பேச்சு:தன்னார்வத் தமிழ் இணையத் திட்டங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தன்னார்வலத் தமிழ் இணையத் திட்டங்கள் என்ற நோக்கில் இக்கட்டுரையை வளர்ப்பது பொருந்தும். தன்னார்வலத் தமிழ்த் திட்டங்கள் என்றால் - இணையத்துக்கு வெளியே தமிழ்நாட்டில் இது போல் ஏகப்பட்ட திட்டங்கள் இருக்கின்றன. அவற்றுக்குத் தனிக்கட்டுரை தொடங்கலாம்.

வரலாறு.com திட்டம் இணையத் திட்டமாக கருத இயலாது. அதை பொதுவான ஆர்வலத் திட்டங்கள் குறித்த தனிக்கட்டுரைக்கு நகர்த்தலாம். உண்மையில், இதைத் திட்டம் என்று கருத இயலுமா தெரியவில்லை. ஒரு ஏற்பாடு என்றே புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழ்மணம் எப்படி ஒரு தன்னார்வலத் திட்டம் என்று புரிந்து கொள்ள முடியவில்லை.

இந்தக் கட்டுரையிலேயே இரண்டு பகுதிகள் இருக்க வேண்டும். ஒன்று - தமிழரால் தொடங்கப்படும் திட்டங்கள். இன்னொன்று - உலகத் திட்டங்களின் தமிழ்ப் பிரிவுகள்.

அப்புறம், தன்னார்வத் திட்டம் என்றால் என்ன, அதன் தன்மைகள் என்ன என்ற வரையறைகள் முக்கியம்.--ரவி 15:13, 28 ஏப்ரல் 2008 (UTC)

இரண்டு முறை விரிவாக்கி சேமிக்க முயன்று அழிந்து விட்டது, கட்டுரையின் பெயர் தாவி தாவி செல்கிறது. பரவில்லை. உங்கள் கருத்துக்கள் நன்றே. நூல்களைத் தவிர இணைய இதழே அவர்களின் publishing என்று நினைக்கிறேன். தமிழ்மண பங்களிப்பாளர்கள் பலர் தன்னாவலர்களே...இல்லையா? குறிப்பாக அது Commerical இல்லை, சரியா? --Natkeeran 15:19, 28 ஏப்ரல் 2008 (UTC)

தொகுப்பில் ஏற்பட்ட சிரமத்துக்குப் பொறுக்கவும். வரலாறு.com தான் அவர்களின் முதன்மை அடையாளம். ஆனால், இத்திட்டம் இயங்குவது, ஒருங்கிணைக்கப்படுவது இணையத்தில் இல்லை (குறைந்தபட்சம், இது வரை அப்படித் தான் தோற்றமளிக்கிறது. எனவே, இதை இணைய நண்பர்களால் இணையத்துக்கு வெளியில் முன்னெடுக்கப்படும் முயற்சி என்றே புரிந்து கொள்ள முடிகிறது)

தமிழ்மணம் - Tamil media international என்ற நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. வணிக நோக்கு என்பதை எப்படி வரையறை செய்கிறீர்கள் என்று தெரியவில்லை. முன்பும் தற்போதும் தளத்தில் விளம்பரங்கள் இருக்கின்றன. தளம் ஒரு முறை விலை கொடுக்கப்பட்டு கைமாறி இருக்கிறது. (கொடுக்கப்பட்ட விலை தளச் செலவுகளுக்கே என்றும், வருங்காலத்தில் இலாப நோக்கற்ற நிறுவனமாகப் பதிவு செய்ய இருப்பதாக அறிவித்திருப்பதும் கவனிக்கத்தக்கது). ஒரு தன்னார்வலத் திட்டத்துக்கு மிக முக்கிய வரையறை: ஆர்வமுடையோர் பெரிய தடைகளின்றி உடனே இணைந்து கொள்ள முடிவது. என் புரிதலில் தமிழ்மணத்தில் இத்தகைய திறந்த நிலை இல்லை. பயனர்:Rselvaraj தெளிவுபடுத்தலாம்--ரவி 15:31, 28 ஏப்ரல் 2008 (UTC)

