பேச்சு:தக்காணப் பீடபூமி

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தக்காணப் பீடபூமி என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


சரியான சொல்[தொகு]

Plateau - பீடபூமி, சமவெளி எது சரியானது?--Kanags \பேச்சு 13:31, 27 ஜனவரி 2008 (UTC)

பூமி (வடமொழி?) பீட்ம் (வடமொழி?), மேட்டுநிலம் எப்படி?--டெரன்ஃச் \பேச்சு 13:40, 27 ஜனவரி 2008 (UTC)

பள்ளி பாடபுத்தகங்களில் தக்காணப் பீடபூமி என்று உள்ளது. பீடபூமி என்பதற்கு சமவெளி சரியான மாற்றுச் சொல்லானால் தக்காணச் சமவெளி என்று மாற்றிவிடலாம். -- குறும்பன் 00:33, 28 ஜனவரி 2008 (UTC)

Plain - சமவெளி, Plateau - மேட்டுச்சமவெளி?? (மேட்டுநிலம் என்பது பொருத்தமான சொல்லாக தெரியவில்லை) -- குறும்பன் 01:26, 30 ஜனவரி 2008 (UTC)

பீடபூமி என்ற சொல் பயன்பாட்டில் எதுவும் பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை. வடமொழி என்பதற்காக நன்கு அறியப்பட்ட சொல்லை நீக்கி இன்னொரு சொல்லை பயன்படுத்துவது சிறிதும் சரியில்லை. இப்படி ஒவ்வொரு சொல்லின் சொற்பொருளாக்கத்தை ஆராய்ந்து, ஏதோ விதத்தில் ஒரு வடமொழி தாக்கம் இருந்தாலே அதை நீக்குவது (அது பழக்கப்பட்டதாக இருப்பினும்), மொழியினை செயற்கையாக தூய்மைப்படுத்தும் செயல். இது சரியே இல்லை. தயவு செய்து கண்மூடித்தனமான இந்த மனப்பான்மையை மாற்றிக்கொள்ளவும் వినోద్வினோத் 03:00, 30 ஜனவரி 2008 (UTC)

ஆம் வினோத். இந்த இடத்தில் பீடபூமி என்பதை முதன்மைப்படுத்தலாம். அதே வேளையில் மாற்றுப் பயன்பாடுகளை அடைப்புக் குறிகளுக்குள் கட்டாயம் தர வேண்டும். இரு சாரார் இக்கட்டுரையைப் படிக்க வாய்ப்புண்டு. ஒருவர் தமிழ்வழிக் கல்வி பயின்றோ அல்லது தமிழ் ஊடகங்களில் கேட்டோ இச்சொல்லை முன்னமே அறிந்திருக்கக் கூடும். அவர்களுக்காக பீடபூமி கண்டிப்பாக முதன்மைப்படுத்தப்பட வேண்டும். அதேவேளை புவியியலில் அறிமுகம் (தமிழில்) இல்லாதவர்கள் புலம்பெயர்ந்தவர் போன்றோரும் வரக்கூடும். அவர்கள் இதுவரை கேட்டிராவிடிலும் மேட்டு நிலம் என்று படித்தால் ஓரளவு நாம் விளக்க முனையும் பொருளின் தன்மையை உணரக்கூடுமல்லவா? (அண்மையில் ஸ்தாயி என்ற சொல்லைக் கண்டேன். சுட்டுப்போட்டாலும் சங்கீதம் வராத எனக்கு அது என்னவெனப் புரியவில்லை. சுர நிலை என்று அடைப்பில் சேர்த்தால் உதவும் என்பதால் சேர்த்தேன்.) அதற்காக இந்த மாற்றுச் சொற்களை அடைப்புக்குறிக்குள் தரலாம். இது வடமொழி-தனித்தமிழ் போன்றவைக்கு மட்டுமல்ல எளிய-அரிய அல்லது எவ்வகையிலாவது மாற்றுச்சொற்கள் இருக்குமிடத்தில்.
செயற்கையாகத் திணிப்பது என்பது ஒரு பார்வை. ஆனால் எண்ணிப் பார்த்தால், பெரும்பாண்மைத் தமிழர்கள் செய்தித்தாள், திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி, இணையம் போன்ற ஊடகங்களில் பங்களிக்கும் வாய்ப்பு இன்னும் வரவில்லை. ஆக எந்த ஒரு பயன்பாடும் இந்த குறுகிய வட்டத்தினரின் செயற்கைத் திணிப்பு தான். அப்படி திணிப்பது என்று வந்துவிட்டால் குறைந்தது வெவ்வேறு தமிழ்ச்சொற்களையாவது புழக்கத்தில் விடும் கடமை நமக்கு உள்ளதாகவே எண்ணுகிறேன். அப்படிப் பார்த்தால் இந்த வடமொழிச் சொற்களும் ஒரு நாளில் புகுத்தப்பட்டவைதானே? (திணிக்கப்பட்டவை என்ற வலிய சொல்லைப் பயன்படுத்தவில்லை)
ஒவ்வாரு மொழியும் கீழ்காணும் மூன்று வழிகளில் ஒன்றில் செல்கிறது.
  1. எழுத்து மொழி அவ்வளவாகப் புழங்காமல் அல்லது அவரவர் பேசும்வகையிலேயே எழுதும் வழக்கைக் கொண்டிருத்தல். இதனால் நாளடைவில் ஒரு மொழி பல மொழிகளாகப் பிரிகிறது. அல்லது ஒரேயொரு புதியமொழி உருவாகிறது.
  2. இறுக்கமான பரிந்துரை இலக்கணங்களை பேச்சிலும் எழுத்திலும் கடைப்பிடிக்க வலியுறுத்தும் மொழி செத்து விடுகிறது.
  3. இருதர நிலைப்பாடு (diglossia) கொண்டு மொழியும் உயிர்ப்புடன் விளங்கி பழைய சொற்கள் மற்றும் நூல்கள் வழக்கில் இருந்து ஒரு தொடர்ச்சி பேணப்படுகிறது.
தமிழ் இதில் மூன்றாம் வழியில் இதுவரை இருந்து வந்துள்ளது. அதை நாம் தொடர வேண்டுமா மாற்ற வேண்டுமா? -- சுந்தர் \பேச்சு 03:29, 31 ஜனவரி 2008 (UTC)

