பேச்சு:சுடாலின்கிராட் சண்டை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுடாலின்கிரட் என்று எழுதுவது பிழை. ஸ் எழுத்தில் தொடங்கக் கூடாது எனில் இஸ்டாலின்கிரட் அல்லது இசுட்டாலின்கிரட் என்று எழுதவேண்டும். ஸ்டாலின்கிரட் என்றே எழுதலாம் என்பது எனது கருத்து. மயூரநாதன் 15:42, 18 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

ஸ்டாலின்கிராட் (கிரட் தவறு) என்றே மாற்றிவிடலாம்.--Kanags \பேச்சு 20:05, 18 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
இசுட்டாலின்கிராடு என்று எழுதுவது தமிழ் முறைப்படி சரியானது. ஸ்டாலின்கிராடு என்பதற்கு வழிமாற்றும் தரலாம். டகர ஒற்று எப்பொழுதும் வல்லினம். அதனை retroflex T ஆகத்தான் ஒலித்தல் வேண்டும். ஒவ்வொருவரும் தமிழை இப்படித் திரித்துக்கொண்டே போனால், தமிழ் ஒலிப்பு குட்டிசுவராகிவிடும். ஆபிரிக்கா என்று எழுதினால் Abirikkaa என்றுதான் ஒலித்தல் வேண்டும். ஆப்பிரிக்கா என்று எழுதினால் Apprikkaa என்று ஒலிக்க வேண்டும். தமிழ் ஒலிப்பு முறை ஒழுக்கம் உடையது, ஆனால் நுட்பம் மிக்கது. சிதைக்கலாகாது. செருப்புக்காக காலையே வெட்டிக்கொள்வது போல் இருக்கின்றது நம் திரிப்புகள். அருள்கூர்ந்து செவ்விய, அறிவார்ந்த தமிழ் ஒலிப்பு முறையைப் போற்றி மதிக்குமாறு வேண்டுகிறேன். ஓபன் என்று எழுதினால் Oban என்றுதான் ஒலித்தல் வேண்டும். ஓப்பன் என்று எழுதினால் Open என்று ஒலித்தல் வேண்டும். ஒலிப்பொழுக்கம் அற்ற ஆங்கில மொழியைப் பார்த்து எழுத்துப்பெயர்ப்பு செய்தல் மிகவும் கொடுமை. தமிழ் விக்கிப்பீடியாவில் இதனை நுழைக்கலாகாது. எல்லா பயனர்களும் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். --செல்வா 21:19, 18 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

சுடாலின்கிராடு என்று எழுதினால் என்ன பிழை? சிறு ஒலித்திருபு உள்ளது. இவ்வகை ஒலித்திரிபுகள் மொழிக்கு மொழி இருக்கத்தானே செய்யும். --செல்வா 21:54, 18 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

இது தொடர்பான கருத்தை ஆலமரத்தடியிலும் இட்டிருக்கின்றேன். இங்கே பார்க்கவும் --செல்வா 00:13, 19 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

மேலும் சில எடுத்துக்காட்டுகள்: சுவாமினாதன் என்று எழுதுவது தமிழ் முறை. ஸ்வாமிநாதன் என்று தமிழ் நலத்தைகெடுத்து, தமிழ் முறைமையை மீறி எழுதத் தேவை இல்லை. சுவர்னம், சொர்ணம் (ஸ்வர்னம்) , சுவர்கம் (ஸ்வர்கம்), சொர்கம், சுவாகா (ஸ்வாகா), சுவேத்தா, சுவேதாரணியன் (ஸ்வே(த்)தா, ஸ்வே(த்)தாரண்யன்), சுவாதி (ஸ்வாதி), தாபி, தாபித்தல் (வினை!!), தாபிதம் (ஸ்தாபி, ஸ்தாபித்தல், ஸ்தாபிதம்), தலவரலாறு (ஸ்தல வரலாறு)...என்று எத்தனையோ இடங்களில் முதலில் வரும் காற்றொலி சகர ஒற்றைத் (ஸ்) தமிழ்ப்படுத்தித்தானே ஆண்டு வந்திருக்கின்றோம். ஆழ்வார்கள் கூட சிரீதரா என்றுதானே எழுதுகிறார்கள். தமிழ்நலத்தின் மீது அக்கறை இல்லாதவர்கள், தமிழ் முறையை மீறி வலிந்து எழுதுவோர்களுக்காக தவறான பாதையைத் தேர்ந்து கொள்ளுதல் கூடாது. அனுமன், அனுமான் என்று எழுதுவதும், அரி, அரன் என்று எழுதுவதும் தமிழ் வழக்கம் ஹரி, ஹரன் என்று எழுதுவது வலிந்து தமிழ் முறையை மீறுவது, தமிழ் முறையைப் போற்றாமை. பிரபாகரன் என்று எழுதுவது தமிழ் முறை, ப்ரபாஹரன் என்று எழுதுவது வலிந்து தமிழ் முறையைக் கெடுப்பது. மொழிக்கு மொழி மாறும் பொழுது திரிபுகள் ஏற்படுவது இயல்பே. இதனைப் பெரிது படுத்தி, இழிவுபடுத்திப் பேசி தம் மொழியையே கெடுக்கிறார்கள் பலர். இது ஏற்புடையதன்று. --செல்வா 13:59, 19 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

