உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஏழாம் கிளியோபாற்றா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது தமிழ் விக்கிப்பீடியாவா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. தமிழ் முறைக்கு ஒவ்வாத ட்ரா என்று குறிக்கப்பட்டுள்ள இடங்களை தமிழ் முறைக்கேற்ப ற்றா என்று மாற்றுவதை வேண்டுமென்றே மீண்டும் பிழையான வழக்கத்துக்குக் கொண்டு செல்வது போல் தெரிகிறது.--பாஹிம் (பேச்சு) 03:14, 7 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

தமிழ் முறைப்படி மாற்ற வேண்டுமானால் கிளியோபாத்திரா என மாற்றப்பட வேண்டும். கிளியோபாற்றா என்பது வழக்கில் உள்ள சொல் அல்ல.--Kanags \உரையாடுக 03:16, 7 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

கிளியோபாத்திரா என்பதுதான் சரியென்பதற்கு என்ன ஆதாராம்? ஆதாரமில்லாமல் தமிழ் முறை என்றால் எப்படி ஏற்பது? கற்றாழை, சிற்றோலை, குற்றேவல் என்பன போன்று ஏராளமான தமிழ்ச் சொற்கள் tra என்ற உச்சரிப்புக்கு இயைவது தமிழில் ஏற்கனவே இருப்பதே.--பாஹிம் (பேச்சு) 03:22, 7 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

நீங்கள் தந்த உதாரணங்களில் tra ஒலிப்பு இல்லை.--Kanags \உரையாடுக 03:28, 7 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

அப்படியா? கற்றளி, கற்றாழை, பெற்றோர், சிற்றேடு, மற்றவன் போன்ற சொற்களில் றகரத்தை எப்படி மொழிய வேண்டும்?--பாஹிம் (பேச்சு) 03:32, 7 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

பாஃகிம், யாழ்பாணத்தமிழர்கள் -ற்ற- என்பதை -tta- என ஒலிப்பதாக நினைக்கின்றனர், தமிழ்நாட்டுத் தமிழர்கள் -tra- என ஒலிப்பதாகக் கருதுகின்றனர். யாழ்ப்பாண ஒலிப்பிலும் நுட்பமாய் சிறிதளவு R ஒலிப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது. தமிழ்நாட்டுத் தமிழ் ஒலிப்பில் மிகையாக R ஒலி TRA என வருவதும் உண்மை. றகர ஒலியானது பல்லண்ணத்துக்கும் நடுவண்ணத்துக்கும் இடைப்பட்ட ஒலி. Post-alveolar ஆனால் பிழையாக alveolar பல்லண்ண ஒலியாகக் கருதுகின்றார்கள். கற்றாழை, சிற்றோலை, குற்றேவல் என்பதை kattaazhai, cittOlai, kuttEval என ஒலிப்பதாகக் கொள்கின்றார்கள். இது ஓரளவுக்கு உண்மைதான் ஆனால் அதில் நுட்பமாய் R ஒலி உண்டு. மிகப்பெரும்பாலான தமிழர்கள் 67-70 மில்லியன் தமிழர்கள் katraazhai, citrOlai, kutrEval எனவே ஒலிக்கின்றார்கள். இதே போலவே இன்றைக்கு, கொன்றை, சென்றேன் போன்ற சொற்களையும் வேறுபடுத்திக் காட்ட முடியும். பொதுவாக பாஃகிம் நீங்கள் சொல்வதுதான் சரி. --செல்வா (பேச்சு) 23:55, 7 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

நான் மேலே காட்டிய உதாரணங்களில் tr ஒலிப்பு இல்லையென்று ஒருவர் கூறினாலும், பொதுவாக யாழ்ப்பாணத் தமிழர்களும் அவற்றை tr என்றே மொழிகின்றனர். கற்ற பின் நிற்க என்பதை எவரும் katta pin nitka என்று மொழிவதில்லை.--பாஹிம் (பேச்சு) 01:45, 8 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]