பேச்சு:தன்னுடல் தாக்குநோய்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தன்னுடல் தாக்குநோய் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கலை, நாம் விக்சனரியின் சிறிது இது பற்றி உரையாடினோம். தன்னுடல் தாக்குதிறன் அல்லது தாக்குத்திறன் என்பது அவ்வளவாகக் பொருந்துவதுபோலத் தெரியவில்லை. திறன் என்னும் சொல் இங்கு பொருந்துமா? தன்னுடல் தாக்குநோய் என்றால் மிகவும் பொதுமையாக இருக்கின்றது. நோய்த்தடுப்பாற்றல், அல்லது எதிர்ப்பாற்றலைக் கெடுக்கும் அல்லது குறைக்கச்செய்யும் நோய் அல்லவா இது. பிறழ் எதிர்ப்பு நோய், பிறழ் எதிர்ப்புக் குறைபாடு என்பன பொருந்துவதாகத் தெரிகின்றன. வேறு சிலவும் எண்ணிப்பார்க்க வேண்டும். தன்னுடல் என்னும் முற்பகுதி சரியே. தாக்கு என்னும் சொல்லும் பிழையில்லை, ஆனால் திறன் என்னும் பின்னொட்டு சரியாகச் சேர்ந்து பொருள் தரவில்லை என்று நினைக்கின்றேன்.--செல்வா 00:45, 20 செப்டெம்பர் 2010 (UTC) தன்னுடல் பிறழ் எதிர்ப்புநோய் என்றோ, தன்னுடல் என்னும் சொல் இல்லாமல் பிறழெதிர்ப்பு நோய் என்றோ சொல்லலாம். பிறரும் சிந்தித்துப் வேறு பரிந்துரைகள் தர வேண்டுகிறேன். --செல்வா 00:48, 20 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

செல்வா, இப்போது யோசித்துப் பார்த்தால் 'திறன்' என்ற சொல் பொருத்தமற்றதாகவே தோன்றுகிறது. மேலும் இப்போதுதான் மீண்டும் விக்சனரி உரையாடல் சென்று பார்த்ததில் சுந்தரும் சில பரிந்துரைகள் சொல்லியுள்ளார். நான் Autoimmunity என்பதை 'தன்னுடல் தாக்குதிறன்' என்றும், Autoimmune disease என்பதை 'தன்னுடல் தாக்குநோய்' என்றும் இங்கே விக்கிப்பீடியாவில் கொடுத்திருந்தேன்.
உண்மையில் இந்த Autoimmunity யானது, நோய்த்தடுப்பாற்றல், அல்லது எதிர்ப்பாற்றலைக் கெடுப்பதாகவோ அல்லது குறைப்பதாகவோ இல்லாமல், அதன் மிகை செயற்பாட்டால் நிகழ்வதாகவே கருதப்படுகிறது. அப்படியானால் Autoimmunity யை 'தன்னுடல் தாக்குதன்மை' என்றும், Autoimmune disease ஐ 'தன்னுடல் தாக்குநோய்' என்றும் குறிப்பிடலாமா? தன்னுடல் தாக்குநோய் என்னும்போது, நோயின் இயல்பை இலகுவாக புரிந்து கொள்ளக்கூடிய சொல்லாகவே தெரிகின்றது.