வரலாறு திட்டத்துக்கு களப்பணி உண்டு. ஆனால் அவர்களுக்கு இணையம் ஒரு முக்கிய தகவல் பரிமாறல் கருவி. இல்லாயா. தமிழ்மணத்தில் இலகுவாக சேர முடியாது என்பது உண்மைதான். Low barriers to entery ஒரு முக்கிய கூறுதான். இதே முறையில் கருத்துக்களை விருவாக்கினால் நன்று. --Natkeeran 15:41, 28 ஏப்ரல் 2008 (UTC)

இணையத் தன்னார்வத் திட்டப் பொதுத் தன்மைகள்[தொகு]

  1. ஒரே ஒருவராலோ சிறு மூடப்பட்ட குழுவாலோ நடத்தப்படுவதாக இருக்ககூடாது. முன்பின் அறிமுகமில்லாதோரும் கேட்டு இணையக்கூடிய தன்மை இருக்க வேண்டும்.
  2. திட்டம் இயங்கும் முறை குறித்து இணையத்தில் திறந்த ஆவணப்படுத்தல்
  3. தன்னார்வத் திட்டத்துக்கும் ஊடக, நிறுவன முயற்சிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் கவனிக்கப்பட வேண்டும்.
  4. திட்டமே விற்கப்படக்கூடிய தன்மை இல்லாதிருத்தல் நலம்.
  5. தெளிவான நோக்கம் கொண்டிருந்தல் வேண்டும்.
  6. திட்டத்தின் பயன் எவருக்கும் கிடைக்கத்தக்கதாக இருக்க வேண்டும். யார் பயன் பெறுகிறார்கள் என்று மட்டுப்படுத்தக் கூடாது.
  7. விளம்பரம், இதர வழிகளில் பொருளீட்டும் முயற்சிகள் இன்றி இருப்பது. தற்போதைய நிலையில் இணைய விளம்பரங்கள் வரும் சொற்ப வருமானம் தளச் செலவுகளின் ஒரு பகுதிக்குக்கூட காணாது என்றாலும் தொலைநோக்கில் இந்த வரையறையை வலியுறுத்துவது நலம்.
  8. தொடர் செயல்பாடுகள் அவசியம். என்றோ தொடங்கி உறைநிலையில் இருக்கும் திட்டமாக இல்லாதிருப்பது நலம்.

--ரவி 16:01, 28 ஏப்ரல் 2008 (UTC)

மாற்று! தன்னார்வத் தமிழ் இணையத் திட்டத்தில் சேர்க்கப்படக் கூடியதா?[தொகு]

மாற்று! இணையத்தளம் தன்னார்வத் தமிழ் இணையத் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

அப்படி சேர்க்கப்படக் கூடிய தகுதி உடையது தானா மாற்று! என்ற கேள்வி வருகிறது. மாற்று! என்பது தனிப்பட்ட நபர்களால்(கூட்டாக) அவர்களின் உள்ளடி அரசியல் படி இற்றைப் படுத்தப்படும் ஒரு இணைய தள சேகரிப்பாளர் என்ற வகையில் இதை தன்னார்வத் தமிழ் இணையத் திட்டத்தில் சேர்த்தது எப்படி என்ற கேள்வி தொடர்ச்சியாய் எழுகிறது.

--மோகன்தாஸ் 09:43, 22 மே 2008 (UTC)[பதிலளி]

இல்லை. மாற்று-வை வலைப்பதிவு பக்கத்தில் சில நாட்களுக்கு முன் நானே சேர்த்திருக்கிறேன். இங்கு பொருந்தாது என்பதும் நீக்க வேண்டும் என்பதும் என் பரிந்துரை. தமிழ்மணம் பற்றி முன்னர் எனது கருத்துக் கேட்கப் பட்டிருந்தாலும், நான் சார்புடைய ஒருவன் என்பதால் அதனைச் சேர்ப்பது/நீக்கியது பற்றி நான் எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை. ஆனால், தமிழ்மணத்தை இப்போது நடத்துவது தமிழ் மீடியா இண்டெர்நேசனல் என்னும் இலாப நோக்கில்லா நிறுவனம் (non-profit organization) என்னும் தகவலை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். --இரா.செல்வராசு 11:11, 22 மே 2008 (UTC)[பதிலளி]

மாற்று! ஏன் ஒரு தன்னார்வலத் திட்டம் என்று என்னால் விளக்க இயலும். ஆனால், நானும் ஒரு மாற்று! பங்களிப்பாளன் என்பதால் அது சார்புடையதாகவே பார்க்கப்படும். எனவே, கட்டுரையில் இருந்து மாற்று! பெயரை நீக்குவதில் எனக்கு மறுப்பில்லை. நாளை, மாற்று! சார்பில்லாத எவரேனும் அதனைக் கட்டுரையில் சேர்த்தாலும் மறுக்கப்போவதில்லை. நன்றி.--ரவி 11:28, 22 மே 2008 (UTC)[பதிலளி]

