பேச்சு:பலபடி வேதியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பல்படி வேதியியல் கட்டுரையில் பயன்படுத்தியிருக்கும் பலபடியாதல், பல்படி போன்ற வார்த்தைகள் தமிழ்நாடு அரசின் பாடநுால்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் தான் Kanags அவர்களே. பெயர்களை மொழிபெயர்க்கும் போது என்னால் முடிந்த வரை செய்திருக்கிறேன். ஸ் என்ற வடமொழி எழுத்தை எவ்வாறு எழுதுவது இசு என்றா? இது தொடர்பான உதவிகளுக்கு யாரை நாடலாம்? ஆங்கிலத்தில் Polymer Chemistry என்ற தலைப்பிலான கட்டுரையை மொழியாக்கம் செய்து தான் தற்போது எழுதிக்கொண்டிருக்கிறேன். தாங்கள் அளிக்கும் ஆலோசனைகளைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறேன். விக்சனரியிலும் கூட பலபடியாக்கல், பல்படி, பலபடி போன்ற வார்த்தைகள் தரப்பட்டுள்ளன. பல்படி என்பதற்குப் பதிலாக பலபடி என்று மாற்றலாமா? ஏனென்றால் தமிழக பள்ளி மாணவர்கள் பல்லுறுப்பிகள் என்ற வார்த்தையை விட பலபடி என்ற பல்படி என்ற வார்த்தைகளையே அதிகம் பயன்படுத்துகிறாா்கள். நீங்கள் சொல்லும் எத்தகைய ஆலோசனையையும் ஏற்கத் தயாராக உள்ளேன். நான் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் தான் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதி வருகிறேன். வேதியியல் பதங்களை என்னால் முடிந்த அளவும், தமிழ்நாட்டுப் பாடநுால்களில் உள்ள சொல்லாக்கத்தைப் பயன்படுத்தியும் எழுதி வருகிறேன். உதவ வேண்டுகிறேன்.--மகாலிங்கம் (பேச்சு) 11:56, 9 சூன் 2017 (UTC)Reply[பதில் அளி]

மகாலிங்கம், அப்படியே செய்யலாம். பல்படி, பலபடி இவற்றில் எதனைப் பயன்படுத்தலாம்? Polymer பற்றிய பல்லுறுப்பி கட்டுரைக்கு பல்படி எனத் தலைப்பிடலாமா? @கி.மூர்த்தி:--Kanags \உரையாடுக 12:17, 9 சூன் 2017 (UTC)Reply[பதில் அளி]

பலபடி வேதியியல் என்று தலைப்பிடலாம் என்பது எனது கருத்து. கி.மூர்த்தி அவர்களின் ஆலோசனைகளையும் வரவேற்கிறேன். கட்டுரையில் பல்படி என்ற வார்த்தைகளை பலபடி என்று மாற்றியுள்ளேன். தலைப்பினைத் தவிர. தங்களி்ன் வழிகாட்டுதல்களுக்கும், ஆலோசனைகளுக்கும் நன்றிகள்.--மகாலிங்கம் (பேச்சு) 12:30, 9 சூன் 2017 (UTC)Reply[பதில் அளி]

பலபடி வேதியியல் என்றே தலைப்பை மாற்றுவதை நான் வரவேற்கிறேன். அருங்கலைச்சொல் அகரமுதலியில் அவ்வாறுதான் உள்ளது. -இரா. செல்வராசு (பேச்சு) 02:22, 10 சூன் 2017 (UTC)Reply[பதில் அளி]
நல்லது அப்படியே மாற்றி விடலாம். பல்லுறுப்பி (polymer) கட்டுரையின் தலைப்பும் அவ்வாறே மாற்றலாமா? வெறுமனே பலபடி எனத் தலைப்பிடுவது சரியாகத் தெரியவில்லை. @செல்வா மற்றும் Rselvaraj:--Kanags \உரையாடுக 02:42, 10 சூன் 2017 (UTC)Reply[பதில் அளி]
செல்வா என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம். பல்லுறுப்பி என்று நான் அதிகம் பார்த்ததில்லை. ஏதோ உயிரியல் தொடர்பானது போல் ஒலிக்கிறது. பேச்சு:பல்லுறுப்பி பக்கத்திலும் இதனை உயிரியல் திட்டத்தில் சேர்த்து வார்ப்புரு இட்டிருக்கிறார்கள். பலபடி என்று தான் நான் மேற்சொன்ன அகரமுதலியில் இருக்கிறது. விக்கியில் இப்பெயரில் ஏற்கனவே ஒரு வழிமாற்றும் இருக்கிறது. பலமம், பன்மம் என்றும் ஒரு சில இடங்களில் பார்த்திருக்கிறேன். -இரா. செல்வராசு (பேச்சு) 03:44, 10 சூன் 2017 (UTC)Reply[பதில் அளி]
கணிதத்தில் polynomial என்பதை பல்லுறுப்பு எனக் கூறுகிறார்கள். இதனாலேயே கட்டுரையை நகர்த்தியவரும் அறியாமல் பல்லுறுப்பி என மாற்றியிருக்கலாமோ எனத் தோன்றுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பொதுவான பயன்பாட்டின் அடிப்படையில், பலபடி என மாற்றலாம்.--Kanags \உரையாடுக 04:24, 10 சூன் 2017 (UTC)Reply[பதில் அளி]
ஒப்புதலே. தொடர்புடைய பிற சொற்கள்: polymeric compound = பலபடிச் சேர்மம்; polymerization = பலபடியாக்கம்; polymerization reaction = பலபடியாக்க வினை (அ) மறுவினை; polymeric unit = பலபடி ஒக்கம் (அ) அலகு; polymerism = பலபடிச் சேர்க்கை. -இரா. செல்வராசு (பேச்சு) 05:08, 10 சூன் 2017 (UTC)Reply[பதில் அளி]

