பேச்சு:பட்டாம்பூச்சி
இக்கட்டுரை, விக்கிபீடியா:சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கப்படக் கோரி நியமிக்கப்பட்டிருக்கிறது. இக்கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்களை இதன் நியமனத் துணைப்பக்கத்தில் பதியுங்கள். ஒரு சிறப்புக் கட்டுரை விக்கிபீடியாவின் சிறப்பிற்கு சான்றாய் அமைந்திருக்க வேண்டும். சிறப்புக் கட்டுரைக்கான தகுதிகளைப் பார்க்கவும். |
எளிய இனிய நடையில் வண்ணமயமான கட்டுரை. பாராட்டுக்கள் செல்வா. இது போன்ற கட்டுரைகள், சிறுவர்கள், மாணவர்கள், பொதுமக்களை விக்கிபீடியாவுக்கு வரத்தூண்டும்--ரவி 09:26, 11 அக்டோபர் 2006 (UTC)
அருமையான கட்டுரை. பொதுவாக தகவல் செறிவுள்ள கட்டுரைகளை எழுதும்போது எனக்கு ஒரு உலர்ந்த ஆங்கில எழுத்து நடையும் ஆங்கில விக்கியின் தாக்கமும் வந்துவிடுவதுண்டு. :( ஆனால், தமிழ் உரைநடையில் கலைக்களஞ்சியத்திற்கு முற்றிலும் பொருத்தமான தகவல்களை (உணர்வுப்பூர்வ மற்றும் இலக்கிய அணிகள் தவிர்த்து) எழுதியுள்ளது எனக்கு ஒரு முற்காட்டுதலாகும். பட்டாம்பூச்சியின் வாழ்வில் ஒரு பகுதி இன்னும் மீதமுள்ளது. அதையும் எழுதி முடித்ததும் சிறப்புக் கட்டுரையாக்கலாம். கூட்டுப் புழு படத்தைப் பார்த்ததும் சிறுவயதில் நான் புழுவிலிருந்து வளர்த்த பட்டாம்பூச்சிகள் நினைவிற்கு வருகின்றன. :) -- Sundar \பேச்சு 11:29, 11 அக்டோபர் 2006 (UTC)
பி.கு: செதிலா அல்லது செதிளா?
- ரவி, சுந்தர் உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி, இன்னும் பெரும்பாதி எழுத வேண்டியுள்ளது. பட்டாம்பூச்சிக்கு, விட்டில் பூச்சிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை பற்றியும், பட்டாம்பூச்சியின் உடற்க்கூறு, மோனார்க் பட்டாம்பூச்சியின் (அரசர் பட்டாம்பூச்சியின்) வியப்பூட்டும் 3200 கி.மீக்கும் மேலான வலசைச் செலவு முதலியன என நிறைய எழுத வேண்டும். இன்று நாளைக்குள் பெரும்பகுதி எழுதிவிடுவேன். சுந்தர், செதிள், செதில், செகிள் ஆகிய சொற்கள் யாவும் ஒரே பொருள் தருவன. செதிளைப்பற்றி விரிவாக எழுத நிறைய உள்ளது. அது தனிக் கட்டுரையாகும். மணமூட்டிகள் (மணம்பரப்பிகள்) (pheromone) பற்றியும் தனிக் கட்டுரை எழுத வேண்டும். நன்றி.--C.R.Selvakumar 12:07, 11 அக்டோபர் 2006 (UTC)செல்வா
- செல்வா, செறிவான அருமையான கட்டுரை. பாராட்டுக்கள்.--Kanags 13:05, 11 அக்டோபர் 2006 (UTC)
அருமையான கட்டுரைக்குப் பாராட்டுக்கள் செல்வா.தொடரட்டும் உங்கள் பணிகள்--கலாநிதி 16:35, 11 அக்டோபர் 2006 (UTC)
கனகு, கலாநிதி, என் நன்றிகள்.--C.R.Selvakumar 19:31, 11 அக்டோபர் 2006 (UTC)செல்வா
சிறு ஐயங்கள்
