பேச்சு:இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


உலகில் உள்ள எத்தனையோ நாடுகளில் "இலவச மதிய உணவுத் திட்டம்" அமுலில் உள்ளது, ஆகையால் தமிழ்நாட்டு திட்டத்தை தனியே "இலவச மதிய உணவுத் திட்டம்" என்பது சரியல்ல. அகவே பெயரை "இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடு" அல்லது "தமிழ்நாடு இலவச மதிய உணவுத் திட்டம்" என மாற்றவும். - சுரேன்

ஆம். 'இலவச மதிய உணவு திட்டம்' என்பது ஒரு பொதுவான பெயர் தான். பெயரை 'இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடு' என மாற்றி விடலாம். -ஸ்ரீநிவாசன் 07:37, 24 செப்டெம்பர் 2005 (UTC)

ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள கட்டுரை மதிய உணவுத்திட்டம் பற்றி இந்திய அளவில், உலக அளவில் விரிவான அறிமுகம் தருகிறது. அது போல் இக்கட்டுரையை மாற்றி எழுதலாம்.--ரவி (பேச்சு) 15:23, 25 செப்டெம்பர் 2005 (UTC)

  • இத்திட்டம் "மதிய உணவுத் திட்டம்"/ "சத்துணவுத் திட்டம்" என்றுதான் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒருபோதும் இது "இலவச" என்ற அடைமொழியுடன் பெயரிடப்படவில்லை. இலவசம் என்பது தற்கால கலாச்சார வழக்கு (!) என்பது எனது கருத்து.
  • இக்கட்டுரையுடன் இணைக்கப்பட்ட ஏனைய மொழிகள் கட்டுரைகளில் உள்ள ஆங்கிலக் கட்டுரை பொதுவாக உலகமெங்கும் நடைமுறையில் உள்ள lunch -மதிய உணவைப் பற்றியதாகத்தான் உள்ளதே தவிர எந்தவொரு திட்டத்தைப் பற்றியதாகவும் இல்லையே?. அதற்கும் தமிழகப் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்திற்கும் என்ன தொடர்பு என்று புரியவில்லை.--Booradleyp (பேச்சு) 16:23, 20 மே 2012 (UTC)
விக்கியன்பர்களின் கவனத்திற்கு, மதிய உணவுத் திட்டத்திற்கும், சத்துணவுத் திட்டத்திற்கும் இடையே குழப்பம் நிலவுகிறது என்று எண்ணுகிறேன். மதிய உணவுத் திட்டத்தினை அறிமுகம் செய்தவர் காமராசர். சத்துணவுத் தி்ட்டமாக மாற்றியவர் எம்.ஜி.ஆர். இந்தக் கட்டுரையில் \\அதற்கெல்லாம் காமராஜர் பதிலளித்தபின், முடிவில் சத்துணவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்றும்,\\ என்ற வரி வருகிறது. சத்துணவு திட்டமாக காமராசர் அறிமுகம் செய்யவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது தமிழகத்தில் மதிய உணவுத் திட்டம் செயல்பாட்டில் இல்லை. எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டமே "புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம்" என்ற பெயரில் செயல்படுகிறது. சத்துணவு ஆட்களை நியமிக்கும் போதும், நிதி ஒதுக்கும் போதும் இத்திட்டத்தின் பெயரிலேயே செயல்படுத்தப்படுகின்றன. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:51, 6 ஏப்ரல் 2013 (UTC)

ஆதாரங்கள் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை

இன்றும் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் என்ற பெயரிலேயே செயல்படுகிறது. அந்தத் திட்டத்தின் கீழ்தான், நிதி ஒதுக்கப்படுகிறது. 2009}2010}ம் நிதியாண்டில் அந்தத் தலைப்பின் கீழ் வரவு செலவு விவரங்கள் உள்ளன - மு.க.ஸ்டாலின்