பேச்சு:தமிழ்நாட்டு இலத்திரனியல் தொழிற்றுறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொழிற்துறை என்றொரு சொல் கிடையாது. தொழிற்றுறை என்பதே சரியானது.--பாஹிம் (பேச்சு) 09:54, 15 சூலை 2015 (UTC)[பதிலளி]

மெய்ம்மயக்கம் பற்றி அறிந்திருந்தால் இவ்வாறான தவறுகள் ஏற்படா. றகர மெய்யை அடுத்துத் தகர மெய் வராது எனத் தெரிந்திருந்தாலே இவ்வாறான பிழைகளைத் தவிர்க்கலாம். இலக்கணப் பிழைகளைக் கண்டறிந்து திருத்தும் பாகிமிற்கு நன்றி. --மதனாகரன் (பேச்சு) 10:03, 15 சூலை 2015 (UTC)[பதிலளி]
மேலும் தமிழ்நாட்டு இலத்திரனியல் தொழிற்றுறை என்றே வர வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 10:10, 15 சூலை 2015 (UTC)[பதிலளி]
தமிழ்நாட்டில் இலத்திரனியற்றொழிற்றுறை என்றல்லவா வர வேண்டும்?--Kanags \உரையாடுக 10:16, 15 சூலை 2015 (UTC)[பதிலளி]

இலத்திரனியல் என்பதையும் தொழிற்றுறை என்பதையும் புணர்த்தாமல் எழுதுவது சரியானதே. தமிழ் நாட்டில் என்றுதான் வர வேண்டும். தமிழ் நாட்டு என்றால் தமிழ் நாட்டுக்கு உரித்தான என்று பொருள் வரலாம்.--பாஹிம் (பேச்சு) 12:52, 17 சூலை 2015 (UTC)[பதிலளி]

Electronic industry of Tamil Nadu = தமிழ் நாட்டு இலத்திரனியல் தொழிற்றுறை
Electronic industry in Tamil Nadu = தமிழ் நாட்டில் இலத்திரனியல் தொழிற்றுறை--பாஹிம் (பேச்சு) 12:57, 17 சூலை 2015 (UTC)[பதிலளி]
@Kanags: சிறீதரன், பாகிம் ஆகியோர் கூறுவது மிகப் பொருத்தமானது. தமிழ்நாட்டில் என்று வருவதே சரி. --மதனாகரன் (பேச்சு) 13:06, 17 சூலை 2015 (UTC)[பதிலளி]