//மாற்று! சார்பில்லாத எவரேனும் அதனைக் கட்டுரையில் சேர்த்தாலும் மறுக்கப்போவதில்லை.//

)

--மோகன்தாஸ் 15:48, 22 மே 2008 (UTC)[பதிலளி]

விக்கி நண்பர்களே, இதில் என்ன குழப்பம் என்று புரியவில்லை. இலாபநோக்கம், தனியார் நோக்கம் உள்ள இணையத்தளங்கள் இருந்தால் அவற்றையும் அரவணைக்குமாறு தலைப்பை மாற்றலாமே? அதாவது இங்கு தரும் செய்திக்குறிப்புகள் உண்மையுடையதாகவும், பயனுடையதாகவும் இருக்க வேண்டும் என்பதுதானே அடிப்படைக் குறிக்கோள். தமிழ், தமிழர்நலம் பேணும் இணையத்திட்டங்கள் என்று கூடச்சொல்லலாமே? Charitable, non-profit நிறுவனங்கள் (புகழ் பெற்றவை) எல்லாமும் நல்லது செய்வதுடன், அதில் பங்களிப்பவர்கள் கொழுத்த நன்மைகளும் பெறுகிறார்கள். பெயர் சொல்ல விரும்பாத புகழ்பெற்ற சூழலியல் காப்பு நிறுவனங்கள், தங்கள் தலைவருக்கு ஆண்டொன்றுக்கு 500,000 அமெரிக்க டாலருக்கும் அதிகமாகவும், இன்னும் ஒரு சில ஆண்டொன்றுக்கு மில்லியன் டாலருக்கும் அதிகமாக சம்பளம் தருகின்றன. மிகப் பெரும்பாலான நன்னலம் பேணும் இலாபநோக்கற்ற அல்லது அறப்பணி நிறுவனங்கள் தங்கள் மொத்த வருவாயில் ஏறத்தாழ 2% (சில 3-4% கூட இருக்கும்; பொதுவாக இவை 25% வரை இருக்கும். இங்கே அட்டவனை-1இல் program to total expenses ~75% என்று கொடுத்துள்ளார்கள் ) நிறுவனச் செலவுகளுக்காக பயன்படுத்துவதாக தங்கள் பொருள்நிலை கூற்றுகளில் கூறும். நான் கூறும் நிறுவனங்கள் சில மில்லியன் டாலர் முதல் பல பில்லியன் டாலர்கள் வரை ஈட்டும் அல்லது வைத்திருக்கும் அறப்பணி அல்லது இலாபநோக்கமற்ற நிறுவனங்கள். எனவே இந்நிறுவனங்களில் பணியாற்றுவோர்கள் மிக அருமையான பணிகள் செய்தாலும் தாங்களும் பயன் பெறுகிறார்கள். நான் ஒரு சில அனைத்துலக அறப்பணி நிறுவனங்களுக்கு தொடர்ந்து பணம் நன்கொடையாகத் தருபவன் ஆகையால் சில தரவுகள் அனுப்புவார்கள் -அதன் அடிப்படையிலும் பிற தரவுகளின் அடிப்படையிலும் இதனைக்கூறுகிறேன். இங்கு முறை பிசகாக, இக்கட்டுரையின் பட்டியலில் ஏதும் இருப்பின் நீக்குவதற்குத் தயங்க வேண்டாம். இலாபநோக்கு உள்ள தமிழ் இணையத்திட்டங்கள் என்று தாராளமாக இன்னொரு பக்கத்தை உருவாக்கலாம், அதற்கான இணைப்பை இந்தப் பக்கதிலும் கொடுக்கலாம். தமிழால், தமிழ், தமிழர்நலம் இவற்றுக்காக உழைப்பவர்கள் நேர்மையான வழிகளில் செல்வ, மற்றும் புகழ் வளர்ச்சி அடைந்தால் எனக்கு மகிழ்ச்சியே. இங்கே விக்கியில் செய்திகளும் குறிப்புகளும் தரும்பொழுது உண்மையுடனும், நடுநிலையுடனும், விளம்பர-பரப்புரை வீச்சின்றி, பயனுடையவாறும் தருதல் வேண்டும் அவ்வளவே. தனியார் நிறுவனங்களுக்குக் கூட விக்கியில் தனிப் பக்கங்கள் உண்டுதானே! எனவே நண்பர்களே காய்வின்றி விக்கிக் கொள்கைகளை வலியுறுத்தி தேவையான மாற்றங்கள் செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன். நன்றி.--செல்வா 17:10, 22 மே 2008 (UTC)[பதிலளி]

