பேச்சு:இராவுத்தர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிழையான செய்திகள்[தொகு]

சிவபெருமான் இராவுத்தர் கோலத்தில் வந்ததார் எனவும், பல கோயில்களில் இராவுத்தர் சிலைகளே குதிரை வீரன் சிலைகளாக இருக்கிறது என்பதைப் போன்ற அபத்தமான பொய்யுரைகள் இக்கட்டுரையில் மலிந்து கிடக்கின்றன. தக்க நடவெடிக்கை எடுக்கப்பெறாவிட்டால் விக்கிப்பீடியாவின் நம்பகத்தன்மை மீது பொது மக்களுக்கு ஐயம் ஏற்படும் என்பதால் நீக்கப்பரிந்துரைக்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:25, 17 செப்டம்பர் 2013 (UTC)

\\முஸ்லிம் குதிரை வீரர்கள் தங்குவதற்கு ஒதுக்கப்பட்ட பகுதிகள்தான் முதலில் 'பாளையம்' என்று அழைக்கப்பட்டது.\\ என்பதும் தவறு பாளையம் என்பதற்கான பொருள் வேறு (படை வீரர்கள் தங்கிச்செல்லும் இடம்? அல்லது தங்கும் இடம்?)--குறும்பன் (பேச்சு) 13:27, 17 செப்டம்பர் 2013 (UTC)
வலைப்பூவில் ஒருவர் ஏதேதோ எழுதியதை அப்படியே வெட்டி ஒட்டிவிட்டார்கள். தமிழ்நாடு முழுவதும் பாளையம் என்ற பெயரில் ஊர்கள் இருக்கின்றன. அனைத்து இடங்களிலுமா இசுலாமியர்கள் தங்கினார்கள் என்று யோசனை செய்திருந்தால் அந்த கட்டுரையை எழுதியவர் திருத்திக் கொண்டிருப்பார். அவரிடமும் இத்தவறுகளை முன்வைத்துள்ளேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:47, 18 செப்டம்பர் 2013 (UTC)

பதிப்புரிமையுள்ள உள்ளடக்கம்[தொகு]

[1] என்ற வலைப்பூவிலிருந்து அப்படியே படியெடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:10, 18 செப்டம்பர் 2013 (UTC)

இக்கட்டுரை முன்பே உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இக்கட்டுரை நீக்கம் செய்ய வேண்டியதில்லை. எனவே நீக்கல் வார்ப்புரு நீக்கப்பட்டுள்ளது. தாங்கள் குறிப்பிடும் பதிப்புரிமையுள்ள பகுதி இடைப்பட்ட காலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தாங்கள் குறிப்பிடும் இடையில் சேர்க்கப்பட்ட பகுதி மட்டும் இக்கட்டுரையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 12:38, 18 செப்டம்பர் 2013 (UTC)
தவறான புரிதல்களோடு விக்கிப்பீடியாவில் இருந்து எடுக்கப்பட்டது என்று சில வலைப்பூக்களில் இந்தக் கட்டுரையை பகிர்ந்துள்ளார்கள். அதன் காரணமாகவே நீக்கல் கோரிக்கை வைத்தேன். ஏற்றதொரு நடவெடிக்கை எடுத்தமைக்கு மிக்க நன்றி தேனியாரே.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:44, 18 செப்டம்பர் 2013 (UTC)

Reference adding problems[தொகு]

தே.S.M.Kamal யின் " முஸ்லிம்களும் தமிழகமும் " 1990 வெளிவந்தது அதை மேற்கோள் காட்ட வேண்டும் . Sultan shah Arsalan (பேச்சு) 21:45, 9 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

Sry Dr.S.M.Kamal Sultan shah Arsalan (பேச்சு) 21:46, 9 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இராவுத்தர்&oldid=3018641" இலிருந்து மீள்விக்கப்பட்டது