பேச்சு:இராகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது மிகவும் வடமொழி மோகத்துடன், நூற்றுக்கணக்கான உண்மைகளை மறைத்து, ஒருதலையாக எழுதப்பட்டுள்ளது. இசை பற்றி நான் பார்த்த எல்லா கட்டுரைகளும் இவ்வாறே உள்ளன. பண்ணிலிருந்து எழுந்ததுதான் இராகம். கருநாடக இசை கடந்த 100 ஆண்டுகளில் தமிழிசையில் இருந்து ஓரளவு திர்க்கப்பட்ட இசை, எனினும் ~80% தமிழிசை தான். ஏறத்தாழ எல்லா அடிப்படைகளும் தமிழிசையில் இருந்து எழுந்தவை. ஸங்கீத ரத்தினாகரம், மற்றும் வேங்கடமஹியின் (மேளகர்தா இராகத்தின் ஆசிரியர்) படைப்பு எல்லாம் மிகப் பிற்காலத்தது (சில குற்றமுடையதும்). தேவார இசையில் 18000க்கும் அதிகமான பாடல்கள் பண், தாளத்துடன் அமைக்கப்பட்டு, சுமார் 1000 ஆண்டுகளாக வழி வழியாய் வந்துள்ளன. இக்கட்டுரையை மாற்றிஅமைத்தல் மிகவும் தேவையானது.--C.R.Selvakumar 03:19, 18 ஜூன் 2006 (UTC)செல்வா

செல்வா, நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல நாங்கள் பொதுவாகக் காணும் இசை பற்றிய கட்டுரைகள் அனைத்துமே இந்திய இசை முழுமைக்குமே வேத, சமஸ்கிருத அடிப்படையையே பேசி வருகின்றன. அது மட்டுமின்றி பல பத்தாண்டுகளாகவே (நூற்றண்டுகளாகக் கூட இருக்கலாம்) இசைக் கல்விக்கான பாடத்திட்டங்களிலும் இதே கருத்தே வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இந்தச் சூழ்நிலையில் தற்கால இசைக் கலைஞர்களுக்கே தமிழ் இசையைப் பற்றித் தெரிந்திருக்கும் என்று சொல்வதற்கில்லை. தமிழிசை பற்றிச் செய்யப்பட்ட மிகச்சில ஆய்வுகள்கூட பலரின் பார்வைக்குக் கிடைக்கக்கூடிய வசதிகள் கிடையாது. இதனால் இன்று இது பற்றிக் கட்டுரை எழுதுபவர்கள் தாங்கள் எழுதுவது பக்கச் சார்பானது என்று தெரியாமலேயே எழுதுகிறார்கள் என்பது எனது கருத்து. எனவே இது பற்றிப் போதிய அறிவு உள் ளவர்கள் மேற்படி கருத்துக்களுக்கு மாற்றான கருத்துக்களையும் விக்கிபீடியாவில் சேர்க்கவேண்டும். தமிழிசை, தமிழ் மக்கள் இசை, இன்றைய இந்திய இசையில் தமிழர் இசைப் பண்பாட்டுக் கூறுகள் போன்ற தலைப்புக்களில் கட்டுரைகளை எழுதலாம். இவற்றுக்கு இந்த இராகம் கட்டுரையில் இணைப்புக் கொடுக்கலாம். அத்துடன் இக் கட்டுரைக்குள்ளேயே மாற்றுக் கருத்துக்கள் இருப்பது பற்றிக் குறிப்பிடலாம். இக் கட்டுரையை மாற்றி எழுதவேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில், சரியோ தவறோ, இதுவும் தற்போது பலராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற ஒரு கருத்தே. விக்கிபீடியாவில் இது போன்ற கருத்துக்களுக்கும் இடம் உண்டு.