செல்வா, தமிழ்மணம் குறித்து ஏற்கனவே தனிக்கட்டுரை உண்டு. அங்கு தாராளமாக தமிழ்மணம் குறித்தும் அதனை நடத்தும் நிறுவனம் குறித்தும் விரித்து எழுதலாம். நீங்கள் சொல்வது போல் இலாபநோக்கு உள்ள தமிழ் இணைய முயற்சிகள் குறித்தும் தனிக்கட்டுரை எழுதலாம். தமிழ்மணத்தைச் சுற்றியுள்ள உயிர்ப்புள்ள வலைப்பதிவர் சமூகம் போன்று பிற இந்திய மொழிகளிலும் காண இயலாது. தமிழ்மணம் தமிழிலும் பிற மொழிகளிலும் வணிக வெற்றி பெற வேண்டும் என்பதே என் விருப்பமும். தமிழ், தமிழிணையம் வளர தமிழ் ஒரு வணிகப் பெறுமதி மிக்க மொழியாக இருப்பது மிக அவசியம். தமிழ்மணம் இலாப நோக்குடன் இருப்பதில் பிரச்சினையில்லை. ஆனால், அது இலாப நோக்குடையதாக பார்க்கத்தக்க வகையில் இருக்கையில், தன்னை எவ்வாறு இலாப நோக்கற்றதாக அறிவிக்கிறது என்று அறிய விரும்புவது விக்கிப்பீடியா கொள்கைகளுக்கு உட்பட்ட கேள்வியே. தமிழ்மணத்தின் இலாப நோக்கின்மை குறித்த என்னுடைய புரிதல் தவறாக இருந்தால், திருத்திக் கொள்வதில் தயக்கம் இல்லை. நன்றி--ரவி 18:53, 22 மே 2008 (UTC)[பதிலளி]

தமிழ்மணம்[தொகு]

செல்வராசு, கட்டுரைக்கு நேரடித் தொடர்பு இல்லாவிட்டாலும் பேச்சுப் பக்கத்தில் நீங்கள் விட்ட குறிப்பு தொடர்பாக ஒரு ஐயம். TMI ஒரு இலாப-நோக்கற்ற நிறுவனம் என்று கருதப்படுவது எப்படி? ஒரு NGO NPO வாக அது இயங்கும் நாட்டுச் சட்டப்படி பதிவு செய்யப்பட்டிருப்பதே போதுமானதா? தமிழ்மணத்தில் தற்போது விளம்பரங்கள் உண்டு என்பதால் அதனை இலாப-நோகற்றதாக என்னால் பார்க்க இயலவில்லை. இல்லை, இப்படி NGOவாகப் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் விளம்பரங்கள் மூலம் பொருள் ஈட்டுவது ஏற்கனவே பரவலாக உள்ள நடைமுறையும் NGO NPO சட்டத்துக்கு உட்பட்டதும் தானா? நன்றி--ரவி 11:33, 22 மே 2008 (UTC)[பதிலளி]

ரவி, வீணே விவாதிக்க எனக்கு விருப்பம் இல்லை. கூகுள் விளம்பரங்கள் இருப்பதால் ஒன்றை இலாப நோக்கற்ற நிறுவனம் என்று உங்களால் பார்க்க முடியாதது பற்றி எனக்குச் சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை. ஆனால், மேலே செல்வா இலாப நோக்கற்ற நிறுவனங்களின் நிதிநிலை, வருவாய், இத்யாதி பற்றித் தெளிவாகக் கூறியிருக்கிறார். என்னுடைய தகவல் டி எம் ஐ என்பது ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாக அமெரிக்கச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுப் பதியப்பட்ட நிறுவனம் என்பதைச் சொல்வது மட்டும் தான். (நீங்கள் NGO என்று சொல்வது என்னவென்றும் எனக்குப் புரியவில்லை). --இரா.செல்வராசு 01:15, 23 மே 2008 (UTC)[பதிலளி]

