பேச்சு:சாயல்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சாயல்குடி பற்றிய தகவல்களை நீக்க பரிந்துரைக்கப்பட்டுளது.தமிழனின் பெருமையினை வெளிக்கொணர்ந்திருக்கும் இந்த அகழ்வாராய்சியினை இந்து நாளிதழ் படத்துடன் வெளியிட்டுள்ளது.இக்கட்டுரையினை அகற்றுவதால் இந்த நிகழ்வு வெளியுலகிற்குத் தெரியாமல் போகலாம்.இதனை யாரும் திருத்தவும் இல்லை,புதிய பெயரில் எழுதவும் இல்லை.இந்தப் புதிய தகவல் பயன்ற்றது என்று கருதுகிறீர்களா? அருள்கூர்ந்து இந்த கட்டுரையினை திருத்தி விக்கி நடையிலும் தரத்திலும் விளக்குமாறு தாழ்மையுடனும் பணிவுடனும் வேண்டுகிறேன்.விக்கி நண்பர்கள் சிலரது செயல்பாடுகள் தமிழ் வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லை. அருண்தாணுமாலயன்.

@Arunthanumalayan மற்றும் AntanO: கட்டுரையிலுள்ள தகவல் பயனுள்ளது எனினும் தனிக்கட்டுரையாக இருக்கும் வகையில் இல்லை என்பதால் சாயல்குடி பற்றிய தகவல்களை நீக்க பரிந்துரைக்கப்படவில்லை, மாறாக சாயல்குடி அகழ்வாராய்ச்சி கட்டுரையை நீக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றெண்ணுகின்றேன்.
திஇந்துவில் வந்த இக்கட்டுரையைக் குறிப்பிடுகிறீர்களா? ஆம் எனில் கட்டுரையின் தலைப்பிலேயே அகழாய்வு செய்ய கோரிக்கை என்றுதானுள்ளது. திஇந்துவைத் தவிர வேறெங்கேனும் குறிப்பிடப்பட்டுள்ளதா என்றும் தெரியவில்லை. மேலும் ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மையத்தைப் பற்றிய பிற தகவல்கள் இருப்பின் சிறப்பாக இருக்கும்.
நாமனைவரும் தன்னார்வத் தொண்டர்களே! எனவே மாறான எண்ணம் தவிர்த்து, இக்கட்டுரையிலுள்ள தகவல்களை சாயல்குடி கட்டுரையில் இணைத்து மேம்படுத்தலாம். - ʋɐɾɯɳபேச்சு 18:18, 5 ஆகத்து 2016 (UTC)
@Arunthanumalayan: நீக்கல் வார்ப்புரு இட்டு பலநாட்கள் கடந்தும் அதனை மேம்படுத்தவில்லை. விக்கிக்கேற்ற கட்டுரைகள் எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. ஆனால் கட்டுரை வெறும் செய்தியாக அமைந்து இருந்தது. இன்னும் உங்களுக்கு விக்கி நடைமுறை விளங்காவிட்டால் தயவு செய்து கேளுங்கள். அதைவிடுத்து, விக்கி நண்பர்கள் சிலரது செயல்பாடுகள் தமிழ் வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லை என்ற விமர்சனம் நியாயமற்றது. இங்கு பலர் தரமான கலைக்களஞ்சியம் அமைய வேண்டும் என்றே செயற்படுகின்றோம் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஆகவே, தரமற்ற கட்டுரைகளை நீக்க அல்லது திருத்த எங்கள் செயற்பாடுகள் அமையும்.
@Wwarunn:, புரிந்து கொள்ளலுக்கு நன்றி. இக்கட்டுரையுடன் முன்னைய தகவலை இணைத்துள்ளேன். --AntanO 00:50, 6 ஆகத்து 2016 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சாயல்குடி&oldid=2100909" இருந்து மீள்விக்கப்பட்டது