பேச்சு:சங்ககால விளையாட்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்புள்ள சோடாபாட்டில்! விளையாட்டு - சங்ககாலம் என்னும் கட்டுரையைச் சங்ககாலத்தில் விளையாட்டு என்னும் தலைப்பிட்டு மாற்றியுள்ளீர்கள். தலைப்பு பொருத்தமானதே. எனினும் ஒன்று.

  1. விளையாட்டு - அண்மைய காலம்
  2. விளையாட்டு - இடைக்காலம்
  3. விளையாட்டு - வளர்ச்சி மாற்றங்கள்
  4. விளையாட்டு - ஒப்புமை

என்னும் தலைப்புகளில் கட்டுரைகள் எழுத உள்ளேன்.
அப்போது தேடுவொருக்கு என் பழைய தலைப்பே உகந்ததாக இருக்கும்
எனவே பழைய தலைப்பிற்கே திருப்பிவிட வேண்டுகிறேன். அன்புள்ள --Sengai Podhuvan 07:20, 8 சூலை 2011 (UTC)[பதிலளி]

ஐயா, விக்கி தலைப்பிடலில், இடைக்கோட்டை (-) மிகப்பெரும்பாலும் தவிர்த்து வருகிறோம். தவிர்க்க முடியாத இடங்களில் மட்டுமே இடைக்கோட்டைப் பயன்படுத்துகிறோம். மேலும் ஒரே முன்னொட்டு கொண்டுள்ள பல தலைப்புகள் தேடலில் சில குழப்பங்களையும் ஏற்படுத்த வல்லன. அண்மையக் காலத்தில் விளையாட்டு, இடைக்காலத்தில் விளையாட்டு, விளையாட்டின் வளர்ச்சி மாற்றங்கள் போன்ற தொடரான தலைப்புகளைப் பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். இடைக்கோட்டுத் தலைப்புகளை வழிமாற்றாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது என் கருத்து. --சோடாபாட்டில்உரையாடுக 07:30, 8 சூலை 2011 (UTC)[பதிலளி]