பேச்சு:குடியேற்றவாதக் காலத்துக்கு முந்திய யாழ்ப்பாணச் சிற்பங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
A statue in archaeological museum, Vavuniya

@Mayooranathan: வவுனியா தொல்பொருள் காட்சிச்சாலையிலும் சில சிலைகள் உள்ளன என நினைக்கிறேன். இப்படத்திலுள்ள சிலை பற்றிய குறிப்பை தொலைத்து விட்டேன். இது எச்சிலை எனக் குறிப்பிட முடியுமா? நேரமிருந்தால் யாழ்ப்பாண அருங்காட்சியகம் மீண்டும் செல்வேன். அப்போது ஏனைய சிலைகளையும் படம் பிடித்துவிடுவேன். --AntanO 05:37, 23 செப்டம்பர் 2015 (UTC)

இங்கிருந்து சிலை பற்றிய தகவல் கிடைத்தது. மகிசா (மஹிசா) சுமந்தரி (மஹிசாசுரமர்த்தினி?), கி.பி. 14 - 17 நூற்றாண்டு; செட்டிக்குளம், வவுனியா. --AntanO 06:19, 23 செப்டம்பர் 2015 (UTC)
அன்டன் கடந்த சில நாட்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தேன். யாழ்ப்பாணம் அருங்காட்சியகத்துக்கும் சென்றிருந்தேன். அங்கு பார்த்தவற்றை அடிப்படையாகக் கொண்டும், யாழ்ப்பாணத்தில் கிடைத்த சில கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டும் இச் சிற்பங்கள் குறித்த கட்டுரைகளை எழுதினேன். வவுனியா அருங்காட்சியகத்தில் உள்ள சிற்பங்கள் குறித்து நான் அறிந்திருக்கவில்லை. படத்திலுள்ள சிலைக்கான தலைப்பு மகிசாசுரமர்த்தனி என்று இருக்கவேண்டியதைத்தான் அவ்வாறு எழுதியிருப்பார்கள் போல் தெரிகிறது. பொதுவாக மகிசாசுரமர்த்தனிக்கு எட்டுக் கைகள் இருப்பதுடன் அசுரனைக் கொல்வதுபோல் இருக்கவேண்டும் என்றும் கூறுவர். எனினும், யாழ்ப்பாண அருங்காட்சியகத்தில் காணப்படும் மகிசாசுரமர்த்தனி எனச் சொல்லப்படும் சிலையிலும் அசுரன் கானப்படவில்லை. அதனால்தான் இந்திரபாலா இது மகிசாசுரமர்த்தனி என்பது குறித்து ஐயம் கொண்டிருந்தார். ---மயூரநாதன் (பேச்சு) 08:48, 24 செப்டம்பர் 2015 (UTC)
👍 விருப்பம் --AntanO 15:15, 24 செப்டம்பர் 2015 (UTC)

புதிய பகுப்பு[தொகு]

இக்கட்டுரையையும், அதன் கீழுள்ள கட்டுரைகளையும் புதிய பகுப்பு ஒன்றுக்குள் சேர்க்க வேண்டும். குடியேற்றக் காலத்துக்கு முந்திய யாழ்ப்பாணச் சிற்பங்கள் அல்லது யாழ்ப்பாணத்தில் குடியேற்றக் காலத்துக்கு முந்திய சிற்பங்கள்? பரிந்துரைகள் ஏதாவது?--Kanags \உரையாடுக 08:20, 23 செப்டம்பர் 2015 (UTC)

குடியேற்றக் காலத்துக்கு முந்திய யாழ்ப்பாணச் சிற்பங்கள் என்றே ஒரு புதிய பகுப்பை உருவாக்கலாம். இது போலவே பிற அருங்காட்சியகங்களில் உள்ள இதுபோன்ற சிற்பங்களின் தகவல்கள் கிடைத்தால், குடியேற்றக் காலத்துக்கு முந்திய வன்னிச் சிற்பங்கள், குடியேற்றக் காலத்துக்கு முந்திய திருகோணமலைச் சிற்பங்கள், குடியேற்றக் காலத்துக்கு முந்திய மட்டக்களப்புச் சிற்பங்கள் எனப் பகுப்புக்களை உருவாக்கிக் கட்டுரைகளை எழுதலாம். --மயூரநாதன் (பேச்சு) 08:54, 24 செப்டம்பர் 2015 (UTC)