பேச்சு:தமிழ்நாட்டுத் தமிழில் வழங்கும் பிற மொழிச் சொற்களின் பட்டியல் - ஆட்சியியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துப்பாக்கி , பீரங்கி போன்ற சொற்களை பாரசீக மொழி சொற்கள் என சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது.

துப்பாக்கி, பீரங்கி போன்ற சொற்கள் தமிழ் சொற்கள் தான் என்று நான் சொல்கிறேன் --Raju Saravanan (பேச்சு) 06:56, 4 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

துப்பாக்கி என்பது துருக்கிய மொழியிலிருந்து பாரசீக மொழி வழியாகத் தமிழ் நாட்டில் புகுந்தது என்கிறது தில்லிப் பல்கலைக்கழகம்.--பாஹிம் (பேச்சு) 10:45, 4 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

துப்பாக்கி மற்றும் பீரங்கி இரண்டு சொற்களையும் பகுத்து பார்க்கும்போது அதனுள் இருக்கும் சொற்கள் தமிழ் சொற்களாக உள்ளது. இதை நாம் ஆராய வேண்டும்.

துப்பாக்கி என்ற சொல்லில் துப்பு + அக்கி என்ற இரு தமிழ் சொற்கள் உள்ளன. துப்புதல் என்றால் அழுத்தத்தை ஒரு பொருள் மீது செலுத்தி எறிவது/நகர்த்துவதாகும். அக்கி என்றால் நெருப்பு. அழுத்தத்தின் மூலம் நெருப்பை அல்லது அக்னியை எறியும் பொருளுக்கு துப்பாக்கி என்று பெயர் காரணம் வருகிறது.

அதேபோல் பீரங்கி என்ற சொல்லில் பீரிடு> பீர் + அங்கி (அக்கி, நெருப்பு,அக்னி) என்ற இரு சொற்கள் உள்ளன. பீர் என்றால் பீரிடுதல் ( துப்புதல் = குறைந்த தூரம், பீரிடுதல் = நெடுந்தூரம்). அங்கி என்றால் நெருப்பு. நெருப்பை அல்லது அக்னியை பீரிட்டு தள்ளுவதால் பீரங்கி என்று பெயர் காரணம் வருகிறது.

கராத்தே என்ற சீனச்சொல்லை Kara (கரம்)+te(தாக்கு) = Karate ஜப்பானியர்கள் தங்கள் மொழியில் சொல்லாக்கம் செய்யும்போது Kara என்ற சீன ஒலி ஜப்பானிய மொழியில் வெற்று (Empty) என்று பொருள் குறிப்பதையும், te என்ற சீன ஒலி ஜப்பானிய மொழியில் பாதை அல்லது போக்கை குறிப்பதையும் கண்டு ஜப்பானி மொழியிலும் கராத்தே என்று அழைக்கப்படுகிறது. ஜப்பான் மொழியில் வெற்று போக்கு என்றால் கராத்தேயை குறிப்பதாக காரணம் கொள்ளப்பட்டுள்ளது.

இதே நிலை தான் பீரங்கி மற்றும் துப்பாக்கி என்ற சொற்களுக்கும் பொருந்தும். நம் மொழியில் சரியான காரணத்தை இச்சொற்கள் தரும்போது, அவற்றை தமிழ் சொற்களாக கருதலாம் என்பது என் கருத்து.--Raju Saravanan (பேச்சு) 12:23, 5 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

ஒப்புமையைக் கொண்டு மூலத்தை நிறுவ முடியாது. இந்த சொற்களுக்கு தமிழ் வழியிலும் பொருள் தோன்றுகிறது என்பதைக் கொண்டு தமிழுக்கு மட்டும் சொந்தமான சொற்கள் எனக் கொள்ள முடியாது. அவற்றிற்கான பெயர் தோன்றிய போது தமிழில் இருந்து சென்றதற்கான ஆதாரங்கள் இல்லை. இந்த சொற்கள் பழங்காலத்தில் பயன்பாட்டில் இருந்ததற்கான ஆதாரம் தேவைப்படும். முறையான சொற்பிறப்பியல் ஆதாரங்கள் இருந்தால் சேருங்கள். நம்முடைய ஆய்வுகளைக் கொண்டு உரை எழுதுவது சரியாகாது. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:30, 9 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

வணக்கம் தமிழ்க்குரிசில், நான் தமிழில் இருந்து இச்சொற்கள் மற்றமொழிகளுக்கு சென்றதாக சொல்லவில்லை. தமிழ் வழியிலும் மிகப்பொருத்தமான பொருள் தருகிறது என்பதைக் கொண்டு தமிழ்ச்சொற்கள் என சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும். துப்பாக்கி, பீரங்கி போன்ற இக்காலத்திய கண்டுபிடிப்புகளுக்கு பழங்காலத்திய ஆதாரங்களை தேடுவது சரியாக வருமா என தெரியவில்லை. பொதுவான முறையில் இங்குள்ள பங்களிப்பாளர்களின் கருத்துகளை கேட்டறிந்து பின்னர் ஒரு முடிவுக்கு வரலாமே --Raju Saravanan (பேச்சு) 09:08, 12 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

தங்கள் கருத்தை முறையாக பதிவு செய்தமைக்கு நன்றி! கவனிக்க:kanag, செல்வா, natk, ravi, mayuranathan, tha.u -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:06, 12 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]