பேச்சு:செல்ட்டிக் திடல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Celtic[தொகு]

மேற்படி ஆங்கிலச் சொல் சில வேளைகளில் செல்டிக் என்று குறிப்பிடப்பட்டாலும், பொதுவாக கெல்டிக் என்றே மொழியப்படுகிறது. இச்சொல்லைக் கொண்ட ஆங்கிலக் கட்டுரைகளில் விளக்கத்தைக் காணலாம்.--பாஹிம் (பேச்சு) 08:51, 17 சூலை 2014 (UTC)[பதிலளி]

இப்பூங்காவின் பெயருக்கும், செல்ட்டிக் அல்லது கெல்ட்டிக் என அழைக்கப்படும் மொழிக்கும் ஏதேனும் தொடருபுள்ளதா எனத் தெரியவில்லை. ஆனாலும் இப்பூங்கா செல்ட்டிக் பூங்கா என்றே அழைக்கப்படுகிறது.--Kanags \உரையாடுக 09:19, 17 சூலை 2014 (UTC)[பதிலளி]

Park என்னும் ஆங்கிலச் சொல் வருமிடமெல்லாம் பூங்கா என்று தவறாக மொழிபெயர்க்கப்படுவதைப் பார்க்கிறேன். இங்கே இச்சொல் திடல் என்றே மொழிபெயர்க்கப்பட வேண்டும். அவ்வாறே National Park என்று வருமிடங்களில் park என்பதை வனம் என்றோ சோலை என்றோ மொழிபெயர்க்கப்பட வேண்டும். Car Park என்று வந்தால் அதிலுள்ள park என்பதையும் பூங்கா என்று மொழிபெயர்க்காமல் தரிப்பிடம் என்று மொழிபெயர்க்கிறோமன்றோ. ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் என்று இங்கு எதுவுமில்லை. இடத்துக்குத் தக்கவாறே மொழிபெயர்ப்பு அமைய வேண்டும். ஒரு சொல், பல பொருள்.--பாஹிம் (பேச்சு) 13:51, 18 சூலை 2014 (UTC)[பதிலளி]

ஏற்கிறேன். தலைப்பை மாற்றி விடலாம். --மணியன் (பேச்சு) 04:14, 19 சூலை 2014 (UTC) Y ஆயிற்று --மணியன் (பேச்சு) 04:19, 19 சூலை 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செல்ட்டிக்_திடல்&oldid=1694740" இலிருந்து மீள்விக்கப்பட்டது