இசைத் துறையில் மட்டுமன்றி, சமயம், கட்டிடக்கலை, சிற்பம் போன்ற இன்னோரன்ன பல மரபுவழித் துறைகளில் இந்தச் சிக்கல் இருக்கத்தான் செய்கின்றது. இதற்குக் காரணம் ஒர் காலத்தில் சமஸ்கிருதம் தமிழ்நாட்டிலும் கற்றோர் மொழியாகக் கோலோச்சியதுதான். இந்தியக் கட்டிடக்கலை பற்றிய முன்னணி நூல்களான மயமதமும், மானசாரமும் தமிழ்நாட்டில் எழுதப்பட்டவைதான். அவற்றில் சொல்லப்பட்டவை தொடர்பான எடுத்துக்காட்டுகள் பலவும் தமிழ் நாட்டில் உள்ளன. ஆனாலும் இவை சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதால் தொடர்பான பல சொற்களும் வடமொழியாகவே காணப்படுகின்றன என்பதுடன் இதனை அடியொற்றி முழுக்கலைக்குமே அடிப்படை வேதமே என்று சொல்லிவிடுகிறார்கள். முக்கியமான சிக்கல் என்னவென்றால் இத் துறைகளிலே தமிழ் மரபின் பங்கு பற்றிய முறையான ஆய்வுகள் கிடையாது. முன்னர் வடமொழியினதும் அதன் கருத்துருக்களினதும் திணிப்புக்களுக்கெதிராக உயிரை மதியாமல் போராடிய பலரே இன்று ஆங்கிலத்தின் ஆதிக்கத்துக்குச் செங்கம்பளம் விரிப்பதைப் பார்க்கிறோம். இந்தியக் கலாச்சாரத்தில் தமிழரின் பங்களிப்புக்கான உரிய மதிப்பைப் பெற்றுக்கொள்வதற்கும் அதனைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்கும் இது பற்றி ஆர்வம்கொண்ட தமிழர், நியாயமான அளவுக்கும்மேல் பலமடங்கு அதிகமாக உழைக்கவேண்டிய நிலைதான் இன்று உள்ளது. Mayooranathan 04:58, 4 ஆகஸ்ட் 2006 (UTC)

