பேச்சு:இலங்கை சட்டவாக்கப் பேரவை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சட்டவாக்கக் கழகம் என்பது தவறு. சட்டவாக்க சபை என்றிருக்க வேண்டும். அதற்கு வழிமாற்றுத் தந்துள்ளேன். பொதுவாக சட்டசபை என்றே அழைக்கப்பட்டது.--Kanags \உரையாடுக 11:02, 26 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

இலங்கை சட்டசபை என்பது பிழை. இலங்கைப் பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அதனை சட்டவாக்கப் பேரவை என்று குறிப்பிடுகிறது. சட்டசபை என்று அழைக்கும் வழக்கம் இலங்கையில் இருக்கவில்லை.--பாஹிம் 13:55, 26 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

இலங்கை நாடாளுமன்ற இணையத்தளம் எப்போது வந்தது? இப்போதுள்ளவர்கள் அதனை எவ்வாறும் மொழிபெயர்க்கலாம். சட்டசபை இருந்தபோது அதனை எமது மக்கள் எவ்வாறு அழைத்தனர்?--Kanags \உரையாடுக 14:10, 26 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
சட்டவாக்கக் கழகம் எனப் பாடப் புத்தகங்களில் இருந்தது என முன்னர் தெரிவித்திருந்தீர்கள்.--Kanags \உரையாடுக 14:14, 26 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

சபை என்பது பிறமொழிச்சொல்லாக இருப்பதால் பேரவை என்ற தமிழாக்கத்தை ஏற்றுக் கொள்ளலாம். ஆனாலும், நாடாளுமன்றம் என்பதை ஏன் மாற்றினீர்கள்? பாராளுமன்றம் இலங்கையில் நடைமுறையில் இருந்தாலும், தமிழ்முறைப்படி நாடாளுமன்றம் என இருப்பதே சிறந்தது. இலங்கையில் நாடாளுமன்றம் எனவும் பலர் எழுதுகின்றனர். இவ்வாறான மாற்றங்களைச் செய்யும் முன்னர் பேச்சுப் பக்கத்தில் உரையாடிவிட்டு மாற்றுவதே அழகு.--Kanags \உரையாடுக 14:21, 26 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

பழைய அமைப்புகளின் பெயரிடலுக்கு அவை வழக்கில் இருந்த போது வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ பெயர்களைப் பயன்படுத்தவது நல்லது. இது போன்ற சந்தர்ப்பங்களில் பின் வரும் மொழிபெயர்ப்பாளர்கள் பெயரினை மாற்றலாம். ஆனால் அப்பெயர் பொதுப்பயன்பாட்டில் அதிகமாக வழங்கப்படாதென்பதால் முன்னர் பயன்படுத்திய பெயரினை பயன்படுத்தலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 14:48, 26 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

சட்டசபை என இலங்கையிற் பயன்படுத்தப்பட்டமைக்கான ஆதாரம் எங்குள்ளது? பாடநூல்களில் சட்டவாக்கக் கழகம் என்றே பயின்றிருக்கிறேன். அடுத்தது, இலங்கை அரசு எப்போதும் பாராளுமன்றம் என்றே பயன்படுத்துகிறது. இலங்கை அரசின் உத்தியோகபூர்வ ஆவணங்களில் எங்காவது நாடாளுமன்றம் என்று பயன்படுத்தப்பட்டிருக்கிறதா?--பாஹிம் 17:21, 26 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]