பேச்சு:தஞ்சாவூர் வரதராஜப்பெருமாள் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம், @Dineshkumar Ponnusamy: குடமுழுக்கு பற்றி இன்றைய (21.8.2015) தினத்தந்தி நாளிதழில் வந்துள்ள செய்தி மேற்கோளாகத் தரப்பட்டுள்ளது.பிற செய்திகள் கிடைக்கும்போது சேர்க்கப்படும். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:17, 21 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

இரு கோயில்கள்[தொகு]

25 ஆகஸ்டு 2016 களப்பணி சென்றபோது தஞ்சாவூர் கீழ ராஜ வீதியில் வரதராஜப்பெருமாள் கோயில் என்ற பெயரில் ஒரு கோயில் இருப்பது அறியப்பட்டது. கோயிலுக்கு நேரில் சென்று திரட்டப்பட்ட செய்திகள், எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப் பதிவில் சேர்க்கப்பட்டன. முன்னரே இப்பெயரில் ஒரு கோயில் இருந்ததால் தெளிவிற்காக தனித்தனியாக துணைத்தலைப்புகள் தரப்பட்டுள்ளன. இரண்டாம் சரபோஜி காலத்திய கோயில் என்ற நிலையில் கீழ வீதியில் உள்ள கோயில் பதிவு முதலிலும் அடுத்த கோயில் பற்றிய பதிவு தொடர்ந்தும் எழுதப்பட்டுள்ளன. மேற்கொண்டு விவரம் பெறப்படும்போது பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:40, 27 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

கீழ ராஜ வீதி வரதராஜப்பெருமாள் கோயில்[தொகு]

ஜே.எஸ்.சோமசுந்தரம் பிள்ளை அவர்களுடைய (J.M.Somasundaram Pillai, The Great Temple at Tanjore, [Tanjore Palace Devastanams, II Edn 1958] Rpt 1994, Tamil University, Thanjavur) நூலில் List of temples attached to the Palace Devastanams, Tanjore என்ற தலைப்பிலான பட்டியலில் வ.எண்.35இல் இக்கோயில் Sri Varadarajaperumal Koil என்றும், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997இல் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள் என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் வ.எண்.37இல் இக்கோயில் அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:50, 2 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]