இசைத் துறையில் வெளிவரும் எழுத்துக்கள் முழுப்ப்பூசணிக்காயை மறைப்பதாகும். இக்கட்டுரை பெரிதும் மாற்றப்பட வேண்டிய ஒன்று. நான் தக்க உறுதிகோள்களுடன் மாற்றி எழுதுகிறேன், குற்றங்கள் இருப்பின் எடுத்துரைக்கவும் நான் திருத்திக்கொள்ளுகிறேன். நானறிய உலகிலே எந்த மொழியிலும் 7-9 ஆம் நூறாண்டுகளில் தொடங்கி 9295 பாடல்கள் பண் அமைத்து (அதற்கு இணையாக ராகம், melody என்று எதுவும் கொள்ளலாம்) தொடர்ந்து இன்றுவரை பாடப்பட்டது கிடையாது. அதுவும் பொருள் இளைத்த பாடல்கள் அல்ல, மெய்ப்பொருள் செறிந்தது. இந்த 9295 பாடல்கள் என்பது தேவாரம் மட்டுமே, அரையர்கள் பாடும் நாலாயிர திவிய பிரபந்தம் முதலியனவும் உள்ளன. இவை எல்லாம் 10 நூற்றாண்டுகளுக்கு முன்னர் உள்ள இசை வளர்ச்சி. யாரும் மறுக்க முடியாதது. அதுமட்டுமல்ல 2500 ஆண்டுகளுக்கு மேலாக முறைப்படி சுரங்களைக் கொண்டு ஆய்வு செய்து வந்திருக்கிறார்கள். கடந்த 70-80 ஆண்டுகளில் ஏற்பட்ட பின்னடைவிற்காக, ஒருதலை சார்பு போக்குகளுக்காக, உண்மைகளை மறைத்தல் தவறு. நாகசுர இசைப் பண்பாட்டை ஏறத்தாழ முற்றிலுமாக அழித்துவிட்டார்கள் (இன்று கருநாடக இசை உலகில் உலா வரும் மிகப்பெரும்பாலான சங்கதிகள் எல்லாம் நாகசுர இசைக்கலைஞர்களிடம் இருந்து கற்றதே. மூலத்தை அழிப்பது ஒரு உத்தி). இதில் சமசுகிருதம் தமிழ் என்பது அல்ல, இசை உண்மைகளை, இசை வரலாற்று உண்மைகளை முற்றுமாய் மறைப்பதாகும். மேளகர்தா ராகம் 72லும் எராளமான தில்லு முல்லுகள் உண்டு. அவைகளை நான் அறிவேன், வலுவாக குறிப்பிட்டும் எழுத நினைத்துள்ளேன். நேரமின்மையினால் காலம் தாழ்கின்றது. இவை தமிழர்களின் பெருமை மட்டுமல்ல, உலகத்தவர் எல்லோரும் பெருமைப்பட வேண்டிய பெரும் சாதனைகள், மெய்ப்புகழ் ஈட்டங்கள். மேலும் ஒன்று. சமசுகிருதம் வளர்ந்ததும், அம்மொழியில் உள்ள மிகப்பெரும் ஆக்கங்களில் மிகப்பெரும்பாலனவையும் தமிழகத்தில் நிகழ்ந்ததே. தமிழர்களாலேயே ஆக்கப்பட்டன. இவையெல்லாம் எழுதப் புகின் மிக வளர்ந்துவிடும். நான் சமசுகிருத்ததை விரும்புபவன், வெறுப்பவன் அல்ல, ஆனால் நேர்மையில்லா வழிகளில் சமசுகிருதச் சார்போ, தமிழ்ச்சார்போ இருப்பதை விரும்பாதவன். சமசுகிருத சொற்களையும் சொல்ஆட்சிகளையும் தமிழை விலக்கி தமிழில் ஆளுவது மிகத்தவறு என நினைப்பவன். தமிழின் இயல்பும், இனிமையும், பொருட்செறிவும் பன்முக வளர்ச்சியும் மிகவும் பாழ்படுகின்றதென்று நினைப்பவன். இக்கருத்துக்களால் சமசுகிருதத்தை விரும்பாதவன் என நினைக்காதீர்கள். --C.R.Selvakumar 05:38, 4 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா

கலந்துரையாடலின் மையப் பொருளிலிருந்து விலகிய கருத்து. வடமொழி எனும்போது சமஸ்கிருதம் என்று மட்டும் கொள்ளுதல் தவறு. சமஸ்கிருதத்தைவிடக் கூடுதல் பயன்படுத்துனர்களைக் கொண்டிருந்த பிராக்ருத மொழிகளே பெரிய அளாவு தாக்கம் ஏற்படுத்தின (புத்த, சமண மதப் பரவலினால்). -- Sundar \பேச்சு 05:44, 4 ஆகஸ்ட் 2006 (UTC)
செல்வா தமிழர் இசையைப் பற்றி கட்டுரை எழுத முடிவெடுத்துள்ளார். நானும், கிப்பன் பண்டம், எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு, 1967 ஆகிய இரு கட்டுரைகளிலும் சில தகவல்களை சேர்த்து முடித்த பின்னர் தமிழர் நாட்டுப் பாடலைப் பற்றி ஒரு கட்டுரையைத் துவக்குகிறேன். -- Sundar \பேச்சு 05:58, 4 ஆகஸ்ட் 2006 (UTC)

