பேச்சு:உயிரகச்செதுக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png உயிரகச்செதுக்கு உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கட்டுரையில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள்[தொகு]

பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை! கட்டுரையின் தலைப்பை மாற்றியுள்ளீர்கள். இந்தப் பெயர்கள் பொருத்தமானதாகத் தெரியவில்லை. இங்கு பெயர் பற்றி உரையாடியுள்ளோம். தயவுசெய்து கவனியுங்கள். தவிர இதனை ஒரு ஆய்வு என வரவிலக்கணப்படுத்தல் சரியாகப்படவில்லை. --கலை (பேச்சு) 18:26, 3 மே 2018 (UTC)

ஆய்வு என்பதற்கு மாற்றாக ஓர்வு என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். ஓர்வு எனும் சொல் சோதனைக்கு நிகரான தமிழ்ச்சொல்லாகும். இழைய ஆய்வு, நுள்ளாய்வு என்பன தமிணையக் கல்விக்கழக மருத்துவ அகராதியில் உள்ள சொற்கள். மேலும் பல இடங்களில் கட்டுரையில் சோதனை எனும் பொருளை விட எக்சாமினேஷன் என்ற சொல்லே பரவலாகப் பயின்று வருவதால் ஆய்வு என்ற சொல்லைப் பயன்படுத்தினேன். இங்கு சோதனை/ஓர்வு எனும் சொல் மேலோட்டமானதாகவே அமையும். இங்கு நுண்ணோக்கியும் உயிர்வேதியியல் முறைகளும் பயன்படுவதால் ஆய்வு என்பதே பொருத்தமாக அமையும். செதுக்கு என்பது மேலோட்டமாக செதுக்கிய சீவலத் தான் குறிப்பிடும். ஆனால், நுள், நுளம்பு, துணுக்கு எனும் சொல்லே உள்ளிருந்து எடுக்கும் பதக்கூற்றுக்குப் பொருத்தமான சொல். திசு ஆய்வு என்பது தமிழக மருத்துவர்கள் நடைமுறையில் பரவலாகப் பயன்படுத்தும் சொல். எக்சாமினேஷன் என்ற ஆங்கிலச் சொல்லுக்கான இணையான தமிழ்ச்சொல் ஆய்வு என்பதே. இந்த காரணங்களால் நான் இழைய ஆய்வு, நுள்ளாய்வு, திசு ஆய்வு என்ற சொல்லைக் கையாண்டேன். நீங்கள் சுட்டிய விவாதங்களைப் பார்த்தேன். அதில் ஏற்கும்படியான பொதுக்கருத்தேற்பு ஏதும் ஏற்பட்டதாக எனக்குப் புலப்படவில்லை. இந்த ஆய்வுக்கான பதக்கூறு எடுக்கும் மூன்று முறைகள் உள்வெட்டல், வெளிவெட்டல், ஊசிவழி உறிஞ்சல் வழிமுறைகளில் நடக்கிறது. இதற்கு மறுப்போ மாற்றோ இருந்தால் அறிவிக்கவும். மேலும் இதற்கான இலங்கை வழக்கு இருந்தால் தேர்வுக்கும் அதையும் கட்டுரையில் சுட்டவும் உதவும்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 07:30, 4 மே 2018 (UTC)

