பேச்சு:சான் பத்தீட்டு பெரென்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பார்வதி, அருள்கூர்ந்து தவறாக நினைக்காதீர்கள் இவர் பெயரில் வரும் Jean என்னும் முதற்பெயர் " ஜீன்" அன்று. ழான் என்பது போல ஏறத்தாழ ஒலிக்கும் (இப்படித் தங்களை அழைத்துக்கொள்ளும் தமிழறிந்த பிரான்சிய மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பிரான்சிய நாட்டினர் உள்ளர்; இவர்கள் தவிர பல பிரான்சிய நண்பர்களின் பெயரை நேரில் கேட்டிருக்கின்றேன்.). தமிழில் முதலில் ழகரம் வராது என்பதால் (இது அறிவடிப்படையில் அமைந்த விதி!), இழான் என்று எழுதினால் பொருத்தமாக இருக்கும். அவர்கள் மொழியிலும் "ஜ" கிடையாது. அருள்கூர்ந்து வளர்முகமாக இங்கே நான் கூறவந்த செய்தியை அணுக வேண்டுகிறேன். நாம் இப்படி ஒருவருக்கு ஒருவர் கலந்துரையாடி நமக்குள் திருத்தங்கள் செய்வதுகொண்டு உருவாக்குவது இங்கு முறையும் வழக்கமும் ஆகும். நீங்கள் தவறாகக் கருத வேண்டாம் --செல்வா 20:30, 19 பெப்ரவரி 2012 (UTC)

இங்கே ஆங்கிலச்சொல் measure என்பதில் வரும் s போல என்று காட்டியுள்ளார்கள். சற்றே காற்றொலி கலந்த ழ அல்லது ழ்+துளியூண்டு ஷ என்பது போல என்று கொள்ளலாம். ஏற்கனவே பலரால் ஆளப்படும் பெயர்ப்பு முறை ழான் அல்லது இழான். --செல்வா 20:48, 19 பெப்ரவரி 2012 (UTC)
என்ன செல்வா இது? நீங்கள் அருள்கூர்ந்து என்ற சொல்லை எல்லாம் பயன்படுத்த வேண்டாம். தாராளமாக மாற்றுங்கள். அல்லது நானே தற்போது நகர்த்தக் கற்றுக் கொண்டுள்ளேன். மாற்றிவிடுகிறேன். எனக்கு தமிழ் தவிர(அதிலும் கொஞ்சம்தான்) பிற மொழி அறிவு அவ்வளவு இல்லை.:)--Parvathisri 04:47, 20 பெப்ரவரி 2012 (UTC)

பிரெஞ்சு மொழியில் Jean (ஆண் பெயர்) என்பது zhahn என்றவாறு பலுக்கப்படும். தமிழில் பலர் ழான் (இழான்) என எழுதுகின்றனர். தலைப்பு மீண்டும் மாற்றப்பட வேண்டும். perin பெரென் எனப் பலுக்கப்படுகிறது. ஏன் சான் பாப்தித்து பெரென் என எழுதக்கூடாது?--Kanags \உரையாடுக 08:02, 20 பெப்ரவரி 2012 (UTC)

பார்வதி, மிக்க நன்றி. தலைப்பு மாற்றம் ஒரு புறம் இருக்கட்டும், ஒலிப்பு பற்றிய கருத்துகள் ஒருபுறம் இருக்கட்டும், நீங்கள் இக் கட்டுரையை மிக நன்றாக வளர்த்தெடுத்திருக்கின்றீர்கள்! பாராட்டுகள்! கனகு சிறீதரன், நீங்கள் சொல்வது போல மாற்றலாம் எனினும் "பாப்தித்து" என்பதுபோல ப் வராது என்று நினைக்கின்றேன். பல பிரானிசியரின் முதற்ப்பெயர் Jean-Baptiste என்பது போல வருகின்றன (இடைக்கோடிட்டு எழுதும் வழக்கம் அதிகம் என்பர்). இதனை "ழான் ப'த்தீஸ்ட்" என்பது போல ஒலிக்கிறார்கள் நாம் சான்/(இழான்) பத்தீட்டு பெரென் என்று கூறலாம். முதல் பகுதி சான்/இழான் என்பதைப் பொதுவாக எல்லா பிரான்சிய "Jean" என்பதற்கும் ப்யன்படுத்தலாம். Baptiste என்பதில் அவர்கள் p ஐ ஒலிப்பதாகத் தெரியவில்லை. ப'ட்டீஸ்ட்/ப'த்தீஸ்ட் என்று நீட்டி ஒலிக்கிறார்கள். எனவே சான்/இழான் பத்தீட்டு பெரென் எனலாம் என்று நினைக்கின்றேன். ஏதோ சிறிய செய்திக்காக அதிகம் அலட்டிக் கொள்வது போல சிலர் நினைக்க்கூடும், ஆனால் ஒன்றைச் செய்தால் திருத்தமாகச் செய்வோமே என்பதே குறிக்கோள். சில செய்திகள் சிலருக்குப் புதியதாகவும் இருக்ககூடும். இணணயத்தில் தேடிப் பார்த்ததில் hearnames என்னும் தளமும், மேலும் பல அருமையான சுட்டுகளை கூகுளாண்டவர் தருகின்றார். கனடிய வானொலியும், பிரான்சிய வானொலிகளும் இணையத்தில் கிடைக்கின்றன. எனவே உறுதிசெய்து கொள்வதும் முன் எப்போதையும் விட எளிது.--செல்வா 14:24, 20 பெப்ரவரி 2012 (UTC)