விக்கிமீடியா பவுண்டேசனையும் அது ஆண்டுதோறும் சேகரிக்கும் நிதியையும் நாம் மறந்துவிடுகிறோமோ என்னவோ. பார்க்க: விக்கிமீடியா பவுண்டேசனின் நிதியறிக்கை சம்பளமாக 415,006 டொலர்களும் பயணச் செலவுகளுக்கு 264,361 டொலர்களும்ம் பயன்படுத்தப்பட்டுள்ளன. நிதியை விளம்பரமாகத்தான் பெற வேண்டுமென்றில்லை; நன்கொடைகளாகவும் குவிக்கலாம். தன்னார்வத் தமிழ் இணையத் திட்டம் என்பதைத் திட்டவட்டமாக வரையறுத்துக் கொள்ளாமல் உரையாடுவது எல்லா வகைகளிலும் பயனற்றது. நன்றி. -கோபி

எனக்கு தமிழ்மணத்தை இப்போது நடத்திவரும் நிறுவனத்தைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் இந்தியாவில் trust என்ற நிறுவனங்கள் company என்பவற்றிலிருந்து வேறுபடுவது எவ்வாறென்றால் இவற்றின் வளங்களை தங்கள் ஆக்கு ஆவணத்தில் தெரிவித்த வகையில் மட்டுமே செலவழிக்க வேண்டும். மற்றபடி பொருள் ஈட்டக்கூடாது என்பதில்லை. இவை தங்கள் நோக்கங்களை நிறைவு செய்ய கம்பெனிகளைக்கூட நடத்தலாம். சில trust-கள் தனியார் நலனுக்காகக்கூட பதியலாம். (டாட்டா குழுமம்?) ஆனால் இவற்றின் முதல் உடன்படிக்கையில் நோக்கம் தெளிவாகக்குறிக்கப்பெற்று இவற்றிற்கு வருமான வரியில் விலக்கு தரப்படுவதில்லை. -- சுந்தர் \பேச்சு 02:37, 23 மே 2008 (UTC)[பதிலளி]

மன்னிக்கவும், செல்வராசு. Non-Profit Organisation என்பதுடன் Non-Government organisation என்பதனைக் குழப்பிக் கொண்டேன். Non-Profit Organisation குறித்த விக்கிப்பீடியா கட்டுரையில் A nonprofit organization (abbreviated "NPO", also "not-for-profit") is a legally constituted organization whose objective is to support or engage in activities of public or private interest without any commercial or monetary profit என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தான் விளம்பர வருவாய் இலாப நோக்காகப் பார்க்க இயலுமா என்று அறிய விரும்பினேன். ஏனெனில், இணையத்தில் கூகுள் விளம்பரங்கள், பிற banner விளம்பரங்கள் முதன்மையான வருவாய் வழிகளில் ஒன்று. இணையத்தில் நிறைய பேர் வருவாய் ஈட்டுவதே கூகுள் ஆட்சென்சு வைத்து தான். இங்கு TMI என்ற ஒரு நிறுவனத்தை விட்டு விடுவோம். விக்கிமீடியா நிறுவனம் கூட NPO தான். ஆனால், அது தன் செலவுகளை நன்கொடைகள் மூலமாகவே பெற்றுக் கொள்கிறது. செலவு, வருவாய்க் கணக்குகளைப் பொதுவில் வெளியிடுகிறது. வரும் வருவாய் முழுக்கவும் திட்டச் செலவுகளுக்ககே செலவிடுகிறது (வழங்கிச் செலவு, ஊதியச் செலவு..) எனவே, அதனை NPO என்று என்னால் உறுதிப்படுத்திக் கொள்ள இயல்கிறது. ஒரு இணைய நிறுவனம் தன்னை NPO என்று சொல்லிக் கொண்டால் அதனிடம் இருந்தும் இந்தச் செயற்பாடுகளை எதிர்ப்பார்கலாமா கூடாதா? இல்லை, அந்நிறுவனம், தான் பதிவு செய்த நாட்டு அமைப்புக்கு மட்டும் இச்செலவினங்களைப் பற்றித் தெரிவித்தால் போதுமா? ஒரு வேளை, TMIக்கு நன்கொடை அளிக்க முடிந்தால் அந்த உரிமையில் கணக்குகள் கேட்கலாம். TMI நன்கொடைகளைப் பெற்றுக் கொள்ளாததால் அது தன் செலவினங்கள், வருவாய் குறித்து பொது மக்களுக்குத் தெரிவிக்கத் தேவை இல்லையா? ஒரு NPO நிறுவனம் கணக்குகளைப் பொதுவில் வெளியிடாத நிலையில் அது இலாப-நோக்கற்றது என்று உறுதிப்படுத்துவதற்கான வழிகள் என்ன? அந்நாட்டு அமைப்பின் பதிவும் ஒப்புதலும் மட்டும் போதுமா? பயனர்கள் அனைவரும் இதை TMI என்ற தனி நிறுவனம் சார்ந்த ஒன்றாக இல்லாமல் பொதுவாகத் தெரிவித்தால் என் ஐயங்களைப் போக்கிக் கொள்வேன். நன்றி--ரவி 09:28, 23 மே 2008 (UTC)[பதிலளி]