பலபடி வேதியியல் என்று தலைப்பை மாற்றி கட்டுரையில் உள்ள clean up வார்ப்புருவை நீக்க வேண்டுகிறேன். நன்றிகள்.--மகாலிங்கம் (பேச்சு) 09:55, 10 சூன் 2017 (UTC)Reply[பதில் அளி]

மகாலிங்கம், வரலாறு பகுதி திருத்த வேண்டி உள்ளது. அதனைத் திருத்திய பின்னர் வார்ப்புருவை நீக்கலாம்.--Kanags \உரையாடுக 10:03, 10 சூன் 2017 (UTC)Reply[பதில் அளி]

நன்றிகள் Kanags. முழுமையாக சரிசெய்யப்பட்ட பின் நீக்கினால் போதும். --மகாலிங்கம் (பேச்சு) 11:20, 10 சூன் 2017 (UTC)Reply[பதில் அளி]

  • A polymer (/ˈpɒlᵻmər/;[2][3] Greek poly-, "many" + -mer, "parts") is a large molecule, or macromolecule, composed of many repeated subunits. என விளக்குகின்றார்கள். ஒரே மாதிரியான பல துணையுறுப்புகள் அல்லது துணைப்பகுதிகள் கொண்ட பெருமூலக்கூறு. இங்கே நடந்த உரையாடலின் அடிப்படையில் பலபல என்பதைப் பற்பல என்று கூறுவது போல பலபடியாக்கம் என்பதைவிட பற்படியாக்கம் = polymerization (இது ஏதோ பற்பொடி போல ஒலிக்கின்றதே எனக்கவலைப் படவேண்டாம் :) என்பது பொருந்தும். polymeric compound என்பதைப் பற்படிச்சேர்மம் எனலாம். ஒரே வகையான வேதிய அடுக்கு மீண்டும் மீண்டும் இணைந்து வருவதால் படி என்னும் சொல் தேவை. பற்படி = polymer என்பது பொருந்தும் என்றே நினைக்கின்றேன். பல்லுறுப்பு என்பது ஒரே மாதிரியான உட்கூறுகளைக் கொண்டது என்னும் கருத்தைத் தெளிவாகக் காட்டாததால், பல்லுறுப்பி என்பது பொருத்தம் குறைந்ததாகக் கருதுகின்றேன். பற்படி என்பது ஒலிப்பதற்கும் எளிதானது. மூலக்கூறு என்பதை மூலகம் என்றும் சொல்லலாம். --செல்வா (பேச்சு) 11:24, 10 சூன் 2017 (UTC)Reply[பதில் அளி]

Kanags அவர்களே வரலாறு பகுதியிலும் பல்படி என்ற சொல்லாக்கத்தை பலபடி என்று மாற்றியாகி விட்டது. ஒரு முறை பார்த்து விட்டு clean up வார்ப்புரு நீக்கம் பற்றி மறுபரிசீலனை செய்யலாமே?--மகாலிங்கம் (பேச்சு) 15:36, 11 சூன் 2017 (UTC) Kanags இந்தக் கட்டுரையின் Clean up வார்ப்புரு நீக்கப்பட நான் என்ன செய்ய வேண்டும்? கட்டுரை எவ்வாறு மேம்படுத்தப்படலாம்? விவரம் தெரிவித்தால் நானே முயன்று பார்ப்பனே்.--மகாலிங்கம் (பேச்சு) 14:46, 13 சூன் 2017 (UTC)Reply[பதில் அளி]

மகாலிங்கம், cleanup வார்ப்புரு இருப்பதால் குறையொன்றுமில்லை. அது இன்னும் கவனிக்கப்படவேண்டிய கட்டுரை என்பது தான் பொருள். நான் பல திருத்தங்களைச் செய்து, இப்போது அந்த வார்ப்புருவை நீக்கியிருக்கிறேன். இன்னும்கூட ஏதேனும் திருத்தங்கள், மாற்றங்கள் வேண்டியிருப்பின் செய்யலாம். -இரா. செல்வராசு (பேச்சு) 01:37, 14 சூன் 2017 (UTC).Reply[பதில் அளி]

[[பயனர்:Rselvaraj| நன்றிகள். சரிசெய்யப்பட வேண்டும். என்பதற்காகவே கேட்டிருந்தேன். ஏனென்றால் தொடர்ந்து எழுதும் கட்டுரைகளில் தவிர்க்கப்பட வேண்டியவைகளை தெரிந்து கொள்ளலாம் என்பதற்காகத்தான். மற்றபடி வேறொன்றுமில்லை. --மகாலிங்கம் (பேச்சு) 01:42, 14 சூன் 2017 (UTC)Reply[பதில் அளி]