பேச்சு:நைத்திரைற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@மதனாஹரன்: Nitrite என்பதன் சரியான தமிழ் ஒலிப்பு நைத்திரைற்று என்றே கொண்டாலும், பெரும்பாலும் நைட்ரைட் அல்லது நைட்ரைட்டு என்று வழக்கில் உள்ளது (தமிழ்நாட்டு பாடப்புத்தகங்கள்). அதனை வழிமாற்றாகத் தந்தால் பெரும்பான்மையோரின் தேடுதலுக்குக் கிட்டி, இக்கட்டுரை பயனுள்ளதாக அமையும் எனக் கருதுகிறேன். உங்கள் கருத்தைக் கூறும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:03, 19 செப்டம்பர் 2015 (UTC)

வழிமாற்று ஏற்கெனவே உள்ளது. கட்டுரையினுள்ளும் சேர்த்துள்ளேன். இலங்கையில் Nitrite-நைத்திரைற்று, Nitride-நைத்திரைட்டு எனப் பயன்படுத்தப்படுகின்றது. Nitrite-நைட்ரைட்டு, Nitride-நைட்ரைடு என எழுதுவதிலுள்ள சிக்கலையும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். நாடு + ஐ = நாட்டை. ஒத்ததாக, நைட்ரைடு + ஐ = நைட்ரைட்டை, நைட்ரைட்டு + ஐ = நைட்ரைட்டை. வேற்றுமையுருபுகள் ஏற்கும்போது இவை சிக்கலைத் தரும். --மதனாகரன் (பேச்சு) 14:09, 19 செப்டம்பர் 2015 (UTC)
👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 15:33, 19 செப்டம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நைத்திரைற்று&oldid=1920051" இருந்து மீள்விக்கப்பட்டது