பேச்சு:சித்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சித்தர்கள் பற்றிய தகவல் ஒருங்கிணைப்புக்கான ஆரம்பமே[தொகு]

இக் கட்டுரை பல விவாதத்துக்குரிய கருத்துக்களை கொண்டிருக்கலாம். அவற்றை உரையாடலில் முன்வைக்கலாம், அல்லது கட்டுரையை மேன்படுத்தி உரையாடலில் தயவுசெய்து குறிக்கவும்.


மேலும், இக் கட்டுரை பல முனைகளில் விரிவு படுத்தப்பட வேண்டியுள்ளது. இக் கட்டுரை சித்தர்கள், சித்தர் மரபு போன்ற தகவல்களை ஒருங்கிணைப்பதற்கான ஆரம்பமே.


பட்டியல் இறுதியானதோ, அல்லது முழுவானதோ இல்லை.


வழமை போல, விக்கியின் மரபை ஒத்து அனைத்து விதயங்களும் தொடர் மேன்படுத்தலுக்கும், விரிவாக்கலுக்கும், கேள்விக்கும், இன்றைப்படுத்தலுக்கும் உரிதானவை.


--Natkeeran 15:03, 25 ஆகஸ்ட் 2005 (UTC)

'சித்தர் என்போர் பதினெட்டு பேர்' என்ற தவறான கணக்கு[தொகு]

"சித்தர் பாடல்கள் என்று வழங்கும் பாடல்கள் எண்ணிக்கை பல்லாயிரம் இருக்கும். கடந்த நூற்றாண்டில் அச்சு எந்திரங்கள் வருகையோடு செவிவழியாக வழங்கிய பாடல்களையெல்லாம் அச்சிலேற்றி பதினெண் சித்தர்கள் என்று பெயர் கொடுத்தனர். அது முதலாகச் 'சித்தர் என்போர் பதினெட்டு பேர்' என்ற தவறான கணக்கு மக்கள் மனத்தில் பதிந்துபோனது. உண்மையில் நூற்றுக்கு மேற்பட்ட சித்தர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். சித்தர்களின் பாடல்களை படிக்கும்போது அவர்களில் நான்கைந்து பிரிவினர் இருந்திருக்கின்றார்கள் என்பது தெரியவருகின்றது."

  • தொ. பரமசிவன். (2001). அறியப்படாத தமிழகம். சென்னை: காலச்சுவடு பதிப்பகம்.

--Natkeeran 14:38, 18 ஜூலை 2006 (UTC)

இது உண்மை. பதினெண் சித்தர் என்பது ஒரு குழுமரபு. இதனால் சித்தர்களின் எண்ணிக்கை என்பது பொருளல்ல. மிகப்புகழ் பெற்ற சிவ வாக்கியர் பதினெண் சித்தருள் ஒருவராகக் கருதப்பட்டாலும் இவர் அப்பட்டியலில் இல்லை. சித்தர்கள் மொழியில் நுட்பம், கமுக்கம் (secret), பரிமொழிகள் (coded messages, language) பல உண்டு. எனவே அவசரப்பட்டு எதையும் மாற்ற வேண்டாம். பதினெண் சித்தர் என்பது பதியை மனதில் பதிய எண்ணும், எண்ணுவிக்கும் சித்தர் என்றும் பொருள் கொள்ளலாம். இதுதான் பொருள் என்று நான் கூற வரவில்லை. மறை நுட்பப்பொருள் உண்டு என்பதை வலியுறுத்துகிறேன். --C.R.Selvakumar 14:48, 18 ஜூலை 2006 (UTC)செல்வா

சுட்டிகள்[தொகு]

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:21, 14 மே 2007 (UTC)

விசமத்தொகுப்பா?[தொகு]

சித்தர்களின் கொள்கை என்ற உபத்தலைப்பில் வரும் இப்பதிவுகள் இது விசமத்தொகுப்பா?--த* உழவன் 06:23, 30 ஏப்ரல் 2010 (UTC)

திஸ்கியில் இருந்ததை ஒருங்குறிக்கு மாற்றியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 08:48, 30 ஏப்ரல் 2010 (UTC)
  • Kanags---வணக்கம்.
  • 'உருவம் இல்லா உண்மை அவன்'.
  • மறைந்திருந்த ஆண்டவனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 10:12, 30 ஏப்ரல் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சித்தர்&oldid=2469168" இருந்து மீள்விக்கப்பட்டது