  • Biopsy is the removal for diagnostic study of a piece of tissue from a living body OR a specimen obtained from a biopsy இங்கே. இது ஒரு செயல்முறை அல்லது செயல்முறை மூலம் பெறப்படும் மாதிரி என்றே கொள்ளலாம். எனவே இதனை ஒரு ஆய்வு/ஓர்வு என்று பெயரிடல் பொருத்தமா தெரியவில்லை. Biopsy எடுக்கப்பட்ட பின்னர், அதைத் தொடர்ந்து செய்யப்படுவதே (மாதிரியை நுண்ணோக்கி ஆய்வுக்காகத் தயார்ப்படுத்தல், தொடர்ந்த நுண்ணோக்கி ஆய்வு, அதன் மூலம் நோயைக் கண்டறிதல்) ஆய்வு எனக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.
  • உள்வெட்டல், வெளிவெட்டல் என்பதுவும், உள் பகுதிகளை வெட்டல், வெளிப் பகுதிகளை வெட்டல் போன்ற தோற்றத்தைத் தருகிறது. உண்மையில் incisional biopsy என்பது ஒரு இழையத்தின் மாதிரியை மட்டும் வெட்டி எடுத்தலையும், excisional biopsy என்பது ஒரு குறிப்பிட்ட கட்டியையோ அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியையோ முழுமையாக வெட்டி எடுத்தலையுமே குறிக்கிறது. எனவே அவையும் புரியக்கூடிய பொருத்தமான சொற்களாகத் தெரியவில்லை. ஆனால் அவற்றிற்குச் சரியான பொருத்தமான சொல்லை என்னாலும் யோசித்துச் சொல்ல முடியவில்லை. :(
  • இலங்கை வழக்கு எனக்குத் தெரியவில்லை. கண்டறிய முடிந்தால் சொல்கிறேன். நன்றி. --கலை (பேச்சு) 15:41, 6 மே 2018 (UTC)
செந்தி தயவுசெய்து மேலுள்ள உரையாடலில் உங்கள் கருத்தைத் தர முடியுமா? --கலை (பேச்சு) 09:43, 7 மே 2018 (UTC)

பெயரிடல்[தொகு]

இழைய ஆய்வு எனும்போது இழையத்தை ஆய்வு செய்தல் எனும் கருத்தில் வேறேதாவது முறை உள்ளதா என்பதைக் கருதல் அவசியம் அல்லவா? https://en.wikipedia.org/wiki/Histopathology என்பதை வாசித்துப் பாருங்கள். Biopsy அல்லது autopsy இரண்டிலுமே இழையம் ஆய்வு செய்யப்படுகின்றது. மேலும் இழைய ஆய்வை macroscopic / microscopic எனவும் வகுக்கலாம். Biopsy ஒரு வகை இழைய ஆய்வு, ஆதலால் அதை இழைய ஆய்வு என அழைக்க முடியாது எனக் கருதுகின்றேன். உள்வெட்டல், வெளிவெட்டல் என்பனவும் ஏற்றுகொள்ளத்தக்கது அல்ல.

Biopsy[தொகு]

etymology:bios "உயிர்" + opsis "பார்வை/காணுதல்" (இதனைப் போன்றே autopsy). Biopsy = Removal and examination, usually microscopic, of tissue from the living body, performed to estabilish precise diagnosis. (Dorland's Illustrated Medial Dictionary - 31st Ed - Page 221)

Biopsyயில் சில வகைகள் உண்டு. (fine-needle) aspiration biopsy, brush biopsy, optical biopsy, incisional biopsy, excisional biopsy, core needle biopsy ஆகியன சில. இங்கு optical biopsy உண்மையான Biopsy எனும் செயலைத் தருவதில்லை. இங்கு ஊசிவழி உறிஞ்சல் என்பது needle aspiration biopsyக்குப் பொருந்துகின்றது. core needle biopsyயை விளங்கிக்கொள்ள இந்தப்படத்தைப் (http://thecancertextbook.com/wp-content/uploads/2017/02/FNAC-Core-Needle-Biopsy.002.jpeg) பாருங்கள். incisional biopsy, excisional biopsy => (https://basicmedicalkey.com/wp-content/uploads/2017/04/B9780323073585000310_f22-01-9780323073585.jpg)

An incisional biopsy or core biopsy samples a portion of the abnormal tissue without attempting to remove the entire lesion or tumor என்பதையா இவ்வாறு மொழி பெயர்த்து இருக்கின்றீர்கள்? "உள்ளுறிஞ்சிய இழைய ஆய்வு அல்லது உள்ளீட்டு இழைய ஆய்வு என்பது இயல்பற்ற பகுதியின் இழையங்களின் முழுப்பகுதியை வெட்டாமல் ஊசிவழி இழையங்கள் அல்லது உயிர்க்கலங்களின் பதக்கூறுமட்டும் எடுத்து செய்யப்படுகிறது."