ரவி, மன்னிக்கவும். இந்த இழையில் மேற்கொண்டு உரையாட (வாதாட) எனக்கு விருப்பம் இல்லை. உங்கள் பொது ஐயப்பாடுகளைத் தீர்த்துக் கொள்ள இணையத்தில் ஏராள வழியுண்டு. எனக்குக் கிடைக்கும் சிறு நேரத்தை இதைவிட ஆக்கபூர்வமானதாக விக்கியில் பங்களிப்பதன் மூலம் கழிக்க நினைக்கிறேன். --இரா.செல்வராசு 03:54, 24 மே 2008 (UTC)[பதிலளி]

பரவாயில்லை, செல்வராசு. உங்கள் நேரத்துக்கும் பொறுமையான பதில்களுக்கும் நன்றி. கட்டுரைப் பக்கம் எதிலும் இலாப-நோக்கற்ற தன்மை குறித்த குறிப்புகள் இல்லாத நிலையில் நானும் உரையாடலை வளர்க்க விரும்பவில்லை. இத்துறை குறித்த ஆர்வமுடைய எவராவது இலாப நோக்கற்ற நிறுவனம் என்ற தலைப்பில் கட்டுரை எழுதித் தர வேண்டுகிறேன். நற்கீரன்?--ரவி 04:40, 24 மே 2008 (UTC)[பதிலளி]

சரியாக பிரச்சனையை விளங்கிக் கொள்ளாமல் தனிப்பட்ட கருத்துகளை கொண்டு தமிழ் விக்கிபீடியா கட்டுரைகளை தொகுப்பது சரியானது அல்ல. எனவே நான் இந்தக் கட்டுரையின் நடுநிலைத் தன்மையை கேள்விக்கு உட்படுத்துகிறேன்.

வரலாறு திட்டம் குறித்தும் இங்கு சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. அது மிக நல்ல ஒரு முயற்சி. நானே அந்த திட்டத்தில் ஆரம்ப காலங்களில் இணைய முற்பட்டு பிறகு அமெரிக்க குடியேற்றத்தால் விட்டுப்போனது. அது குறித்து தனிப்பட்ட அளவில் எனக்கு தெரியும்.

அது வரையறக்கப்பட்ட ஒரு திட்டம் அல்ல. ஒரு நன்கொடை முயற்சி மட்டுமே.

அடுத்து தமிழ்மணம்

ஒரு இலாப நோக்கில்லா நிறுவனம் லாபங்களை பெறும் வேலைகளை செய்யலாம். ஆனால் பெறும் லாபங்கள் அந்த நிறுனத்தின் முக்கிய குறிக்கோளுக்காக பயன்படுத்த வேண்டும். விக்கிபீடியா ஆங்கில கட்டுரையை சரியாக படித்திருந்தால் அதிலேயே கீழ்க்கண்ட வரிகள் உள்ளன.

NPOs generally do not operate to generate profit, a characteristic widely considered to be defining of such organizations. However, an NPO may accept, hold and disburse money and other things of value. It may legally and ethically trade at a profit or hold investments, usually restricted to use any funds resulting from such commercial enterprises, solely and exclusively for attaining the organization's aims.

எனவே தமிழ்மணம் விளம்பரம் மூலம் வருவாயை பெறுவது அது தமிழ்மணம் தளத்தை நடத்த மாதந்தோறும் தேவைப்படும் நிதிக்காக (operational cost i.e., Hosting Expenses in the case of Tamilmanam) பயன்படுத்திக் கொள்வதாகவே கொள்ள முடியும்.

