பேச்சு:கண்டோனிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வழிமாற்று நீக்கல் பரிந்துரை[தொகு]

Cantonese எனும் மொழியை, எல்லோரும் கண்டோனீஸ் என்றுதான் ஹொங்கொங்கில் ஒலிக்கின்றனர். தமிழில் "ஸ்" கிரந்த எழுத்தை அகற்றிவிட்டு எழுதுவதானால் எளிதாக கண்டோனிசு என எழுதலாம். அவ்வாறு இருக்கையில் காந்தோனீசிய மொழி என ஏன் எழுதப்பட்டுள்ளது என்று புரியவில்லை. முற்றிலும் வேறான ஒரு பெயராக அப்பெயர் காணப்படுவதுடன் நான் கண்டோனீசு என இட்டிருப்பதற்கு வழிமாற்றும் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் குறிப்பிட்ட அக்கட்டுரையில் நான்கு வரியேனும் இல்லை. தயவுசெய்து அந்த வழிமாற்றை நீக்கிவிட பரிந்துரைக்கிறேன். --HK Arun 05:53, 19 சனவரி 2011 (UTC)

இது ஒரு Exonym; தமிழ் மொழி ஒலிப்புமுறை டகரங்களை தகரங்களாக்கி விடும் (எ. கா: இண்டியா ->இந்தியா; இண்டோனேசியா ->இந்தோனேசியா; இங்க்லாண்ட்->இங்கிலாந்து). இது முற்றிலும் வேறான பெயர் அல்ல; எனவே அக்கட்டுரையில் இரண்டையும் கொடுத்து விடலாம். ஒரு கட்டுரை சிறியதாக இருப்பதால் அதை நீக்குவதில்லை, புதியதாக அதில் சேர்த்து விரிவுபடுத்தலாம். (விக்கி ஒரு கூட்டு முயற்சி, பிறர் தொடங்கிய கட்டுரைகள், பிழையாகவோ, குறைபாடுகளுடனோ இருந்தால் அவற்றை சரி செய்வது தான் வழக்கம், நீக்கிவிட்டு புதிதாகத் தொடங்குவதல்ல)--சோடாபாட்டில்உரையாடுக 06:04, 19 சனவரி 2011 (UTC)
சோடா, குறுங்கட்டுரை என்ற படியால் அதனை நீக்க வேண்டியதில்லை. ஆனாலும், நீங்கள் தந்துள்ள முதல் இரண்டு எடுத்துக்காட்டுகளும் உகந்தவை அல்ல. இந்தியாவில் இருந்து தான் இண்டியா ஆனது. அதேபோல் இந்தோனேசியாவில் இருந்து இண்டோனேசியா ஆனது. கண்டோனீசு என எழுதுவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன். கண்டம், காண்டம் எனத் தமிழில் சொற்கள் உள்ளவையே?--Kanags \உரையாடுக 06:13, 19 சனவரி 2011 (UTC)
ம்ம்ம் நீங்கள் சொலவது சரிதான், இங்கு எக்சோனிம் ஒத்துவராது என்றே தோன்றுகிறது. ஆனால் ese எனபது ஆங்கில விகுதி போல உள்ளதே, அதை அப்படியே தமிழில் கொள்ளலாமா?--சோடாபாட்டில்உரையாடுக 06:16, 19 சனவரி 2011 (UTC)
இச்சொல்லை மேலும் ஆராய வேண்டும். காண்டோன் என்ற பகுதியில் தோன்றியதால் இது ஆங்கில விகுதியுடன் காண்டோனீசு ஆகியுள்ளதாகத் தெரிகிறது. நீங்கள் சொல்வதும் சரியே. உருசிய மொழியில் காண்டோன் என்ற சொல்லையே எடுத்துத் தங்கள் இலக்கண விதிப்படி, காண்டோன்ஸ்க்கி என அழைக்கிறார்கள். தமிழில் காண்டோன் மொழி எனலாமா? அல்லது வேறு ஏதாவது பரிந்துரைகள் தாருங்கள்.--Kanags \உரையாடுக 06:32, 19 சனவரி 2011 (UTC)