சுந்தர், நீங்கள் சொன்னது முற்றிலும் சரியானதே. வினோத் கூறியதில் எனக்கும் ஒரளவிற்கு உடன்பாடு உண்டு. பீடபூமி போன்ற பல சொற்கள் தமிழில் வழங்குகின்றன. பூகம்பம் என்பது இவ்வகையான சொற்களில் ஒன்று. மேட்டுநிலம், நிலநடுக்கம் என்று கூடவே வழங்குவதால் தவறில்லை. இது மொழித்தூய்மை என்றும், பிறமொழிச்சொற்களைக் களைவது என்றும் சிலர் நினைக்கின்றனர். அப்படி நினைப்பது மிகப்பல நேரங்களில் குறுகிய கண்ணோட்டம் கொண்டது. எப்படி சொற்கள் ஒன்றுக்கொன்று வலுவூட்டி உறுதிப்படுகின்றன, மொழி எப்படி இயல்பாய் வளர வழி கோலுகின்றது என்பதைப் பலரும் உணர்வதில்லை. இதற்காக எல்லா இடங்களிலும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று கூறவில்லை. நீங்கள் கூறியதுபோல எளிய-அரிய என்னும் பார்வையும் பலரும் கருத்தில் கொள்வதில்லை. துவிச்சக்ர வண்டியைவிட மிதிவண்டி நல்லசொல் (தமிழ் பொதுமக்களுக்கு) என்பது சொல்லாமலே விளங்கும். இதுபோல பற்பல சொற்கள் தமிழில் புதுவழக்கூன்றியுள்ளன. இப்போக்கு வரவேற்கப்படவேண்டிய ஒன்று.--செல்வா 04:27, 31 ஜனவரி 2008 (UTC) வினோத், இது "கண்மூடித்தனமான இந்த மனப்பாண்மை" அல்ல. எத்தனை அறிவார்ந்த, பயன்பெருக்கும் முறைமை என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். விளக்கி எழுத இப்பொழுது என்னால் இயலாது. இது பற்றி பிற இடங்களில் ஓரளவிற்கு விக்கியில் எழுதியுள்ளேன். ஒரு மொழி, கிளைத்துப் பன்முக வளர்ச்சி பெற அறிவூறும் சொற்கள் ஆளப்பெறுதல் வேண்டும். லேசர், பிக்சல், ரேடார், செல், குவாண்ட்டம், அத்துவிதம், தியானம் முதலிய பற்பல சொற்களை நாம் எடுத்து நமதாக்கிக்கொள்வதும் நல்லதே, ஆனால் எல்லா இடத்திலும் இம்முறையையே ஆளவேண்டும் என்றோ, மாற்று சொற்கள் தரலாகாது என்றோ கூறுவது தேவையற்றது. லேசர் என்பதைக் காட்டிலும் சீரொளி அல்லது சீரொளி மிகைப்பி என்று கூறுவதால் ஒன்றும் குறைந்து விடாது. லேசர் என்றும் சொல்லலாம், சீரொளி, சீரொளி மிகைப்பி என்றும் சொல்லலாம் என்னு நிலையில் இருப்பது நலம். --செல்வா 04:40, 31 ஜனவரி 2008 (UTC)

நன்கு பழக்கப்பட்ட ஒரு சொல்லினை நீக்குவதையே அவ்வாறு கூறினேன். செல்வா கூறியது, பூகம்பம், நிலநடுக்கம் போன்ற சொற்கள் சரி சமமான அளவில் பயன்பாட்டில் உள்ளது போல், ஒரு துனைப்பயன்பாட்டை உருவாக்குவதில் எனக்கு முழுக்க உடன்பாடு தான். அதே வேளை, ஒரு சொல்லை முற்றிலும் நீக்க முயலவது தவறு, அதில் இரு வேறு கருத்துக்கு இடம் இல்லை.

