பேச்சு:கைத்தொலைபேசி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

'கைத்தொலை பேசி' எனும் 'செல்போன்' பற்றி ஓர் அற்புதமான கவிதையைத் தமிழில் திரு. தங்கப்பா அவர்கள் தந்துள்ளார். அனைவரும் படித்துச் சுவைக்க இதனை விக்கிப்பீடியாவில் வெளியிடுவது தக்கது என்று பதிவு செய்துள்ளேன்.--Meykandan 14:53, 31 மே 2010 (UTC)[பதிலளி]

இக்கவிதையில், எது விக்கிப்பீடியா கொள்கைகளுக்கு எதிர் என்று எனக்கு விளங்கவில்லை! தெரிவித்தால் அதன்படி இனிவரும் பதிவுகளில் நடந்துகொள்ள ஏதுவாக இருக்கும்!--Meykandan 14:59, 31 மே 2010 (UTC)[பதிலளி]

காப்புரிமை பெற்ற ஆக்கங்களை விக்கிப்பீடியாவில் உள்ளீடு செய்யக்கூடாது. விக்கிப்பீடியா உள்ளடக்கங்கள் அனைத்தும் காப்புரிமை அற்றவை. நீங்கள் கொடுத்துள்ள கவிதையின் காப்புரிமை பற்றித் தெரியவில்லை. மேலும் இது காப்புரிமை அற்றது எனில் விக்கிமூலங்களில் இணைக்கலாம். விக்கிப்பீடியாவின் உள்ளடக்கம் மாற்றப்படத் தக்கதாக இருக்கவேண்டும். நன்றி. --சிவக்குமார் \பேச்சு 15:14, 31 மே 2010 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம். பதிப்புரிமை விலக்கு இருந்தாலும் கூட கவிதைகளை இங்கு இடலாகாது. கைப்பேசி பற்றிய அறிவியல் நோக்குக் கட்டுரைகளையே இங்கு எழுதுவது தகும். en:Mobile phone, நகர்பேசி பார்க்கவும்--ரவி 17:16, 31 மே 2010 (UTC)[பதிலளி]

மெய்கண்டான், இக்கவிதைக்கு "காப்புரிமை விலக்கிருந்தால் மட்டும்" இதனை விக்கிமூலத்தில் இடுங்கள். விக்கிப்பீடியாவில் தகவல்கள் மட்டுமே இடம்பெற வேண்டும். இதனை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். எனவே இதனை இங்கிருந்து நீக்கலாம். நன்றி.--Kanags \உரையாடுக 22:26, 31 மே 2010 (UTC)[பதிலளி]

காப்புரிமை விலக்கு இருந்தால் கூட என்னென்ன ஆக்கங்களை விக்கிமூலத்தில் இடலாம் என்பதற்கு ஒரு வரையறை தேவை. என்ன வரையறை என்பதை இனி மேல் தான் கூடிப் பேசி முடிவெடுக்க வேண்டும். இக்கவிதையை விக்கிமூலத்தில் இடலாமா எனத் தெளிவில்லை. அதாவது, புத்தகமாக வந்தவற்றை மட்டும் வெளியிடலாமா அல்லது தனிக்கட்டுரைகள் / கவிதைகளைக் கூட வெளியிடலாமா? இவற்றுக்குத் தர அளவுகோல் ஏதும் உண்டா? காப்புரிமை விலக்கு என்ற பெயரில் தமிழ்நாட்டுக் கவிஞர்கள் எல்லாம் நேரடியாக விக்கிமூலத்தில் எழுதினால் தாங்குமா :) --ரவி 13:13, 1 ஜூன் 2010 (UTC)

வணக்கம். நன்றி திரு.ரவி அவர்களே! கவிதைகளை மூலத்தில் இடவேண்டும் என்பது நல்ல அறிவுரைதான்! எனக்கும் கவிதையை விக்கிமூலத்தில் இடுவதுதான் சரி என்று படுகின்றது. ஆனால்,தமிழ்நாட்டுக் கவிஞர்கள் எல்லாம் விக்கிமூலத்தில் எழுதினால் தாங்குமா? என்று கூறியிருந்தீர்கள். அவர்கள் எழுதினால் என்ன தவறு? கலைக்களஞ்சியத்தில் எல்லாத்தகவல்களும் படைப்புக்களும் இடம்பெறுவதுதானே சரி! ஆனால், தரம் குறைந்துபோகவாய்ப்புண்டு. என்ன செய்வது? எனக்கும் புரியவில்லை! ஆனால் ஒன்று, நல்ல கவிதை என்றால் அதனை இதழில் வந்திருந்தாலும் சரி, புத்தகமாக வந்திருந்தாலும் சரி விக்கிப்பீடியா மூலத்தில் பதிவுசெய்வது நன்று என்பது என் எண்ணம், காப்புரிமை வாங்கி. ஏனென்றால் அதனை-தரமான கவிதையை- எல்லாரும் படித்துச் சுவைக்க வாய்ப்புண்டுதானே? மேலும், எல்லாரும் எல்லாவற்றையும் தேடிப்பிடித்துப்படிப்பது இயலாதுதானே! புத்தகமாக வந்திருப்படைக்கூட விட்டுவிடலாம். ஆனால் இதழ்களில் வந்துள்ள சுவையான கவிதைகளை அதனைக்கண்ணுற்றோர் விக்கியில் பதிவுசெய்வது கட்டாயமான ஒன்று என்று நான் எண்ணுகின்றேன்.என்ன செய்யலாம் என்று சிந்தித்து முடிவு செய்யலாம். இதுபற்றிச்சிந்திக்கக் களம் அமைத்துக்கொடுத்தமைக்கு நன்றி!--Meykandan 04:35, 2 ஜூன் 2010 (UTC)

விக்கிமூலத்தில் இடக்கூடிய ஆக்கங்களின் காப்புரிமை பற்றி அறிய: s:Wikisource:பதிப்புரிமை பக்கத்தைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 06:30, 2 ஜூன் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கைத்தொலைபேசி&oldid=531883" இலிருந்து மீள்விக்கப்பட்டது