இராகம் என்பது பற்றி இத்தனை பேசுகிறார்கள். 20-30 புத்தகங்கள் சமசுகிருத்தில் உள்ளன. பரத முனியின் நாட்டிய சாஸ்திரத்தில் இருந்து (நாரதீய சிக்ஷா என்பது அதற்கும் சற்று முந்தியது), 13 ஆம் நூற்றாண்டில் வெளியான சங்கீத ரத்னாகரமும் அதன் பின்னர் 14-15 நூற்றாண்டுகள் வரை இன்னும் பல நூல்களும் சமசுகிருதத்தில் வெளியாகியுள்ளன. அவற்றில் இராகத்தோடு அமைந்த பாடல்கள் எத்தனை என்று கேட்டுப்பாருங்கள். சமசுகிருதத்தில் தாலாட்டு ஒப்பாரி எல்லாம் உண்டா என்று கேட்டுப்பாருங்கள். ஏன் ஒரு சில தாலாட்டுகூட இல்லை ? சமசுகிருத நூல்களில் அலசிய ராகம், இசை பற்றியதெல்லாம் பெரும்பாலும் தமிழ்ப் பாணர்கள் பாடியதும், தமிழ் இசைவாணர்கள், வல்லுனர்கள் எழுப்பிய இசையைக் கேட்டும், கற்றும் தாங்கள் உணர மொழிபெயர்த்து எழுதிக்கொண்டதும்தான். அப்படி இல்லை எனில் ஏன் ஒரு 100-200 பாட்டுகள் கூட இராகத்துடன் சமசுகிருததில் இல்லை (19ஆம் நூற்றாண்டு வரை)? வங்காளி ஜயதேவர் தமிழ் நாட்டுக்கு வந்து ஆழ்வார்கள் பாடல்களைப்பார்த்து, தமிழ் நாட்டு பத்தி (பக்தி) எழுச்சியைப் பார்த்து அவர் அறிந்தவாறு ஆக்கியது (12 ஆம் நூற்றாண்டில்). இதுவும் உறுதிகொள்ளும் வழியாக எவ்விசை வடிவில் இருந்ததென கூறமுடையாது. தமிழ் இசை வரலாற்றுக்கு இணையான முந்திய புகழ்வரலாறு உலகிலே எங்குமே நானறிய கிடையாது. என் கருத்து தவறு எனில் திருத்திக் கொள்ள அணியமாய் இருக்கிறேன். (இசையை ஆய்வு செய்து முறைகள் வகுத்து வளர்த்த வரலாறு). --C.R.Selvakumar 06:01, 4 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா

செல்வாவின் கருத்துடன் ஒத்துப் போகிறேன். இராகங்களுக்கு ஆதாரமாகவும் அடிப்படையாகவும் உள்ளவை பண்களே. இந்தக் கட்டுரை முழுவதுமாகத் திருப்பி (திருத்தி) எழுதப்பட வேண்டும்.--Kanags 10:18, 6 ஆகஸ்ட் 2006 (UTC)

வெளியிணைப்பு நீக்கம்; மீண்டும் சேர்த்திருக்கின்றேன்[தொகு]

வாசு நீங்கள் நீக்கியிருந்த வெளியிணைப்பை மீண்டும் சேர்த்திருக்கின்றேன். அது தமிழில் உள்ள பயனுடைய வெளி இணைப்பு. அவர் ('சீவா) இசை பற்றிய துறைகளில் இங்கு விக்கியில் பங்களித்தவர் மட்டுமல்லாமல் பதிவுலகிலும் பங்களிக்கிறார். நீங்கள் அந்த வெளியிணைப்பை நீக்கியதற்குக் காரணம் ஏதும் தராததால், ஏன் நீக்கினீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை. அதனை நீங்கள் 'சீவா அவர் தன்பக்கத்து விளம்பரமாக தந்திருக்கலாம் என நினைத்திருக்கலாமோ என்று எண்ணுகிறேன். பயனுடைய வெளியிணைப்பு என்பதாலேயே மீண்டும் இணைத்துள்ளேன். தவறாக அருள்கூர்ந்து நினைக்க வேண்டாம். நன்றி.--செல்வா 15:03, 6 ஜனவரி 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இராகம்&oldid=324966" இலிருந்து மீள்விக்கப்பட்டது