செல்வா, "ஸ்" என்னும் எழுத்து வரும் சொற்களைத் தமிழ்ப்படுத்தி ஆள்வது பற்றி நீங்கள் சொல்வது எனக்கும் சம்மதமே. ஆனால் "சுடாலின்கிராடு" சரி என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "வ" கரம் தொடர்ந்து வரும்போது தான் முதலில் வரும் "ஸ்" "சு" ஆக மாறுகிறது. பிற இடங்களில் அவ்வாறு மாறுவதில்லை. நீங்கள் சுட்டிக்காட்டியது போல சில இடங்களில் "ஸ்" ஐ விட்டுவிட்டு எழுதலாம், "ற" கரம் "ர"கரம் தொடர்ந்து வரும்போது "ஸ்" "சி" ஆகவும் மாறும் (ஸ்ரேயா - சிரேயா, "ஸ்றீ" - சிறீ). ஆனால் "ஸ்காட்லாந்து", "ஸ்டோன்" போன்றவற்றைத் தமிழ் முறையைத் தழுவி எழுதுவதானால் "இசுக்காட்லாந்து", "இசுட்டோன்" என்று இகரத்தையும் சேர்த்துத் தான் எழுதவேண்டும். "சுகாட்லாந்து", "சுடோன்" என்று "ஸ்" ஐ "சு" ஆக மாற்றி எழுதுவது பிழை. மயூரநாதன் 16:30, 19 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
மயூரநாதன், பிழையா என்று நான் அறியேன், ஆனால் சு,சி என்று ஏதேனும் ஓர் உயிர் ஏறிய சகரமாக இருக்கலாம். சுகாத்லாந்து, சிகாட்லாந்து, இசுகாட்லாந்து என்று எப்படி இருந்தாலும் எனக்கு உடன்பாடே. இகரம் சேர்த்து எழுதுதல் ஒலிப்பதற்கும் எளிதானது. சுரோணி (ஸ்ரோணி) என்பன போன்ற சொற்கள் சுகரத்தோடும் வழங்குகின்றன. --செல்வா 16:45, 19 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
சில இடங்களில் மயூரநாதன் சொல்வதுபோல் இகரத்தைச் சேர்ப்பது சரியாகத்தான் படுகிறது. வழக்கில் இசுக்கூல் என்று இருப்பது போல. சுவாமிநாதன் போன்ற சொற்களில் இகரத்தை விட்டுவிடலாம். -- சுந்தர் \பேச்சு 17:57, 19 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
  • ஸ் க்கு அடுத்து ன, ர வந்தால் ஸ் - > சி ஆவது போல் எந்தெந்த எழுத்துகள் வந்தால் ஸ் -> சி ஆகும் என்று வரையறுப்பது உதவும். எடுத்துக்காட்டு - ஸ்னேகா -> சினேகா, ஆஸ்ம் - > ஆசிரமம்
  • இசுக்கூல் என்று எழுதுவது பேச்சு வழக்கிலேயே கூடுதலாக உள்ளது. எழுத்து வழக்கில் இ இல்லாமல் எழுதுவதே வழக்கமாக உள்ளது. ஸ் - > ச மாற்றத்தின் போது முதலில் இ சேர்க்கத் தேவை இல்லை என்று தோன்றுகிறது. ரகரத்தின் முன்பு இகரம் இடும் வழக்கமும் தமிழகத்தில் பெரிதும் அருகி வருகிறது.
  • சுடாலின்கிரட், சிடாலின்கிரட் என்று எப்படி எழுதினாலும் இடையில் d ஒலி அல்லவா வருகிறது ?? சிட்டாலின்கிராடு என்று எழுதுவது தானே சரி?--ரவி 19:38, 19 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
