பேச்சு:சனவரி 14

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்ப் புத்தாண்டு தைப்பொங்கல் தினத்தன்று தான் என தமிழ் நாடு அரசால் கூறப்பட்டுள்ளது. இதற்கும் திருவள்ளுவர் ஆண்டுக்கும் என்ன தொடர்பு? திருவள்ளுவர் ஆண்டு அனேகமாக தைப்பொங்கலுக்கு அடுத்த நாள் வருவது என்றே நினைக்கிறேன். சரிதானா?.--Kanags \பேச்சு 10:32, 11 ஜனவரி 2009 (UTC)

தமிழக அறிவிப்பால் இரு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முதலாவது தமிழ்ப்புத்தாண்டு சித்திரையில் இல்லாமல் தை மாதம் முதல் நாளாக மாற்றப்பட்டுள்ளது. இரண்டாவது மாற்றம், முன்பிருந்த 60 "தமிழ் ஆண்டுகள்" சுழற்சி முறையை விட்டுவிட்டு தொடர்ச்சியான ஆண்டுக் கணக்கில் இருக்குமாறு செய்திருக்கிறார்கள். மாட்டுப்பொங்கலுக்கு அடுத்த நாள் திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடுவது அவர் நினைவாக, அவரைப் போற்றும் முகமாகக் கொண்டாடப்படுவது. ஆனால் தை மாதத்தில் தொடங்கும் ஆண்டுகளின் எண்ணிக்கையைத் தொடர்ச்சியாக கணக்கிட திருவள்ளுவரின் ஆண்டு வரிசையைக் கொள்கிறோம். எனவே பிரபவ, விபவ ..சர்வதாரி, விரோதி.. ஆகிய "தமிழ் ஆண்டுகள்" தை மாதத்தில் தொடங்கும் புதிய தமிழ் ஆண்டுகளுக்குச் செல்லாது. திருவள்ளுவர் ஆண்டு 2040 (கிரிகோரியன் ஆண்டு 2009 இல்) ஏப்ரல் 14 ஆம் நாள் இனிமேல் தமிழ் விரோதி ஆண்டு தொடங்காது :) இது வெறும் வேடிக்கைக்காகக் கூறுகிறேன். இப்பொழுது 2009 இல் நடக்கும் ஆண்டு சர்வதாரி, ஏப்ரல் 14 ஆம் நாள் விரோதி ஆண்டு தொடங்கும். ஆனால் அது தமிழக அரசு ஏற்பு பெற்ற தமிழ்ப்புத்தாண்டு அல்ல. --செல்வா 16:10, 11 ஜனவரி 2009 (UTC)
நன்றி செல்வா, கட்டுரையில் இந்துமதி என்ற பயனர் சில மாற்றங்களைச் செய்தார். அதனாலேயே சில விளக்கங்கள் கேட்டேன்.--Kanags \பேச்சு 22:18, 11 ஜனவரி 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சனவரி_14&oldid=2170306" இலிருந்து மீள்விக்கப்பட்டது