மேலும் ஆங்கில விக்கிப்பீடியாவிலும் இரு கட்டுரைகளையும் ஒன்றாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அப்படியானால் 'தன்னுடல் தாக்குநோய்' என்பதை மட்டும் வைத்துக்கொண்டு, Autoimmunity (தன்னுடல் தாக்குதன்மை)பற்றி அங்கேயே குறிப்பிடலாம் என நினைக்கிறேன்.--கலை 08:26, 20 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
ஆம், இரு கட்டுரைகளையும் ஒன்றிணைத்துவிடலாம் என்றே நினைக்கிறேன். செல்வா பரிந்துரைத்த பிறழெதிர்ப்பு நோய் நல்ல பொருள் தருவதாக உள்ளது. அதையும் ஒரு மாற்றப்பரிந்துரையாகக் கொள்ளலாம். -- சுந்தர் \பேச்சு 08:44, 20 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
தன்மை மற்றும் அதனாலெழும் நோய் என இருவகைப்பட்டாலும் இரு கட்டுரைகளையும் இணைப்பதற்கு நானும் ஒப்புகிறேன். தன்னுடல் தாக்கு நோய் மற்றும் பிறழெதிர்ப்பு நோய் இரண்டுமே பொருத்தமானச் சொற்களாகத் தோன்றுகின்றன. பின்னது சுருக்கமாக உள்ளதால் எனது தேர்வு.இருப்பினும் எனது உயிரியல் அறிவு குறைவால் எவ்வாறு நிகழ்கின்றது என்பதைப் பொறுத்து பிறர் தேர்வு செய்வது நலம். கலையின் விளக்கங்களைக் காண்கையில் "தன்னுடல் தாக்கு நோய்" சரியாகப் பொருந்துகிறதோ என்ற ஐயமும் எனக்கு எழுகிறது. நேரடி தமிழ்ப்பெயர்ப்பான "தானி எதிர்பாற்றல்" பற்றியும் கருத்திடுங்கள்.--மணியன் 15:11, 20 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
மணியன், இங்கே auto என்பது தானி (தானியங்கி) அல்ல. இங்கே auto என்பது தன்னுடலே தன்னை எதிர்த்தல் என்னும் பொருளில் வருவது. எங்கள் குறைக்கடத்தித் துறையில் (semiconductor field), மிகச் சிறிய அளவில் அயல் அணுக்களை வெளியே இருந்து உட்புகுத்துவோம். இதனை அயலூட்டு எனலாம். ஆனால் சில சூழல்களில் (அயலூட்டு இல்லாத அல்லது குறைவான அடர்த்தியுடன் அயலணு ஊட்டு உள்ள மென்படலம் படிந்துவளர்த்தெடுக்கும் பொழுது) வெப்பநிலை உயர்வாக இருக்கும் ஆகையால் அடியே உயர் அடர்த்தியில் உள்ள அயலணுக்கள் மேலே வளரும் படலத்தில் பரவும். இதனைத் தன்னூட்டுப் பரவல் (auto-doping) எனலாம். இது போன்ற பொருளில் auto என்பது இங்கு பயன்படுகின்றது. auto-immunity (this is a misleading term, if you read it in isolation) என்பதைத் தன்னுடல் தாக்குமை அல்லது தன்னுடல் பிறழ்தாக்குமை என்று கூறலாம் என நினைக்கின்றேன். --செல்வா 19:39, 20 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
அப்படியானால், Autoimmunity என்பதை செல்வா கூறியிருப்பதுபோல், தன்னுடல் தாக்குமை என்றும், Autoimmune disease என்பதை தன்னுடல் தாக்குநோய் என்றும் குறிப்பிடுவோமா? அனைவரும் ஒத்துக் கொண்டிருப்பதுபோல், தன்னுடல் தாக்குநோய் மற்றும் பிறழெதிர்ப்பு நோய் இரண்டுமே பொருத்தமான சொற்களாகத் தெரிந்தாலும், தன்னுடல் தாக்குநோய் என்பது இலகுவாக நோயின் தன்மையை புரிந்துகொள்ள உதவுவதாகத் தோன்றுகிறது. அனைவரும் ஒத்துக் கொண்டால், இந்த மாற்றங்களைச் செய்து இரு கட்டுரைகளையும் ஒன்றாக்கி விடுகிறேன்.--கலை 10:55, 21 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறேன், கலை. -- சுந்தர் \பேச்சு 11:01, 21 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

தன்னுடல் தாக்குநோய் என்ற கட்டுரையின் உள்ளடக்கத்தை இங்கே வெட்டி ஒட்டிவிட்டேன். இனி அந்தக் கட்டுரையை நீக்கலாம் என நினைக்கிறேன்.