இசுக்கூல் என்பது பேச்சுவழக்கில் பெரும்பாலும் வழங்குவது உண்மைதான் ஆனால் எழுதும்போது எவரும் "இ" யைத் தவிர்த்துவிட்டு "சுக்கூல்" என்று எழுதுவது இல்லை. தமிழ் வழக்கு என்று பார்த்தால் இவ்விடயத்தில் சிக்கல் எதுவும் கிடையாது, விதிகள் நேரடியானவையும், தெளிவானவையாகவுமே இருக்கின்றன என்று நினைக்கிறேன். எனக்குத் தெரிந்தவரை சுடாலின்கிராடு, சுட்டாலின்கிராடு இரண்டுமே சரியல்ல. மயூரநாதன் 20:25, 19 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
நல்ல, அறிவார்ந்த முறை இருக்கும் பொழுது ஏன் அதனைக் கைவிடவேண்டும்? இசுட்டாலின்கிராடு என்று எழுதலாமே? இசுக்கூல் (பள்ளி) என்னும் ஒலிப்பு, வட இந்தியாவிலும் அப்படியே இசுக்கூல் என்றுதான். அவர்களால் ˘ச்கூல் என்று எழுத முடியும் (स्कूल) ஆனால் பெரும்பான்மையோர் இசுக்கூல் என்றுதான் கூறுகின்றனர். இதேபோல Substrate என்னும் சொல்லையும் சபி˘ச்ட்ரேட்டு (Sabistrate) என்கிறார்கள். இடையே வரும் 3-மெய்யொலிக் கூட்டத்தை ஒலிக்க இயலவில்லை. Clusters என்பார்களே அந்த செறிவான மெய்க்கூட்டல ஒலியை ஒலிப்பதில் பலருக்கும் இடர் உள்ளது. அது ஒரு மொழியின் இயல்பு இல்லை எனில், அதனை திணிப்பது மொழித்திணிப்பு இல்லாமல் என்னவென்று கூறுவது? எனவே இசுக்காண்டினேவியா (அல்லது இசிக்கேண்டினேவியா) , சுவீடன், இசுப்பெயின் அல்லது இசிப்பெயின் (எசுப்பானிய நாடு), இசுக்காட்லாண்டு (இசுக்காட்லாந்து), இசுக்காட்டீசிய நடனம் (Scottish dance), இடாய்ட்சு (Deutsch), என்றெல்லாம் எழுதலாம். மேலும், மெல்லொலி டகரம் (D) வர வேண்டுமெனில் இகரம் சேர்த்து எழுதினால் இயல்பாய் வரும். இடச்சு (Dutch), இடென்மார்க் (Denmark), இடேனீசிய பண்ணை (Danish farm), இடான்யூப் ஆறு (Danube River), இடாண்டிலியன் செடி (Dandelion) அல்லது இடேண்டிலியன் செடி, இடைனோசோர் (Dinosaur). இப்படியாக இகரத்தை முன்னே சேர்த்தால் g, d, b, dh ஆகிய ஒலிகள் கிட்டும் ஆனால் ja என்னும் ஒலி கிட்டாது. இகரம் சேர்ப்பதற்கு மாறாக முன்கொட்டு ( ' ) ஒன்றைச் சேர்ப்பது எளிதென்பது என் தனிக்கருத்து. 'டான்யூ'ப், 'டைனசோர், 'டாய்ட்சு, 'காந்தி , 'சானகிராமன், 'பில் கிளிண்ட்டன். எப்படியாகிலும், இதுபற்றிய கருத்து எல்லோருக்கும் ஓரளவிற்குத் தெளிவாகியிருக்கும். --செல்வா 22:58, 19 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

தலைப்பு எழுத்துப்பிழை[தொகு]

கட்டுரைத் தலைப்பில் "சுடாலின்கிராட்" சொல்லின் "கி" உடன் "்" சேர்ந்துள்ளது. எனவே தலைப்பைத் திருத்தவும்.--பிரஷாந் (பேச்சு) 07:16, 18 சனவரி 2013 (UTC)[பதிலளி]

நன்றி பிரஷாந்த், எவ்வாறு அந்த "்" ஒட்டிக்கொண்டதோ தெரியவில்லை.--Kanags \உரையாடுக 07:23, 18 சனவரி 2013 (UTC)[பதிலளி]