ஈருளை ஊர்தி என்பதை விட இரு சக்கர வாகனம் என்ற பயன்பாடு நன்று, என்பதையும் கொள்ளல் வேண்டும்.

மொழிகள் உறவாடும் போது தங்களுக்குள் சொற்கள் பரிமாறிக்கொள்வது இயற்கை. அப்படி இயற்கையாக தமிழ் மொழியில் சேர்ந்து, தமிழாகவே ஆகி விட்ட சொற்கள் ஏராளம். இதை தவிர்க்கமுடியாது, இதற்கு எந்த மொழியும் விதிவிலக்கல்ல. வில்லன் - சுத்த ஆங்கிலச் சொல். இது தமிழாக்கப்பட்டு, வில்லி, வில்லாதி வில்லன் என்ற சொற்கள் எழவில்லையா ? எனவே ஒரு மொழியில் ஒரு சொல் குறிப்பிட்ட காலத்துக்கு பொது வழக்கில் இருந்தால், அது அந்த மொழியின் ஒரு கூறாக ஆகிவிடுகிறது. ஆனால் இது போன்ற சொற்களின் வரலாற்றை ஆரய்ந்து அதை வேற்றுமொழிச்சொல் என நிறுவி பின்னர் நீக்குவதையே மொழியினை செயற்கையாக தூய்மைப்படுத்தும் கண்மூடித்தனமான மனபாண்மை எனக்கூறினேன். βινοδ வினோத் 05:57, 31 ஜனவரி 2008 (UTC)

வினோத், நான் ஆங்கில வழியின் பயின்றேன். புவியியல் என்றாலே கசக்கும். plateau என்றால் என்னவென்றே புரியாமல் மனனம் செய்து படித்து விட்டேன். அதற்கு தமிழ் வழியத்தில் "பீடபூமி " என்று அறிவேனே தவிர, பீடம் என்றால் என்ன என்றெல்லாம் யோசித்து புரிந்து கொள்ள முற்படவில்லை. பீடபூமி என்றால் என்ன என்று ஒரு மனச் சித்தரமும் இல்லாமல் இருந்தது. இந்த அறிவு கூட இல்லாமல் இருப்பதற்கு நான் வெட்கப்படவில்லை. நம்முடைய கல்வி முறையில் திறம் அவ்வளவே. இப்போது, மேட்டுநிலம் என்ற சொல்லைக் கண்டவுடன் எனக்கு பொட்டில் அடித்த மாதிரி புரிகிறது. சுந்தர் கூறும் எளிய சொற் பயன்பாடு என்பதை இங்கு பொருத்திப் பார்க்கலாம். இந்தச் சொல் பள்ளிக் கூடம் போய் படிக்காத பாமரருக்கும் புரியும். அவர்களாக இத்தகைய ஒரு நிலப்பரப்பை விவரிக்க முற்பட்டார்கள் என்றால் நிச்சயம் மேட்டு நிலம் என்று தான் சொல்வார்கள். களத்து மேடு, ஆத்து மேடு என்று சிற்றூர்களில் புழங்கும் சொற்களைக் கவனியுங்கள். பீடபூமி என்றெல்லாம் சொல்வார்கள் என்று கற்பனை கூட செய்ய இயலாது. சிற்றூரில் வளர்ந்தவன் என்ற முறையில் உலகம், மண், நிலம் என்ற சொற்கள் தான் மக்கள் பேச்சில் புழங்கக் கண்டிருக்கிறேன். பூமி பூசை என்ற சொல் மட்டும் விதி விலக்கு. பூசையே வேறு மொழி சொல்லாக இருக்கக்கூடும் போது, அதோடு சேர்த்து பூமி என்ற சொல்லையும் புகுத்தி இருப்பது வியப்புக்குரிய ஒன்று அல்ல. ஒரு முறை செல்வா planet earth என்பதற்குப் பதில் நிலவுலகம் என்ற சொல்லை ஆண்டார். அப்போது கடுமையான உரையாடல் நிகழ்ந்தது. ஆனால், விக்கியிலும் பொதுவாக தமிழிலும் ஆர்வமும் அனுபவமும் கூடக்கூட இது போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட சொல் வழக்குகளை ஏற்பதில் தயக்கம் காட்டக்கூடாது என்று தோன்றுகிறது. மண்ணில் இந்தக் காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமா என்னும்போது மண்=planet earth என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், அதே அறிவியல் வழக்கில் வரும்போது தயங்குகிறோம். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், இது நாம் scholarly சொற்கள் மீது வைத்திருக்கும் அளவு கடந்த மதிப்பு என்று. மலையாளம், தெலுங்கு, கன்னடத்தில் பல இலகுவான சொற்கள் இருந்தாலும் பாடப்புத்தக்கங்களிலும் எழுத்து வழக்கிலும் தேவையின்றி அளவுக்கு மீறிய வடமொழிக் கலப்பு இருப்பதாகப் படித்தும் நண்பர்கள் மூலமாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். பீடபூமி போன்ற சொற்கள் முதன் முதலில் தமிழ்நாட்டில் ஆளப்பட்ட போது அவற்றை ஆக்கியோர் வடமொழிப் புலமையும் பெற்றிருந்திருப்போராக இருக்கலாம். அதனால், அத்தகைய ஒரு சொல்லை ஆக்கி இருந்தது அவர்களுக்கு எந்த உறுத்தலும் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், அதற்காக அவற்றைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று இல்லை. தமிழ்நாட்டில் ஒரு plateau இருந்திருந்தால் கண்டிப்பாக மேட்டு நிலம் போன்ற சொற்களை ஆக்கியிருப்போம். அல்லது, இந்த நிலப்பரப்புக்களுக்குத் தமிழன் பயணம் மேற்கொண்டிருந்தால் அதைப் பற்றி ஒரு நல்ல தமிழ்ச் சொல்லை ஆண்டிருப்பான். ஒருவேளை, இலக்கியங்களில் இதற்கான சொல் ஒளிந்து கொண்டும் இருக்கலாம். ஆப்பிள் போன்ற இடுகுறிப் பெயர்ச்சொற்கள் எல்லாவற்றையும் தமிழாக்குவது சில வேளை செயற்கையாக இருக்கலாம். ஆனால், பீடபூமி என்பதே ஒரு காரணப்பெயர் என்கிற போது அதைத் தமிழாக்கிப் பயன்படுத்துவதில் தவறு இல்லை.

