பேச்சு:கே. எஸ். ராஜா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

//ஈழ இயக்கங்களுள் ஒன்றான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் கருத்துப்படி கே. எஸ். ராஜா ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்டளைப்படி கொலை செய்யப்பட்டார்[1].//

யார் அந்த முன்னாள் உறுப்பினர்? பெயராவது குறிப்பி்டப்படுவது அவசியம். எனக்கு இலங்கை நடப்பு விவரங்கள் தெரியாது. எனினும், ஆனால், கொலைக்குற்றப்பழியை ஆதாரமில்லாமல் (அது உண்மையாக இருந்தாலும் கூட) சுமத்துவது விக்கிபீடியாவின் நம்பகத்தன்மைக்கு கேடு விளைவிக்கும். குற்றம் சாட்டியவரின் நம்பகத்தன்மை, அவர் காட்டும் ஆதாரங்களின் நம்பகத்தன்மை ஆகியவற்றை பொருத்து இந்த வரியை வைத்திருப்பதா நீக்குவதா என்று தீர்மானிக்கலாம்--Ravidreams 12:44, 17 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

ரவி, தலைப்பை மாற்றியமைக்கு நன்றி. நீங்கள் கேட்டுக் கொண்டதற்கேற்ப சில தகவல்களைச் சேர்த்துள்ளேன்.--Kanags 13:11, 17 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

மாற்றங்களுக்கு நன்றி, கனக்ஸ். இது போன்ற விதயங்களில் இலங்கையை சேர்ந்தவர்கள் கவனத்தோடு கட்டுரைகளை பார்த்து வருமாறு வேண்டிக் கொள்கிறேன். தமிழ் விக்கிபீடியாவின் நம்பகத் தன்மையை நிறுவினால், இங்கிருந்து செய்யக்கூடிய சாத்தியங்கள் நிறைய உண்டு. --Ravidreams 13:36, 17 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கே._எஸ்._ராஜா&oldid=83128" இலிருந்து மீள்விக்கப்பட்டது