பேச்சு:நுக்கு'அலோபா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நுக்கு'அலோபா என்பதில் ' என்பதை எப்படி வாசிக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 00:28, 14 பெப்ரவரி 2016 (UTC)

ஆங்கிலம் போன்று இரண்டு சொற்களாகப் படிக்கலாம்.--Kanags \உரையாடுக 00:33, 14 பெப்ரவரி 2016 (UTC)

அப்படியானால் இரு சொற்களாகப் பிரித்தெழுத வேண்டியதுதானே. வீண் குழப்பம் வேண்டாமே.--பாஹிம் (பேச்சு) 00:34, 14 பெப்ரவரி 2016 (UTC)

அதிகாரபூர்வமான அச்சொல்லை அப்படியே எழுதிப் படிப்பதில் என்ன சிரமம். தமிழில் இவ்வாறு எழுதுவது தவறென்றால் இரு சொற்களாக எழுதலாம். --Kanags \உரையாடுக 00:46, 14 பெப்ரவரி 2016 (UTC)

'அ என்றெழுதும் வழக்கம் தமிழில் இல்லாத ஒன்றல்லவா. இல்லாததைப் புகுத்தும் போது அதை எவ்வாறு வாசிக்க வேண்டுமென்றும் சொல்லித் தர வேண்டும். எனினும் நுக்குஅலோபா என்றெழுதினால் பரவாயில்லை.--பாஹிம் (பேச்சு) 03:35, 14 பெப்ரவரி 2016 (UTC)

நுக்குஅலோபா என எழுதலாம். ஆனால் தமிழில் அவ்வாறு எழுத முடியுமா? இலக்கணம் அதற்கு இடம் கொடுக்குமா? நுக்குவலோபா என்றே தம்ழில் எழுதலாம். நுக்குவலோபா என எழுதுவதற்கு எனக்கு சம்மதம். நகரின் பெயர் அதிகாரபூர்வமாக ஒரே சொல்லில் Nukuʻalofa என எழுதப்படுகிறது.--Kanags \உரையாடுக 03:52, 14 பெப்ரவரி 2016 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நுக்கு%27அலோபா&oldid=2021262" இலிருந்து மீள்விக்கப்பட்டது