மாணவர்கள் வசதிக்காக பீடபூமி என்ற கட்டுரையை முதன்மைப்படுத்தலாம். ஆனால், பிற கட்டுரைகளில் plateauக்கள் குறித்து எழுதும் போது எல்லாம் பீடபூமி என்று தான் எழுத வேண்டும் என்று இறுக்க கொள்கை கொள்ளலாகாது. அங்கு, விரும்புவோர் மேட்டுநிலம் என்று எழுதிக்கொள்ளலாம். மேட்டுநிலம் கட்டுரையை பீடபூமி கட்டுரைக்கு வழி மாற்றலாம். மேட்டுநிலம் என்பதை பீடபூமி என்ற சொல்லை ஒழிக்க வந்த மாற்றுச் சொல்லாகப் பார்த்து எல்லா இடங்களிலும் அடைப்புக்குறிக்குள் தரத் தேவை இல்லை. எனக்கு, ஒரு தமிழனின் பார்வையில் எழுந்த இயல்பான சொல்லாக இது தோன்றுகிறது. எனவே, மேட்டுநிலம் என்ற சொல் பயன்படும் இடங்களில் அடைப்புக்குறி விளக்கம் இல்லாமல் சும்மாவே எழுதலாம். பூ என்று எழுதினால் என்ன, மலர் என்று எழுதினால் என்ன? விக்கி முழுக்க பூ என்று மட்டும் தான் எழுத வேண்டும் என்று கொள்கை வைக்க முடியுமா? நாளடைவில் இது எளிய தமிழ்ச் சொற்களைப் பரவலாக்கும். நிலநடுக்கம் போன்ற பரவலான சொற்களை ஆள்வதில் தவறில்லை என்கிறீர்கள். ஆனால், இந்த நிலநடுக்கம், பேருந்து, சட்டமன்றம் போன்ற சொற்கள் கூட ஒரு காலத்தில் எவராலோ அறிமுகப்படுத்தப்பட்டு அவை நகைப்புக்குள்ளான சொற்கள் தாம். இன்று, அவை இயல்பாகவில்லையா? ஒரு சொல் இலகுவாகவும், எளிதாகவும், நல்ல தமிழாகவும் அச்சொற்களைத் தயக்கமின்றி நாம் அனுமிதக்க வேண்டும். மக்களுக்குப் பிடித்த சொற்கள் நிலைக்கும். ஆனால், துவக்கத்திலேயே தடை சொல்வோமானால் ஒரு நல்ல சொல்லுக்குரிய வாய்ப்பே இல்லாமல் போய் விடும். --ரவி 06:57, 31 ஜனவரி 2008 (UTC)