உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கனிகொடா அத்திமரம் உவமை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொதுவாக, நாம் விக்கியாக்கம் செய்யும் பொருட்டு உள்ளிணைப்புகள் தரும்போது, கட்டுரைத் தலைப்பு தொடர்பாக ஆர்வமூட்டக்கூடிய பிற தலைப்புகள் தாண்டியும் உள்ளிணைப்புகள் தருகிறோம். இது சரியான முறை தானா என்பது சிந்தனைக்குரியது. எடுத்துக்காட்டாக, இக்கட்டுரையை படிப்பவருக்கு, மத்தேயு, மாற்கு, பரிசுத்த ஆவி குறித்து அறிய ஆவல் எழுவது இயல்பாக இருக்கலாம். ஆனால், கனி, மரம், ஆண்டு, தீ ஆகிய உள்ளிணைப்புகளை பின்பற்றிப் படிக்க ஆவல் எழுமா என்பது கேள்விக்குரியது. இது போன்ற உள்ளிணைப்புகளைத் தவிர்க்கலாம் என்பது என் பரிந்துரை. அளவுக்கதிகமான சிகப்பு இணைப்புகள் மட்டுமல்ல, நீல இணைப்புகள் கூட வாசிப்பனுவத்துக்கு ஊறாகத் தான் அமையும். உள்ளிணைப்புகளின் எண்ணிக்கை விக்கிபீடியா தர அளவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது என்றாலும் வெறும் எண்கள், புள்ளவிவரங்களை பற்றி கவலைப்படாமல் படிப்பவருக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் பக்கத்தை வடிவமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இருக்கிற கட்டுரைக்கு எல்லாம் உள்ளிணைப்பு தராமல் கட்டுரைத் தலைப்பில் நெருங்கிய தொடர்புடைய கட்டுரைகளுக்கு மட்டும் உள்ளிணைப்பு தர வேண்டும்.--ரவி 11:20, 23 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

உவமைக் கதை? கனி கொடா அத்திமரம்?

[தொகு]

உவமானக் கதை என்பதற்கு பதில் உவமைக் கதை என்றும் கனிகொடா மரம் என்பதற்கு பதில் கனி கொடா மரம் என்று பிரித்தும் எழுதலாமா? கனிகொடா என்பதை ஒரு சொல்லாக (பெயராக) நினைத்து குழம்புவதற்கு வாய்ப்பு உண்டு--ரவி 11:22, 23 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]