[தொகு]செல்வா, கோந்து தமிழ்ச்சொல்லா? தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்கிறேன். கட்டுரையில் மாற்றத்தை எதிர்ப்பார்க்கவில்லை. வாழுகின்றன, வாழ்கின்றன - எது சரி?--ரவி 16:38, 12 அக்டோபர் 2006 (UTC)
விட்டில் பூச்சி
[தொகு]இங்கே கட்டுரையில் விட்டில் பூச்சி எனக் குறிப்பிட்டிருப்பது moth ஐயா?--கலை 09:47, 29 அக்டோபர் 2009 (UTC)
- ஆமாம் கலை. எல்லா விட்டில் பூச்சிகளும் moth அல்ல, எல்லா mothகளும் விட்டில் பூச்சிகள் அல்ல என நினைக்கிறேன். இக்கட்டுரையை விரிவுபடுத்த நிறைய தகவல்கள் சேர்த்து வைத்துள்ளேன். இன்னமும் ஒழுங்கு படுத்தவில்லை. --செல்வா 16:52, 29 அக்டோபர் 2009 (UTC)
- moth என்பதை அந்துப்பூச்சி என்று கூறக்கேட்டுள்ளேன். சரிதானா? -- சுந்தர் \பேச்சு 17:33, 29 அக்டோபர் 2009 (UTC)
- இப்போதுதான் எனக்கும் நினைவுக்கு வருகிறது, moth என்பதை அந்துப் பூச்சி என்றே நானும் அறிந்திருக்கிறேன். அப்படியானால் விட்டில்பூச்சி என்பது என்ன? அதன் ஆங்கிலப் பெயர் என்ன?--கலை 22:16, 29 அக்டோபர் 2009 (UTC)
- விட்டில் = grasshopper; locust. in Tamil Lexicon --பரிதிமதி 08:28, 30 அக்டோபர் 2009 (IST)
- Grasshopper ஐ வெட்டுக்கிளி அல்லது தத்துவெட்டி என்று அறிந்திருக்கிறேன். விட்டில்பூச்சி என்பதற்கும், கறையான் அல்லது எறும்பின் ஒரு நிலைக்கும் தொடர்பிருக்குமா என யோச்சிக்கின்றேன். இரவில் விளக்கு வெளிச்சத்தை நோக்கிப் பறந்து வந்து இறக்கைகளை இழந்துவிட்டு செல்லும் பூச்சி எது?--கலை 09:40, 30 அக்டோபர் 2009 (UTC)
- விட்டில் = grasshopper; locust. in Tamil Lexicon --பரிதிமதி 08:28, 30 அக்டோபர் 2009 (IST)
- இப்போதுதான் எனக்கும் நினைவுக்கு வருகிறது, moth என்பதை அந்துப் பூச்சி என்றே நானும் அறிந்திருக்கிறேன். அப்படியானால் விட்டில்பூச்சி என்பது என்ன? அதன் ஆங்கிலப் பெயர் என்ன?--கலை 22:16, 29 அக்டோபர் 2009 (UTC)
- moth என்பதை அந்துப்பூச்சி என்று கூறக்கேட்டுள்ளேன். சரிதானா? -- சுந்தர் \பேச்சு 17:33, 29 அக்டோபர் 2009 (UTC)
- கலை, நீங்கள் குறிப்பிடுவது ஈசல். இவையும் கறையான்களே. -- சுந்தர் \பேச்சு 17:40, 4 டிசம்பர் 2009 (UTC)
தேனுறிஞ்சும் பட்டாம்பூச்சி நிகழ்படம்
[தொகு]சுந்தர், மிக்க நன்றி. எத்தனை மெல்லிய கால்கள் உணர்விழைகள். எப்படித் துருவித் துருவித் தேடுகின்றது. மிக நேர்த்தியாய் நிகழ்ப்டமாக்கியிருக்கின்றார்கள்! இங்கு சேர்த்ததற்கு நன்றி.--செல்வா 19:06, 6 செப்டெம்பர் 2010 (UTC)
- ஆம், செல்வா. நானும் விரும்பிப் பார்த்தேன். பட்டாம்பூச்சிகளின் உணவு என்ற பத்திக்கு மிகவும் பொருத்தமாகத் தோன்றியதால் சேர்த்து விட்டேன். -- சுந்தர் \பேச்சு 19:26, 6 செப்டெம்பர் 2010 (UTC)