தமிழர்களான நம்மில் கண்டோனிசு மொழியை யார் பேசிகிறார்கள்? யார் படிக்கிறார்கள்? பதில், அநேகமாகமானோர் ஹொங்கொங் வாழும் மக்களாகத்தான் இருக்க முடியும். (நானறிய வேறு யாரும் இம்மொழியை கற்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இல்லை) குறிப்பாக ஹொங்கொங்கில் கல்வி கற்கும் குழந்தைகள். அன்மையில் ஹொங்கொங்கில் வாழும் ஏனைய சமுகத்தவரும் ஹொங்கொங்கரின் மொழியை கற்க வேண்டும் எனும் சட்டமும் இயற்றப்பட்டுள்ளது. எனவே அவர்களே "கண்டோனிசு" என ஒலிக்கும் போது நாம் செய்யும் மாற்றங்களால் எதற்கு? . --HK Arun

சோடாபாட்டில், //(விக்கி ஒரு கூட்டு முயற்சி, பிறர் தொடங்கிய கட்டுரைகள், பிழையாகவோ, குறைபாடுகளுடனோ இருந்தால் அவற்றை சரி செய்வது தான் வழக்கம், நீக்கிவிட்டு புதிதாகத் தொடங்குவதல்ல)// விக்கியின் கொள்கைகள் பற்றிய உங்கள் தொடர் விளக்கங்கள் தேவையற்றது. நான் கடந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் விக்கி பற்றி அறிவேன். தவிர நான் அக்கட்டுரை நீக்க பரிந்துரைக்கவில்லை. அப்பெயர் மாற்றலைத் தான் பரிந்துரைத்துள்ளேன். மேலும் விக்கியில் நான் தொடங்காத, அதேவேளை முழுமையாக்கிய பல கட்டுரைகள் இருப்பதனை பார்க்கவும். --HK Arun 06:41, 19 சனவரி 2011 (UTC)
அருண், ”கண்டோனிசு” எனபதே இதன் இயற்பெயரா அல்லது அதன் ஆங்கில வடிவமா?. ese என்பது ஆங்கில விகுதி போல உள்ளதால் (canton +ese) கேட்கிறேன். பொதுவாக பெயர்களை மொழிமாற்றம் செய்யும் போது வேறொரு மொழி வழியாக அதனை மொழிபெயர்க்காமல் நேரடியாக மூலப் பெயரிலிருந்து தமிழுக்குக் கொணர்தல் ந்ல்ல பழக்கம். எ.கா கன்னடம் என்பது பல ஆண்டுகளாக ஆங்கிலப் புத்தகங்களில் canareese என்று வழங்கப்பட்டு வந்தது. அது போலவா இது? Is "cantoneese" the native word or the anglicised word? If it is an anglicised word, it is preferable to use the native form --சோடாபாட்டில்உரையாடுக 06:41, 19 சனவரி 2011 (UTC)

நேரடியாக கண்டோனிசு மூல மொழியில் இருந்து மொழிமாற்றம் செய்வது என்பது சாத்தியமற்றது. தமிழில் அம்மா என்று மென்மையாகக் கூறினாலும், அழுத்தமாகக் கூறினாலும், ஏன் சத்தமிட்டு கூவினாலும் கூட ஒரே பொருள்தான். ஆனால் கண்டோனிசு மொழியில் ம் எனும் ஒலியை மென்மையாக ஒலிக்கும் போது ஒரு பொருளும், அழுத்தமாக ஒலிக்கும் போது இன்னொரு பொருளும் என ஒன்பது ஒலிப்பு வகைகள் கொண்ட மொழி. (Cantonese has 9 tones and 3 base tone levels) அதனை IPA எழுத்துக்களை கொண்டும் எழுதிக்காட்டவும் முடியாது. அதனால் மக்களின் புழக்கத்தில் உள்ள வகையில் (கண்டோனிசு) எழுதுவதுதான் அது குறிப்பிட்டோருக்கு சென்றடைய வழிவகுக்கும். --HK Arun 07:02, 19 சனவரி 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கண்டோனிசு&oldid=670262" இருந்து மீள்விக்கப்பட்டது