பேச்சு:இலங்கை தேசிய வாக்கெடுப்பு, 1982

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


தலைப்பில் இலங்கை தேசிய வாக்கெடுப்பு, 1982 எனப்போடப்பட்டுள்ளது. இத்தலைப்பு பொருத்தமற்றதாகவே எனக்குப்படுகின்றது. இலங்கை தேசிய மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு, 1982 அல்லது இலங்கை மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு, 1982 என இடம் பெற்றல் சிறப்பாகவே இருக்கும். தேசியம் எனும்போது இலங்கை என்பது மறை சொல்லாக வருமல்லவா? இத்தேர்தல் ஆங்கிலத்தில் referendum என அழைக்கப்படுகின்றது. தமிழில் மக்கள் தீர்ப்பு என்ற வார்த்தைப் பதமே கூடுதலாக பயன்படுத்தப்படுகின்றது. இந்திய புத்தகங்களில் மக்கள் தீர்ப்பு என்பதை ஒப்பங்கோடல் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இலங்கை பல்கலைக்கழகம் மற்றும் க.பொ.த. உயர்தர அரசறிவியல் வினாப்பத்திரங்களில் மக்கள் தீர்ப்பு (ஒப்பங்கோடல்) எனும் வார்த்தையே பயன்படுத்தப்படுகின்றது. எனவே, இதனை ஆலோசித்து தலைப்பை மாற்றுவது உசிதமாக இருக்கும் என கருதுகின்றேன். --P.M.Puniyameen 04:07, 25 சனவரி 2011 (UTC)[பதிலளி]

புன்னியாமீன், உங்கள் கட்டுரையின் முதற் பகுதி இலங்கையில் மக்கள் தீர்ப்பு என்பதைப் பற்றியும், பின்னர் குறிப்பாக முதலாவது மக்கள் தீர்ப்பு என்பதைப் பற்றியும் குறிப்பிடுகிறது. எனவே இக்கட்டுரையை இரண்டாகப் பிரிக்க வேண்டுகிறேன். ஒன்று Referendum in Sri Lanka - இலங்கையில் மக்கள் தீர்ப்பு என்பது பற்றியும் இரண்டாவது கட்டுரை 1982 வாக்கெடுப்பு பற்றியும் இருக்கலாம். எனவே இலங்கையில் மக்கள் தீர்ப்பு என்ற கட்டுரையை ஆரம்பித்து அதில் இங்குள்ள முதல் பகுதியைச் சேருங்கள். முடிந்தால் மக்கள் தீர்ப்பு (en:referendum) என்ற தலைப்பில் ஒரு பொதுவான கட்டுரையும் எழுதலாம்.--Kanags \உரையாடுக 14:45, 25 சனவரி 2011 (UTC)[பதிலளி]