பேச்சு:தாஞ்சன்களின் விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

tangent என்பது தாஞ்சன் என்று தானே தமிழில் கூறுகிறோம். தாஞ்சன் விதி என மாற்றலாமா? அப்படியே நாம் படித்ததாக ஞாபகம்.--Kanags \பேச்சு 22:37, 9 ஆகஸ்ட் 2008 (UTC)

கனகு, தமிழ்நாடு பாடநூல்களில் ஆங்கிலத்திலேயே tan என்று குறிப்பிடுகிறார்கள்!! sin, cos, tan, cot, cosec என்று இலத்தீன் எழுத்துக்களிலேயே குறிக்கிறார்கள். நான் படித்த பொழுது சைன் காஸ், டான் , காட் என்று படித்ததாக நினைவு. இலங்கையில் தாஞ்சன் என்று இருந்தால் அப்படியே மாற்றிவிடுங்கள். என்னைப் பொறுத்தவரை, ஆங்கிலத்தில் sin, tan என்று எழுதினாலும், அவற்றுக்கு பொருத்தமான பெயர்கள் தமிழில் இருக்கவேண்டும். என் பரிந்துரை எதிரம் (sine), அண்மம் (cosine), தொடுமம் (tangent), தலைகீழ் எதிரம் (cosec-cosecant), தலைகீழ் அண்மம் (sec-secant), தலைகீழ்த் தொடுமம் (cot-cotangent) (எடுத்தாளவேண்டும் என்று கூறவில்லை!). எளிதாக முக்கோணவியல் என்று கூட எழுதாமல் திரிகோணமிதி என்று எழுதி, தமிழை மதிக்காமல் "மிதி"க்கிறார்கள் தமிழ்நாட்டு கணிதவியல் ஆசிரியர்கள்! என்ன சொல்வது!--செல்வா 23:07, 9 ஆகஸ்ட் 2008 (UTC)
செல்வா, tan என்பதை டான் அல்லது தான் என்று தான் நாமும் கூறுகிறோம். எழுதும்போது தான் என்று எழுதுகிறோம். சமன்பாடுகள் எழுதும்போது சிலர் tan என்றும் எழுதுகிறார்கள். tangents law வை தாஞ்சன் விதி அல்லது தாஞ்சன்களின் விதி என்கிறோம். தொடுகோடுகளின் விதி எனவும் எழுதலாம் என்பது என் பரிந்துரை.--Kanags \பேச்சு 23:18, 9 ஆகஸ்ட் 2008 (UTC)
கனகு, தொடுகோடு என்னும் tangent தொடர்புடையது என்றாலும், இங்கு முக்கோணவியலில் இது ஒரு விகிதம் அல்லவா (எதிரம்/அண்மம் = தொடுமம்). தாஞ்சன்களின் விதி என்று இருப்பதில் எனக்கு மறுப்பு ஏதும் இல்லை. எப்படி தலைப்பு இருந்தால் நல்லதோ அப்படியே இருப்பதில் எனக்கு உடன்பாடே. --செல்வா 01:44, 10 ஆகஸ்ட் 2008 (UTC)
செல்வா, எதிரம், அண்மம், தொடுமம் மிக நன்று! குறைந்த து உரையிலாவது தர வேணடும். கனகு சொல்வதுபோல தான் என்ற தந்தால் சொல்லின் முதலில் டகரம் வருவதையும் தவிர்க்கலாம். -- சுந்தர் \பேச்சு 15:49, 20 நவம்பர் 2008 (UTC)[பதில் அளி]
கருத்துக்கு நன்றி சுந்தர். இப்பொழுது தலைப்பைத் தாஞ்சன்களின் விதி என்று மாற்றி விட்டேன்.--செல்வா 16:05, 20 நவம்பர் 2008 (UTC)[பதில் அளி]