வரலாறு மற்றும் தமிழ்மணத்தை இங்கு சேர்ப்பதோ, சேர்க்காமல் இருப்பதோ எனக்கு ஒரு பொருட்டு அல்ல.

ஆனால் மாற்று எந்த வகையிலும் தன்னார்வத்திட்டம் அல்ல. அது தனக்கு பிடித்த எழுத்துக்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு வசதி. அவரவரின் சார்புகளுக்கு ஏற்ப கட்டுரைகளை பகிர்ந்து கொள்கிறார்கள். சிலவற்றை தாரகைகள் என்று அவர்களின் சார்புகளுக்கு ஏற்ப முன்னுரிமையும் கொடுக்கிறார்கள். தமிழ் இணையம், தமிழ் மொழி வளர்ச்சிக்காக மாற்று எதனையும் செய்து விடவில்லை. எனவே இது தன்னார்வத்திட்டம் அல்ல.

--சசி

தமிழ்சசி, தமிழ்மணம் குறித்த உங்கள் விளக்கத்தை ஏற்றுக் கொள்கிறேன். தமிழ்மணத்தை விட்டு விடுவோம். தன் வருவாய் - செலவுக் கணக்கைப் பொதுவில் வெளியிடாத நிலையில், ஒரு இலாப நோக்கற்ற நிறுவனம் தன் வருவாயை முழுக்க முழுக்க தன் நோக்கங்களை அடையவே செலவிடுகிறது என்பதைப் பொதுமக்கள் அறிந்து கொள்வது எப்படி? நாட்டில் நிறைய 'டுபாக்கூர்' இலாப நோக்கற்ற நிறுவனங்கள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இவற்றுக்கான உழைப்பையோ பொருளையோ ஒருவர் நன்கொடையாக வழங்கும் முன் அது உண்மையிலேயே இலாப நோக்கற்று தான் செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்வது எப்படி? இதுவே என் மனதில் எழுந்த கேள்வி. இதை இங்கு விக்கிப்பீடியாவில் எழுப்புவது பொருத்தமற்றதாகத் தோன்றுகிறது. எனவே, இதற்கு மேல் உரையாடலை வளர்க்காமல் விட்டு விடுகிறேன்.

இக்கட்டுரை முதலில் எழுதப்பட்ட போது, நான் மாற்று! பங்களிப்பாளர் என்ற காரணத்தால் அதைக் கட்டுரையில் சேர்க்கவில்லை. பிறகு, நற்கீரன் சேர்த்தார். நீண்ட நாள் பங்களிப்பாளரான நற்கீரனின் நடுநிலையில் எள் முனையளவும் விக்கிப்பீடியர் யாரும் ஐயமுறுவதில்லை. எனினும் அவரும் மாற்று! பங்களிப்பாளராக இருப்பதால், தற்போது மாற்று!ன் தன்னார்வத் தன்மை, திட்டத் தன்மை கேள்விக்குட்படுத்தப்படுகையில் அதைக் கட்டுரையில் தொடர்ந்து இடம்பெற வைக்க விரும்பவில்லை. எனவே, கட்டுரையில் இருந்து மாற்று! பெயரை விலக்கிக் கொண்டு இருக்கிறேன். மாற்று! ஒரு சிலரின் விருப்பங்களுக்கு ஏற்ப இடுகைகளைப் பகிரும் தளமாகவே இருக்கிறது என்று ஒரு சிலர் சொல்கின்றனர். இப்படி சொல்பவர்களும் இணைந்து பங்களிக்கத்தக்க திறந்த நிலையிலேயே மாற்று! இருக்கிறது என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். மற்றபடி, எந்தத் திட்டம் தமிழ் மொழிக்கும், இணையத்துக்கும் பங்காற்றுகிறது என்பதைக் காலம் தான் சொல்ல வேண்டும் :) --ரவி 19:24, 27 மே 2008 (UTC)[பதிலளி]

உங்களிடம் நான் விவாதம் எல்லாம் செய்ய விரும்பவில்லை, நேரமும் இல்லை. எனக்கு யார் மீதும் ஐயம் இல்லை. ஆனால் உங்கள் மீது மட்டும் உள்ளது :‍)

இந்த கட்டுரையின் POV வார்ப்புருவை நீக்கியிருக்கிறேன்

--சசி