பேச்சு:சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சொந்தக்கருத்துக்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதாக இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. நடந்து முடிந்த இலக்கிய மாநாடொன்று பற்றிய தகவல்களை மட்டும் கட்டுரை பரவலாக உள்ளடக்குதல் நல்லது. அம்மநாடு பற்றி எழுந்த சர்ச்சைகளையும் கருத்தாடல்களையும் தனி துணைத்தலைப்பாக்கலாம். மாநாடு பற்றிய அறிமுகத்திலேயே தணிக்கை பற்றிய கட்டுரையாளரின் ஊகம் தேவையற்றது. நடந்து முடிந்த மாநாடு பற்றியதாக இக்கட்டுரையின் நடை மாற்றப்படவேண்டும். இது நடக்கப்போகுமொரு மாநாட்டை அறிமுகப்படுத்தும் நடையில் உள்ளது. --மு.மயூரன் 15:01, 10 சனவரி 2011 (UTC)[பதிலளி]


//கா. சிவத்தம்பி[7], எஸ். பொ போன்ற இலங்கையின் முக்கிய எழுத்தாளர்கள் பலரும் இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளனர்.// என்ற வரி தவறான தகவலைக் கொண்ட்ண்டிருப்பதுடன் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ள இணையப்பக்கமும் இணையத்தில் இல்லை. இவ்வரி கட்டுரையிலிருந்து நீக்கப்படுகிறது. சிவத்தம்பி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார். --மு.மயூரன் 15:07, 10 சனவரி 2011 (UTC)[பதிலளி]

கட்டுரை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011 என்ற தலைப்புக்கு மாற்றப்படவேண்டும். --மு.மயூரன் 12:22, 11 சனவரி 2011 (UTC)[பதிலளி]

மாற்றலாம்.--Kanags \உரையாடுக 12:23, 11 சனவரி 2011 (UTC)[பதிலளி]

//ஈழ ஆதரவு தொடக்கம் பல்வேறு அரசியற்பார்வைகள் சுதந்திரமாக வெளிப்படுத்தப்பட வாய்ப்பு வழங்கப்பட்டது.// ஈழ ஆதரவு குறித்துப் பேசியவர்களின் பாதுகாப்புக்கு தி. ஞானசேகரன் உத்தரவாதம் தந்திருந்தாரா?--Kanags \உரையாடுக 12:23, 11 சனவரி 2011 (UTC)[பதிலளி]

இல்லை. ஆனால் எந்தவிதமான மட்டுறுத்தல்களோ தணிக்கைகளோ இருக்கவில்லை. நேர மட்டுறுத்தல் மட்டுமே செய்யப்பட்டது. நானறிய உலகில் எந்தவொரு மாநாட்டிலும் பேசப்படும் கருத்துக்களுக்கு பேசியவரே பொறுப்பெடுக்கவேண்டிய நிலையில் இந்தக்கேள்வி எனக்குப் புரியவில்லை. --மு.மயூரன் 12:43, 11 சனவரி 2011 (UTC)[பதிலளி]


விமர்சனங்கள் என்ற துணைத் தலைப்பு பொருத்தமானதா (விமர்சனம் என்பது எப்போதும் குற்றச்சாட்டுகளாக மட்டுமே அமையாது என்பதால்) , அல்லது மாநாடு தொடர்பான எதிரான, சார்பான கருத்துக்கள் அனைத்தும் மாநாடு தொடர்பான சர்ச்சைகள் என்பது போன்ற தலைப்பின் கீழ் உள்ளடக்கபப்டவேண்டுமா? --மு.மயூரன் 12:45, 11 சனவரி 2011 (UTC)[பதிலளி]