பேச்சு:சார்ல்ஸ் பிராட்லா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நகுலன், மிக்க நன்றி! இக்கட்டுரையை விக்கிநடைக்கு ஏற்றவாறு திருத்தி செய்ய வேண்டியுள்ளது. ஆனால் நீங்கள் நல்லதொரு கட்டுரை எழுதியுள்ளீர்கள். இங்கு இட்டு பகிர்ந்தமைக்கு நன்றி. இங்கர்சால் பற்றியும் ஒரு கட்டுரை விரிவாக எழுத வேண்டும். --செல்வா 23:22, 24 மே 2008 (UTC)[பதிலளி]

தமிழகத்தவர்கள் Charles என்பதை ஏன் சார்லஸ் அல்லது சார்லெஸ் எனக் கூறுகிறீர்கள் எனத் தெரியவில்லை. சார்ல்ஸ் அல்லது சார்ள்ஸ் என்பது தானே சரியான உச்சரிப்பு? யாராவது விளக்க வேண்டும். இலங்கையில் சார்ல்ஸ் என்று தான் உச்சரிக்கிறார்கள். அதுவே சர்ரியானது என்பது என் நிலைப்பாடு. சார்ல்ஸ் பிராட்லா என்பதையே முன்னிலைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.---Kanags \பேச்சு 01:39, 25 மே 2008 (UTC)[பதிலளி]
கனகு நீங்கள் கூறுவது சரிதான், ஆனால் சார்லஸ் என்று எழுதுவது, தமிழர்கள் தாங்கள் ஒலிப்பதற்கு சற்று எளிதாக இருக்கும் என்று திரித்து எழுதுகிறார்கள். இரண்டுக்கு மேல் மெய்யெழுத்துக்கள் தொடர்ந்து வரும் கூட்டங்கள் (ர்ல்ஸ்) ஒலிப்பதற்கு மிகவும் கடினமானவை. தமிழில் இவற்றை கூடாது என்று விதியும் கூறுகிறது (ஆனால் நாம் பல விதிகளை ஏற்கனவே மீறுகிறோம்!) நான் 'டாய்ட்ச் என்று எழுதுவதும் தவறு என்று பலர் சுட்டுகிறார்கள். எனவே டாய்ட்சு என்று எழுதுவதால், அந்த கூட்டுத் தனிமெய்களின் கடுமை சற்றுகுறைகின்றது. ஆங்கிலத்தில் இதனை cluster என்பார்கள். இப்படி மெய்யெழுத்து கூட்டுகள் தமிழ் மரபுக்கு மிக முரணாக வருவது. பிராட்லா என்று எழுதுவதும் முதல் மெய்யெழுத்தில் தொடங்கலாகாது என்பதால். இல்லாவிடில் ப்ரா'ட்லா என்றும் எழுதலாம். பிரான்ஸ் என்று எழுதுவதும் இத்தகு எண்ணங்களால்தான். தற்பொழுது தமிழில் சில விதிமுறைகளை மீறுவதும், சிலவற்றை காப்பதும் என்பதான குழப்ப நிலைதான். தமிழில் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்னும் முறைகேடான நிலையே இன்று பல இடங்களில் பின்பற்றப்படுகின்றன (எ.கா: செய்தி ஊடகங்கள்). சார்ல்ஸ் பிராட்லா என்பதை முன்னிலைப் படுத்தவேண்டும் என்று எல்லோரும் விரும்பினால், எனக்கும் உடன்பாடே. --செல்வா 01:57, 25 மே 2008 (UTC)[பதிலளி]