ஆண்மை, ஆள்+டு=ஆண்டு
  2. பெள்>பெண், பெள்+மை=பெண்மை, பெள்+டு=பெண்டு
  3. உள்>உண், உள்+மை=உண்மை, உள்+டு=உண்டு

பண்டு என்ற சொல், பண்டு = பண்டைய = பாண்டிய = பாண்டியர் என்று திரிந்திருக்கலாம் என்பது பாவாணர் கூற்று.[1] ஆனால், இதற்கான அறிவியல் பூர்வமான சான்று இன்றுவரை நிறுவப்படாமல் உள்ளது. --ச.பிரபாகரன் (பேச்சு) 09:24, 6 மார்ச் 2014 (UTC)

பிரபாகரன், பாவாணர் மொழியியலாளர். அதனால் அவர் கருத்து சேர்க்கப்படலாம். ஆனால் நீங்கள் இது போல் வரலாற்றுச் சிக்கல் உள்ள சான்றுகளை முதலாம் நிலை மூலங்களில் பதிந்துவிட்டு அது தரமான இரண்டாம் நிலை மூலங்களால் சரிபார்க்கப்பட்டாலே இங்கு சேர்க்க முடியும்.

பெயர்க்காரணம் மற்றும் வேர்ச்சொல்லாய்வு இதன் படி உங்கள் கருத்துக்களை சேர்த்தால் அது சொந்த ஆய்வு கருத்துகளை கொண்டது என வார்ப்புரு இடப்பட்டுவிட்டு நீக்கப்படும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:57, 6 மார்ச் 2014 (UTC)

விளக்கத்திற்கு நன்றி தென்காசியாரே.--ச.பிரபாகரன் (பேச்சு) 12:10, 6 மார்ச் 2014 (UTC)

கட்டுக்கதைகளின் தொகுப்பு[தொகு]

தமிழகத்தின் வேளாண்குடிகள் தங்களை

புதுப்புது பெயர்களில் அறிவுறித்திக்கொள்வதும்,கட்டுக்கதைகளை நம்புவதும் வாடிக்கையாக உளளது..

தன சொந்த வரலிற்றை மட்டும் பயண்படுததாமல் பிறர் வரலாற்றை திருட முறபடுகிறார்கள்..

பண்டைய காலததில் போர்தொழில் புரிபவனுக்கும் வேளான தொமிழ் புரிபவருக்கும் வித்தியாசங்கள் உண்டு

நன்றி N.K.BALAMURUGAN (பேச்சு) 09:33, 24 பெப்ரவரி 2018 (UTC)

எழுத்திக்களை மாற்றி அமைப்பதினால் வரலாறு ஏறறுக்கொள்ளதூ

சரியான முறையன ஆதாரங்கள் இங்கு வைக்கப்படவில்லை..

மள்ளர் "ம" திரந்து "ப" ஆனது என்பதெல்லாம் சறு குழந்தைகள் கூட நம்பாத ஒன்று N.K.BALAMURUGAN (பேச்சு) 09:36, 24 பெப்ரவரி 2018 (UTC)

பதிவை நீக்கலாம் தவறன தகவல் திரட்டு[தொகு]

தமிழகத்தின் வேளாண்குடிகள் தங்களை

புதுப்புது பெயர்களில் அறிவுறித்திக்கொள்வதும்,கட்டுக்கதைகளை நம்புவதும் வாடிக்கையாக உளளது..

தன சொந்த வரலிற்றை மட்டும் பயண்படுததாமல் பிறர் வரலாற்றை திருட முறபடுகிறார்கள்..

பண்டைய காலததில் போர்தொழில் புரிபவனுக்கும் வேளான தொமிழ் புரிபவருக்கும் வித்தியாசங்கள் உண்டு N.K.BALAMURUGAN (பேச்சு) 09:37, 24 பெப்ரவரி 2018 (UTC)

  1. பாண்டியன் என்பது பண்டு என்னும் சொல்லினின்று திரிந்ததென்றும், பழைமையானவன் என்னும் பொருள் கொண்டதென்றும், சொல்வதுண்டு., தமிழ் வரலாறு, மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், பதிப்பாசிரியர், புலவர் அ.நக்கீரன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பள்ளர்&oldid=3680817" இலிருந்து மீள்விக்கப்பட்டது