பேச்சு:கம்பி வடத் தொலைக்காட்சி
Appearance
கம்பி வடம்: இதற்கு இணையான ஆங்கிலச் சொல்லைத் தந்தால் நல்லது.--Kanags \பேச்சு 08:36, 29 ஜூலை 2008 (UTC)
- வடம் என்பது cable என்பதற்கு நேரான சொல். இங்கு கம்பி வடம் என்று இருப்பது மின்கம்பி வடம் என்பதன் சுருக்கமாக உள்ளது. பல அடுக்கு உறைகள் இருப்பதால் இவை சற்று தடிமனாக இருக்கும். எனவே இவற்றை வடம், கம்பி வடம் என்று அழைப்பர். தேர்வடம் என்பது தேர் இழுக்கும் மிகவும் தடிப்பான கயிற்றுக்கு பெயர். --செல்வா 21:21, 4 ஆகஸ்ட் 2008 (UTC)
- கம்பி வடம் என்பது மின்கம்பி வடத்தை (cable) குறிப்பதாகும். இது தொலைபேசி இணைப்புகள், நீள்தொலைவு தொலைதொடர்பு, தொலைக்காட்சி மற்றும் பிறத் தரவு வடங்களுக்கும் பொதுவாக உள்ளது. ஆனால் கட்டுரை கம்பி வடம் ஊடகம் வழியான தொலைக்காட்சிக்கான பயன்பாட்டிற்கு குறிப்பாக உள்ளது. எனவே தலைப்பை கம்பி வடத் தொலைக்காட்சி என மாற்றப் பரிந்துரைக்கிறேன். மாறாக இக்கட்டுரையை பொதுப் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு ஒழுங்குபடுத்தி கம்பி வடத் தொலைக்காட்சி குறித்த வேறு தனிக் கட்டுரை வடிக்கலாம். பிறர் கருத்துக்களை எதிர்நோக்குகிறேன்.--மணியன் (பேச்சு) 13:43, 21 சனவரி 2013 (UTC)