பேச்சு:நரிக்குறவர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறமக்கள் எனப்படுபவர்களும் நரிக்குறவர்களும் ஒரே மக்களா? --Natkeeran (பேச்சு) 04:21, 4 மார்ச் 2012 (UTC)

பொதுவாக, மலைவாழ் மக்களை குறவர் என்பர். அரசு அட்டவணையில் குறவர்கள், அவர்களின் பிரிவுகளுக்குத் தனி வரையறை இருக்கும். நரிக்குறவர் வேறு. இவர்கள் நாடோடிகளாக அறியப்படுகிறார்கள்--இரவி (பேச்சு) 05:26, 4 மார்ச் 2012 (UTC)
குறவர்கள் பல பிரிவுகளில் இருக்கின்றனர். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள சாதிகள் பட்டியலில் இவர்களில் ஒரு பிரிவினர் ஆதிதிராவிடர் பட்டியலிலும், ஒரு பிரிவினர் பழங்குடியினர் பட்டியலிலும், மேலும் சில பிரிவினர் சீர்மரபினர் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர். நரிக்குறவர்கள் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பட்டியலிலேயே இடம் பெற்றிருக்கின்றனர். நரிக்குறவர்களுக்கும் பிற குறவர் வகுப்பினருக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. நரிக்குறவர்கள் மராட்டிய மாநிலத்திலிருந்து பிழைப்புக்காகத் தமிழ்நாடு நோக்கி வந்தவர்கள் என்கின்றனர்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:12, 4 மார்ச் 2012 (UTC)

திருத்தம்[தொகு]

//பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும், துப்பாக்கி சுடும் பயிற்சி, ஓட்டத்திறமை ஆகியவை இருப்பதால் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட வழிவகுக்கப்பட வேண்டும், வியாபாரக் கடனுதவி, பிற சமூகத் தொல்லையின்றி ஊருக்குள் மனை ஒதுக்கப்படுதல்,மின்சார,குடிநீர் வசதியுடன் குடியிருப்புகள், பாதுகாப்பு என இவர்கள் அரசிடமிருந்து எதிர்பார்ப்பவை நரிக்குறவர் சமூகத்தின் அடிப்படைத் தேவைகளே. //

//--நரிக்குறவர் சிறப்புகள்--
  • உழைக்கமுடியாத நரிக்குறவ முதியோர்களை குடிசையிலேயே தங்க வைத்து பராமரிப்பது மகனின் கட்டாயக் கடமை.
  • முதியோர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். முதியோர்கள் வகுக்கும் கட்டுப்பாட்டை இவர்களில் படித்தோர் உட்பட அனைவரும் ஏற்கின்றனர்.
  • திருமணத்தில் ஆண்களே பெண்கள் குடும்பத்திற்கு பரிசப்பணம் தரவேண்டும்
  • நரிக்குறவர்கள் வேற்று சமூகப் பெண்களைக் கிண்டல் கேலி செய்வதில்லை
  • பெரும்பாலோர் எந்தவித இசைக்கருவிகளும் இல்லாமல் தங்கள் உதடுகளாலேயே எல்லா ராகங்களும் பாடும் திறமை பெற்றோர்.
  • படிப்பறிவு இல்லை எனினும் அனுபவ அறிவால் இயற்கை வைத்தியத்தில் சிறந்தவர்களாக உள்ளனர். இவர்களில் ஒருவரான சு.சேகர் எனும் திருச்சியைச் சேர்ந்தவருக்கு படிக்காதவர் எனினும் 12 தலைமுறையாக மருத்துவம் செய்து வரும் அனுபவத்திற்கு சான்றாக தனியார் டாக்டர்கள் சங்கத்தால் 28.12.2001 அன்று மருத்துவ மாமணி பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது.

// தனிப்பட்ட ஒரு இனத்தினரை சிறப்பானவர்கள் என்று சொல்வது தகாது. மேலும், ”மற்ற சமூகத்தினரால் கொடுமைக்கு ஆளாகுதல்” என்ற பத்தியும் திருத்தியமைக்கப்பட வேண்டும். இந்த பகுதிகளை தக்க முறையில் திருத்தியமைக்க வேண்டும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:39, 2 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நரிக்குறவர்&oldid=1700756" இலிருந்து மீள்விக்கப்பட்டது