உயிரகச்செதுக்கு, துணித்தாய்வு என்பன Biopsyயின் வெவ்வேறு வகைகளைக் குறிப்பிட உதவலாம். ஆனால் பொதுவான பெயராக எதைக் கருதுவது என்பதிலேயே அன்றும் இன்றும் சிக்கல். நுள்ளாய்வு: நுள்ளுதலில் இருந்து வந்ததா? நுள்ளல், கிள்ளுதல், கடித்தல் என்பனவற்றைத் தரும் இந்தச்சொல் ஒரு சிறிய பகுதி அகற்றப்படுவதைக் குறிக்கின்றதா? நுள் என்றால் உள்ளிருந்து எடுப்பது என்று அகராதியில் கொடுக்கப்பட்டுள்ளதா? ஆனால் நுள்ளுதல் + அகற்றல் இரண்டும் சேர்ந்தால் (எடுத்துக்காட்டாக உயிர் நுள்ளகற்றம்) பொருள்படலாம். ஆனால் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் "நுள்ளப்பட்டு அகற்றப்படுவதில்லை!"

என்னைப் பொறுத்தவரை Biopsy என்பதற்கு சரியான சொற்பதமாக எதுவுமே பொருந்தவில்லை, ஆனால் இவற்றுள் உயிரகச்செதுக்கு முதன்மையில் நிற்கின்றது என்பதுவே எனது தனிப்பட்ட கருத்து. அல்லது நுள்ளி அகற்றுதல் எனப்பொருள் தருமாறு ஏதாவது தோன்றினால் யாராவது கூறுங்கள்.

தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி[தொகு]

தமிழிணையக் கல்விக்கழக மருத்துவ அகராதியில் கொடுக்கப்பட்ட பெரும்பான்மையான சொற்கள் பொருத்தமற்றவை. ஆழ்ந்து ஆராயாமல் உயிரியல், மருத்துவச் சொல்லாக்கம் என்றோ நிகழ்ந்ததன் விளைவு. இவ்வகையில் அதனைத் தழுவி பல சொற்களைக் கொண்டுள்ள விக்சனரியின் சொற்களும் முரண்பாடான கருத்துகளைத் தரவல்லன. சில சந்தர்ப்பங்களில் வெவ்வேறு ஆங்கிலச் சொற்களுக்கு ஒரே தமிழ்க் கருத்து வழங்கப்படுவதைக் கண்ணுறலாம். முன்பு விக்சனரியில் செல்வா உட்பட சிலர் இவ்வகையான சொற்களை முனைப்போடு தேடித் திருத்தம் செய்து வந்தோம், ஆனால் அது நிறுத்தப்பட்டுவிட்டது. எடுத்துக்காட்டாக https://ta.wiktionary.org/wiki/hiatal_hernia சென்று பார்த்தால் "அதிக நார்ச்சத்து நீர்" என்றிருப்பதைப் பார்க்கலாம். இதனைப் போன்று பல சொற்கள் அங்கு தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளன.--சி.செந்தி (உரையாடுக) 03:07, 8 மே 2018 (UTC)

பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை! இழைய ஆய்வு என்பது ஏன் பொருத்தமான சொல் அல்ல என்பது தற்போது புரியும் என நினைக்கிறேன். எனவே தயவுசெய்து அந்தப் பெயரை மாற்றும்படி கேட்டுக் கொள்கின்றேன். அதேபோல் உள்வெட்டு, வெளிவெட்டு அன்பதும் ஏன் பொருந்தவில்லை என்று செந்தி அவர்கள் விளக்கமாகக் கூறியுள்ளார்.
செந்தி! வெவ்வேறு வகை biopsy உள்ளடக்கிப் பெயரிடுவதென்றால், உள்ளகப்பிரிப்பு எனலாமா? உயிரகச் செதுக்கு என்பதைவிட உயிரகப் பிரிப்பு என்பது பொருந்தி வருகிறதா? அதன் மூலம் Needle biopsy யும் உள்ளெடுக்கப்படுவதாகத் தோன்றுகிறதா?
--கலை (பேச்சு) 15:55, 14 மே 2018 (UTC)