பேச்சு:பலபடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png பலபடி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

செல்வா, கருவியக் காடிஎன்ற சொல்லில் கருவி என்ற அடி ஒலிப்பது போல் உள்ளதே. சரியானது தானா? --சஞ்சீவி சிவகுமார் 04:05, 31 மே 2011 (UTC)

கருக்காடி என்று சுருக்கமாகவே அழைக்கலாம். அமிலம் என்பது தமிழ் அல்ல. அடிப்படையான சொற்களுக்குக் கூடியமட்டிலும் நல்ல தமிழ்ச்சொற்கள் ஆள்தல் நல்லது. கரு+ இயம் + காடி = கருவியக்காடி ஆயிற்று. இயம் என்னும் சொல் அடிப்படை இயல்பு, தன்மையைக் காட்டும், முறைமையைச் சுட்டும். காந்தியம் என்பது போலவும், தொழிலிய, அற்வியக் கருத்துகள் என்பனவற்றில் வரும் இய(ம்) என்பது போன்றது. நீங்கள் "கருவி" என்று கொண்டாலும், உயிரின் முறையான இயக்கத்துக்குக் கருவியாக அமையும் காடி என்றும் பொருள் கொள்ளலாம் (மேலோட்டமான வேடிக்கைக்காகச் சொல்கின்றேன், பொருள் இப்படியும் பொருந்தும் எனினும்! :) ) --செல்வா 13:59, 31 மே 2011 (UTC)
மிக்கநன்றி செல்வா.--சஞ்சீவி சிவகுமார் 23:15, 31 மே 2011 (UTC)

பல்லுறுப்பி[தொகு]

Polymer என்றச் சொல்லுக்கு த.இ.பல்கலை கலைச்சொல் பேரகராதியில் பல்லுறுப்பி என்று பெயரிடப்பட்டுள்ளது ஆகையால் இந்தக் கட்டுரையை நான் நகர்த்த எண்ணுகிறேன். --இராஜ்குமார் 18:36, 13 செப்டெம்பர் 2011 (UTC)

பார்க்க: பேச்சு:பலபடி வேதியியல்.--Kanags \உரையாடுக 01:25, 12 சூன் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பலபடி&oldid=2303523" இருந்து மீள்விக்கப்பட்டது