பேச்சு:இலங்கை நாடாளுமன்றம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு[தொகு]

இலங்கையில் உத்தியோகபூர்வமாக நாடாளுமன்றம் என்ற சொல் பயன்படுத்தப்படுவதில்லை. இலங்கைப் பாராளுமன்றம் என்பதே சரி. பாராளுமன்ற உறுப்பினர் என்பதையும் பா.உ. என்றுதான் சுருக்கமாகக் கூறப்படுகிறது. நா.உ. என்பது புதிதாக ஒரு சிலர் திணிக்க முயல்வதாகும்.--பாஹிம் (பேச்சு) 16:39, 22 மார்ச் 2016 (UTC)

@Fahimrazick:, உங்களிடம் ஆதாரம் உண்டா? அதிகாரபூர்வமாக அது இலங்கை பாராளுமன்றம் என்றே பயன்படுத்துகிறது. இலங்கைப் பாராளுமன்றம் அல்ல. எனவே அதிகாரபூர்வத்தைக் கருதும் நீங்கள் இவ்வாறு அதிகாரபூர்வமில்லாத பெயரை எதனைக் கருதித் தேர்ந்தெடுத்தீர்கள்? நாடாளுமன்றம் என்ற சொல் இப்போது இலங்கை ஊடகங்களில் அனேகமாகப் புழக்கத்திற்கு வந்து விட்டது. அது மட்டுமல்ல. விக்கியில் பொதுவான பெயரே தலைப்பிடப்படுகிறது. parliament என்பதற்கு நாடாளுமன்றம் என்பதே சரியான கருத்தைத் தரும் சொல். பாராளுமன்றம் அல்ல. இலங்கை நாடாளுமன்றம் என்பதே சரியாக இருக்கும். மற்றும், உங்களுக்குத் தெரியுமோ தெரியாது, இலங்கை அரசு இப்போது அதிகாரபூர்வமாக இலங்கை சனாதிபதி என்ற பெயரைப் பயன்படுத்துகிறது. இது ஒரு நல்ல மாற்றம். இலங்கை நாடாளுமன்றம் எனத் தலைப்பை மாற்றுமாறு கோருகிறேன்.--Kanags \உரையாடுக 07:15, 24 மார்ச் 2016 (UTC)

எனது கூற்றுக்கு ஆதாரமிருக்கிறது. இதோ. இலங்கை என்ற சொல்லுடன் புணருமிடங்களில் பகர மெய்யெழுத்து சேர்ந்து வருவதைப் பார்க்கலாம். தற்காலத்தில் ஒரு சிலர் இலக்கணப் பிழையாக எழுதுவது சரியாகாது. அடுத்தது, parliament என்பதற்குச் சரியான கருத்தைத் தரும் சொல் நாடாளுமன்றம் என்று எப்படிக் கூறுகிறீர்கள்? European Parliament - ஐரோப்பியப் பாராளுமன்றம், தென்னாபிரிக்கா, கனடா போன்ற நாடுகளின் Provincial Parliament - மாகாணப் பாராளுமன்றம் என்பவற்றுக்கும் நாடாளுமன்றம் என்ற சொல் பொருந்துகிறதா? இத்தலைப்பை மாற்றக் கூடாது.--பாஹிம் (பேச்சு) 08:49, 24 மார்ச் 2016 (UTC)

அப்படியானால், பாராளுமன்றம் இலங்கைக்குப் பொருந்துகிறதா? ஆனால் நாடாளுமன்றம் பொருந்துகிறது. எப்படியிருப்பினும், இலங்கை நாடாளுமன்றத்தின் பெயர் மிக விரைவில் மாற்றப்படப் போகிறது. அப்போது நல்ல பெயர் ஒன்றை அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என நம்புகிறேன். விக்கியில் நாடாளுமன்றம் என (ஏனைய நாடுகளுக்கு) நாம் பாவிக்கும் பொதுப் பெயரைப் பாராளுமன்றம் என மாற்றப் பிரேரிக்கிறீர்களா? நாடாளுமன்றம் என்ற சொல்லை தமிழில் இருந்து முற்றாக நீக்கி விட நீங்கள் ஆதரவா? @Fahimrazick:--Kanags \உரையாடுக 05:01, 27 மார்ச் 2016 (UTC)

நாடாளுமன்றம் என்பது பொதுப் பெயரென்று நீங்கள் கூறிக் கொண்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்? நாடாளுமன்றம் என்ற சொல்லை தமிழில் இருந்து முற்றாக நீக்கி விட நீங்கள் ஆதரவா? என்று கேட்கும் உங்களிடம் நானும் பாராளுமன்றம் என்ற சொல்லைப் பற்றி அதே வினாவைத் தொடுக்க முடியும். ஒவ்வொரு நாடும் அல்லது அவற்றின் கூட்டமும் அல்லது அவற்றின் துணைப் பிரிவும் அதனதன் தேவைக்கும் விருப்பத்துக்குமேற்ப தத்தமது ஆட்சிக் கழகங்களின் பெயர்களை வைத்துக் கொள்ளலாம். இலங்கையில் பாராளுமன்றம் என்பதே அரசியல் யாப்பில் குறிப்பிடப்படும் உத்தியோகபூர்வப் பெயர். அதனை மாற்றும் அதிகாரத்தை உங்களுக்கு யார் தந்தது? அத்துடன் Pan-African Parliament, Central American Parliament, Latin American Parliament, European Parliament போன்ற உயர் தேசிய ஆட்சிக் கழகங்களுக்கும் நாடாளுமன்றம் என்ற சொல் கிஞ்சித்தும் பொருத்தமற்றதே.--பாஹிம் (பேச்சு) 06:14, 27 மார்ச் 2016 (UTC)